மேதினத்தைக் கொண்டாடிறதையும் விட மே 18 ஐக் கொண்டாடிறதுதான் இப்ப விசேசமாயிருக்கு.
'எதில (அரசியல்) ஆதாயம் இருக்கோ அதிலதானே நாட்டமும் இருக்கும்' எண்டது நூறு வீதம் உண்மை எண்டதை இந்த மே18 க்கொண்டாட்ட அறிவிப்பு அச்சாவாகச் சொல்லுது.
சும்மா போர்க்கோலம் பூண்டிருக்கிற மாதிரி, விடேதே பிடி எண்ட கணக்காக மே 18 துக்கநாளை அனுஷ்டிக்க வேணும் எண்டு அறிவிப்புக்கு மேல அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கு.
ரண்டு நாளைக்கு இந்தப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தமாதிரி 'உனக்கு நான் - எனக்கு நீ' எண்டு அரசாங்கமும் தமிழ்த்தேசியவாதிகளும் ஒரு ட்ராமா (நாடகம்) போடுகினம்.
மே 18 ஐ முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்படும் எண்டு அரசாங்கத்தரப்பு – படைத்தரப்பு அறிவிச்சிருக்கெண்டு ஒரு செய்தி வந்தது.
இது சும்மா கிடந்தவனையும் தட்டியெழுப்பி விட்டமாதிரியான வேலை.
அவனவன் மே 18 ஐய்ப்பற்றிய நினைப்பே இல்லாமலிருக்க - இதை வலுக்கட்டாயமாக நினைக்க வைச்சது இந்த அறிவிப்பு.
சரி அப்பிடித்தானிருந்தாலும் ஒரு நாலு பெடியள் ஒரு மூலையுக்குள்ள விளக்கேத்திறதோ ரண்டு படத்தை ஒட்டிறதோ எண்டு பெரிசா மற்றவையின்ரை கண்ணுக்குள்ளயும் கருத்துக்குள்ளயும் படாமல் ஏதோ செய்திருப்பாங்கள்.
அதோட கதை முடிஞ்சிருக்கும். இதுக்கு மேல ஒண்டும் நடந்திராது.
ஆனால், இப்ப நடந்தது என்னெண்டால், அவசர அவசரசமாகப் பல்கலைக்கழகத்தை மூடப்போக - இந்தச் செய்திக்காகவே காத்திருந்த 'உனக்கு நான் - எனக்கு நீ' கொம்பனிகள் (தமிழ் இணையப் புரட்சியாளர்களும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைத் தேசியவாதிகளும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும்) இதையே தூக்கிக் கொண்டு தெருவில் இறங்கிக் கத்தத் தொடங்கி விட்டார்கள்.
இதைத்தானே எதிர்பார்த்தேன் பாலகுமாரா! எண்ட கணக்கில் அரச தரப்பும் கொடுப்புக்குள் சிரிச்சுக்கொண்டிருக்கு.
இப்ப மே 18 காற்றில கொடிகட்டிப்பறக்குது. பேப்பர்களிலயும் இணையங்களிலயும் தலைப்புச் செய்தி. அரசியலில் முக்கிய பேசுபொருள்.
பாவம் - பரிதாபம் எண்ட மாதிரி சனங்கள்தான் பேந்தப் பேந்த முழிசிக்கொண்டிருக்குதுகள்.
இந்த மே 18 நடக்காமல் தடுத்திருக்க வேண்டியவை அப்ப தங்கட ரண்டு கைகளையும் ரண்டு காலுக்குள்ளையும் வைச்சுக் கொண்டிருந்தவை.
இவ்வளவு சனங்களும் சாகேக்க அதைத் தடுக்கேலாமல் - அதுக்காக ஒரு நாள்கூட உண்ணாவிரதமிருக்காதவை, தங்கட பதவியைத் துறக்கமாட்டம் எண்டவை எல்லாம் இப்ப மே 18 க்கு உருகி வழியினம்.
இதுதான் இவையின்ரை வேலையே.
இவை 'கொண்டவனுக்கும் அஞ்சலி - கொல்லப்பட்டவனுக்கும் அஞ்சலி' எண்டு செய்யிற ஆட்களெல்லோ.
இவைக்கு வெட்கம், மானம், ரோசம், மனச்சாட்சி, நீதி, நியாயம் எண்ட ஒரு மசிரும் கிடையாது.
இப்ப மே 18 ம் இதில ஒண்டு. சனங்கள் சாகுமட்டும் பார்த்துக்கொண்டிருந்திட்டு, செத்த சனங்களை வைச்சே அசல் யாவாரம் நடத்திறதுக்கு ஆலாய்ப்பறக்கிறாங்கள்.
சனங்கள் சாகவேணும். சனங்கள் அலையவேணும். அதை வைச்சு நல்ல யாவாரம் பண்ணலாம் எண்டது மட்டுமே இவங்களின்ரை யோசினை.
இதைத்தான் சொல்லிறது சவப்பெட்டி அரசியல் எண்டு.
இந்தச் சவப்பெட்டி அரசியலுக்குத்தான் தமிழாக்களிட்ட நல்ல மதிப்பும் மரியாதையும்.
இந்தச் சவப்பெட்டி அரசியல்தான் இப்ப மே தினத்தையும் விட மே 18 ஐ எழுப்பிவிட்டிருக்கு.
இந்த யுத்தத்தில செத்தவர்களின் குடும்பங்களையோ இந்த யுத்தத்தில காயப்பட்டவையளையோ திரும்பியும் பாக்காதவன் எல்லாம் மே 18 க்காக குத்தி முறியிறாங்களப்பா...
தாங்க முடியல்லையப்பு தாங்க முடியல்ல...
இந்த மாதிரி ஒரு நடிப்புச் சுதேசிகளைக் கண்டுகொண்டே – சகிச்சுக்கொண்டே இன்னும் நாங்கள் உயிரோட வாழவேண்டியிருக்கு..
தாங்க முடியல்லையப்பு தாங்க முடியல்ல...
வேணுமெண்டால், இந்த மே 18 இல ஒரு தீர்மானத்தை எடுக்கட்டும்.
நடந்த போரால பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் நியாயமான உதவிகளை நிச்சயமாக வழங்குகிறோம். அதுக்கான திட்டத்தை இப்பவே ஆரம்பிக்கிறம். இதுதான் அந்த நடவடிக்கை எண்டு...
இதுக்கு நான் பந்தயம் கட்டுறன். ஆராவது உண்மையானவன் எண்டால் பகிரங்காக இதைப்பற்றி ஒரு வார்த்தை சனத்தைப் பார்த்துச் சொல்லட்டும்...
-வடபுலத்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக