எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுவது இயற்கையே, ஆனால் அதில் எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் பிரத்தியேகமான உண்மை கிடையாது, அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டதாகவும் ஒன்றைவிட மற்றது முக்கியமானதாகவும் உள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த 2014 ஜெனீவாக்கு பிந்தைய தினங்களில் உமியிலிருந்து அரிசியை பிரிப்பது போல ஒரு சிந்தனையான (தர்க்க ரீதியாக அல்ல) விவாதத்துக்குள் நுழைந்து சில முன்னோக்கமுள்ள முதிர்ச்சியினை பெறுவதற்கு நேரம் பார்த்து கொழும்பு டெலிகிராப் வாசகர்களை அழைக்கிறது.
பெரும்பாலும் தெற்கிலிருந்து அடிக்கடி அறிவிக்கப்படுவது ஒரு தலைமைக்கான உறுதி (நிதி, சளைக்காத அரசியல் ஆதரவு, இராணுவ மூலோபாயம், மற்றும் விட்டுக்கொடுப்புக்கான வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்த்தல்)பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதுதான் என்று, ஆனால் இதன் ஒரு பகுதி மட்டுமே உண்மை.
தமிழ் தாராண்மை வாதிகளிடத்தில் பிரபலமான ஒரு இரண்டாவது வாதம், சிங்கள பொதுமக்கள் மற்றும் தமிழ் தலைவர்களுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை ஆதரித்ததால,; எல்.ரீ.ரீ.ஈ அதன் தார்மீக உயர் அடித்தளத்தை இழந்துவிட்டது, மற்றும் உள்ளக ரீதியாக அது ஒருவரை ஒருவர் அழிக்கும் தன்னினத்தையே தின்னும் படுகுழியில் அமிழ்ந்துள்ளது என்பதாகும்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்துள்ள வரலாற்றாசிரியர்களால் நேசிக்கப்படும் மூன்றாவது கோட்பாடு, 75 விகிதமான சிங்களவர்களுக்க எதிரான 13 விகிதமான தமிழர்கள் நடத்தும் போர் அதுவும் அரசாங்கம் அல்லாத ஒன்று அதிகாரமுள்ள அரசாங்கத்துடன் நடத்தும் போர் இயல்பாகவே வெற்றி கொள்ள முடியாத ஒன்று.
புலிகள் மீது பச்சாத்தாபம் கொண்ட தமிழர்களால் முன்வைக்கப்படும் நான்காவது விளக்கம் இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் என்பன எல்.ரீ.ரீ.ஈ யை கைவிட்டு விட்டன என்பது. அமெரிக்கா மற்றும் இந்தியா என்பன கொழும்புக்கு இராணுவ புலனாய்வு உதவிகளைக்கூட வழங்கின என்று அவர்கள் புலம்புகிறார்;கள். இது நான் விவாதிக்க வேண்டிய மிகப்பெரிய கதையுள்ள ஒரு அம்சமாகும்.
இறுதியாக ஐந்தாவதாக ஒரு கருத்து கூறப்படுகிறது, அதில் நான் அதிக கவனத்தை செலுத்த விரும்புகிறேன், அது அரசியல் ரீதியாக எல்.ரீ.ரீ.ஈ செய்த பெருந்தவறு, ஏனைய அனைத்து எதிர்மறையான விளைவுகளும் இந்த பிறவி நோயின் செயலிழப்பினாலேயே ஏற்பட்டது. இவை எதுவும் புதிய விடயங்கள் இல்லை, ஆனால் இந்தக் காரணிகளை தரவரிசைப் படுத்தினால் எப்படியிருக்கும், அவற்றின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து அவற்றுக்குள்ள தொடர்புகளை வரிசைப்படுத்த வேண்டும்.
மகிந்தாவின் ஜாதகத்துடன் உள்ள தொடர்புகள், கருணாநிதியின் இரட்டை வேடம், புலம்பெயர் மோதல்கள், நம்பிக்கைத் துரோகங்கள், மற்றும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் சமரசமற்ற உறுதிப்பாடு என்பனவற்றை வைத்து சொல்லப்படும் அற்பமான விளக்கங்களும் உள்ளன. இவற்றை எல்லாம் குறிசொல்பவர்களது வெற்றுப் பேச்சாக நான் ஒருபக்கமாக ஒதுக்கி வைத்துவிடுகிறேன். இந்தக் கட்டுரையில் இந்த இரண்டாந்தரக் கருத்துக்களைப் பற்றி மேற்கொண்டு குறிப்பிடப் போவதில்லை.
கீழ் நோக்கிய சரிவுக்கான முதல் காரணி
தலைமையின் தீர்மானம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு பாராட்டுகள் வழங்கப்பட வேண்டும், இந்த மூவரில் ஒருவர் ஆதரவாளரா அல்லது எதிரியா என்பது வேறுவிடயம் (அவரை நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட அவரது தகுதியை உங்களால் மறுக்க முடியாது) . எல்.ரீ.ரீ.ஈ யினை ஒழித்துக்கட்ட அவர்கள் தீர்மானித்ததை மறுக்க முடியாது. மாவிலாறு சம்பவத்துக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தப் பட்டதை உணர முடிந்தது, ஒருமுறை வெற்றியை அவர்கள் சுவாசிக்கத் தொடங்கினால், காற்று தங்கள் பக்கம் வீசி தங்கள் முயற்சிக்கான பணத்தை கொட்டும். மனிதவளத்தை விரிவாக்கி, சர்வதேச அழுத்தங்களை எதிர்த்து நிற்பதுடன் பொதுமக்கள் இழப்பையும் அலட்சியப்படுத்தலாம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
ltte training-1
சிங்கள அரசாங்கம் தமிழ் பொதுமக்களை சர்வதேச ரீதியாக கொல்லவில்லை மாறாக அது உணர்ச்சிபூர்வமாக கொன்றது, ஹன்னா அமிட் சொல்வதுபோல அது அற்பமான ஒரு தீங்கு என்பது எனது கருத்து. புலிகள் தங்கள் மத்தியில் கவசமாக பயன்படுத்திய பொதுமக்களை அழிப்பதற்கு அது தயங்கவில்லை. 1989 - 90 களில் இராணுவம் தென்பகுதி இளைஞர்களின் இரத்தத்தை உறிஞ்சியதுடன் ஒப்பிடுகையில் இது ஆச்சரியம் எதுவும் தரவில்லை. இதை ஒரு பக்கமாக ஒதுக்கி விட்டு கருத்துச் சொன்னால், ஐநா மனித உரிமைகள் சபை மனித நேயத்துக்கு எதிராகவும் மற்றும் யுத்தக் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு என்பனவற்றுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட குற்றங்களுக்காக மேற்கொள்ளப்படும் விசாரணைகள், ஒரு இனத்தை அல்லது சாதியை அழிக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு என்பதை நிருபிக்கப்படவேண்டும் என்பதால் அது உறுதியானதாக இல்லை.
நான் முதலில் பெயரிட்ட தலைமைத்துவத்தின் தீர்மானம் என்கிற காரணி முக்கியமானது என்றாலும் புலிகளை தோற்கடிப்பதற்கு தீர்க்கமான அல்லது இரண்டாவது முக்கிய காரணியாக இருக்கவில்லை. முன்னதாக இரண்டுமுறை உறுதியாக மேற்கொள்ளப்பட்ட தீர்க்கமான அரசியல் இராணுவ முயற்சிகளின் விளைவு பூச்சியமாகவே இருந்தது.
1987ல் மேற்கொள்ளப்பட்ட ஜே.ஆர் - லலித் வடமராட்சித் தாக்குதல் முயற்சி கைவிடப்பட்டபோது, அது வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்திருந்தது. 1990 களின் பிற்பகுதியில் சந்திரிகா - அனுருத்த மேற்கொண்ட முயற்சி மற்றும் 2000த்தின் ஆரம்பத்தில் அக்கினி கீலா தாக்குதலில் ஏற்பட்ட பின்னடைவுகளை திரும்ப பெறும் முயற்சிகள் மற்றும் ஏப்ரல் 2000ல் ஆனையிறவில் ஏற்பட்ட படுதோல்வியும் உறுதியானவைகள்தான்.
யாழ்ப்பாணத்தை திரும்ப கைப்பற்றும்போது எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட செய் அல்லது செத்துமடி போன்ற முயற்சிகளை முறியடித்து ஜானக பெரேரா அதில் வெற்றி பெற்றார். 1990ன் நடுப்பகுதில் எல்.ரீ.ரீ.ஈயின் முடிவுறாத பேச்சு வார்த்தைகளின் துரோகத்தால் சந்திரிகா சீற்றம் அடைந்ததினால், அதன்பின் இராணுவத்துக்கு போதுமான ஆதரவை வழங்க முடியவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.
1987ல் ஜே.ஆரும் 1990 பிற்பகுதிகளில் சந்திரிகாவும் வெற்றிபெற முடியால் போனதுக்கு முடிவெடுப்பதில் உள்ள குறைபாடு காரணமல்ல, ஏனெனில் வேறுபல காரணங்கள் அவர்களுக்கு எதிராக இருந்தன. முறையே இந்தியத் தலையீடு மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யை பிளவுபடுத்தவதில் எற்பட்ட தோல்வி என்பனதான் அவர்களுக்கு எதிராக எழுந்த காரணங்கள்.
அயல் பக்கத்து சக்தியான இந்திரா காந்தியை தூண்டிவிட்டு தமிழ் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கவைத்த அறிவற்ற செயலை ஜே.ஆர் செய்தது உண்மை, ஆனால் இறுதியாக 1987ல் அவருக்கு அவர்களிடம் சரணடைவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. அவரது வடமராட்சி நடவடிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது அவரது இராணுவத்தின் மீது மறதியாக குண்டு வீசப்படும் மற்றும் அவரது துறைமுகங்கள் முற்றுகைக்கு உள்ளாகும் என்கிற நிலை தோன்றியது. அவருக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை.
1990 களின் பிற்பகுதி மற்றும் 2000ன் முற்பகுதியில் புலிகளின் துரோகத்தை ருசி பார்த்த சந்திரிகாவின் மனத்துணிவில் எதுவித குறைவும் எற்படவில்லை. அவரது பிரச்சினையாக இருந்தது அவரது இராணுவமே, அதனிடம் சிறந்த திறமைகள் இருந்தும் நம்பிக்கையை அது இழந்திருந்தது. எல்.ரீ.ரீ.ஈ ஒன்றுபட்டதாக இருந்ததுடன் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் ஆதரவை பெற்றிருப்பதுடன் மற்றும் சர்வதேச சமூகத்தின் செல்வாக்கினையும் பெற்றிருந்தது. தமிழ் ஈழத்தை அடைவதில் எந்த கேள்விக்கும் இடம் தராத போதும், எல்.ரீ.ரீ.ஈ, கொழும்பை ஆக்கிரமித்து அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை, இருந்தபோதிலும் எல்.ரீ.ரீ.ஈ சுயமாக தண்டனை அடைந்து கிழக்கு மாகாணத்தில் பிளவு படும்வரை, ஆயுதப்படைகளால் அதை தோற்கடிக்க இயலாத ஒன்றாகவே இருந்தது. அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட குறைபாடு அதற்கு காரணமல்ல, வேறு காரணிகளால் வெற்றி கை நழுவிப்போனது. எல்.ரீ.ரீ.ஈ தலைமையின் குறுகிய பார்வை காரணமாக அதன் உள்ளக பிளவு தவிர்க்க முடியாமற் போனது எனினும் பத்து வருடங்களின்பின் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவிதியை மூடுவதற்கு அது உதவியாக இருந்தது.
கோட்பாடுகளை இரண்டு மற்றும் மூன்றாக தீர்வு செய்தல்
எல்.ரீ.ரீ.ஈ தோற்றதுக்காக எனது பட்டியலில் உள்ள இரண்டாவது கோட்பாடு என்னவென்றால் அது பயங்கரவாதத்தால் சீரழிந்து அதன் உயர் தார்மிக அடித்தளத்தை இழந்து விட்டது என்பதுதான். மூன்றாவது ஆய்வு தமிழீழம் என்பது ஒரு மாயை அதை ஒருபோதும் அடைந்திருக்க முடியாது. இவை இரண்டிலும் சில உண்மைகள் உள்ளன.
அரசாங்கம் பொதுமக்களை கொலை செய்து கற்பழித்து, தீ வைத்து இன வெறுப்பslarmy victoryை ஏற்படுத்தியபோது முதலில் தமிழ் போராளிகள் (எல்.ரீ.ரீ.ஈ மட்டமல்ல) அதற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக இதே வழியை கையிலெடுப்பதற்கு அது உதாரணமாக இருந்தது என்பது உண்மை. ஆனால் இதே வழியில் எல்.ரீ.ரீ.ஈ ஏனைய தமிழ் போராளிகளை நர வேட்டையாடியபோது விடயங்கள் மாற்றம் பெற்றது.
1987ல் ஹபரண மற்றும் புறக்கோட்டை பேரூந்து நிலையங்கள் என்பனவற்றில் நடந்த குண்டு வெடிப்பில் பயங்கரவாதம் பெரிய அளவில் வெளிப்பட்டது, இந்த ஒவ்வொரு நிகழ்விலும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1990ல் சிறைப்பிடிக்கப்பட்ட 600 காவல்துறையினர் துடிக்கத் துடிக்க படுகொலை செய்யப்பட்டார்கள். பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம் மூலம் எல்.ரீ.ரீ.ஈ விடுதலைப் போரை பின்னியிருப்பதை இது சுட்டிக் காட்டியது. வௌ;வேறு வகையான கொடுரமான செய்கைகளுக்கு உதாரணமாக 1991ல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்ச்சி உள்ளது.
இந்த அட்டூழியங்களுடன் அரசியல் கொலைகளும் சேர்ந்துள்ளன. 1989ல் அமிர்தலிங்கம், 1993ல் அத்துலத்முதலி, 1993ல் பிரேமதாஸ, 1994ல் காமினி திசாநாயக்கா, 1999ல் நீலன் திருச்செல்வம் போன்றவை அவற்றில் சில. நவ சமசமாஜ கட்சியின் அண்ணாமலைகூட எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்டார். பகுத்தறிவு இழந்து வருவதற்கு சான்றாக செப்டெம்பர் 11க்கு பின்னரும் உலகம் மாறிவிட்டது என்பதை அறியாமல் தனது செயல்களை புலிகள் விடாப்பிடியாக தொடர்ந்தார்கள். தனக்கான சவக் குழியை அது தானே வெட்டிக் கொண்டது.
2006, 2007, மற்றும் 2008 ஆகிய ஒவ்வொரு வருடத்திலும் பொதுமக்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 15 தாக்குதல்கள் நடத்தப்பட்டன இவற்றில் ஒன்றைக்கூட இராணுவ எதிரிக்காக நடத்தப்பட்ட போர் என்று தள்ளிவிட முடியாது. அது தற்பெருமைக் கோளாறின் அளவுகோல், செப்டெம்பர் 11க்குப் பிறகுகூட யதார்த்தத்தை விட்டு விலகி பிரபாகரன் தனிப்பட்ட பயங்கரவாதத்தை தொடர்ந்தார், 2005ல் லக்ஸ்மன் கதிர்காமர், 2008ல் ஜானக பெரேரா, 2008ல் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே மற்றும் நீங்கள் நம்புவதைப் பொறுத்து டஜன் கணக்கான மற்றவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை பயன்படுத்தியது, ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் பட்டியலில் இல்லாத கற்பழிப்பு உட்பட அரச பயங்கரவாதத்தின் மோசமான முகவர் ஸ்ரீலங்கா இராணுவம் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. எல்லா இடங்களிலுமுள்ள மக்களுக்குத் தெரியும். அரசாங்கப்படையினர் ஒரு அருவருப்பான உரிமைகள் மீறலாளரும் மற்றும் அடக்குமுறையாளரும் ஆவார்கள்;, அனால் விடுதலையாளர்கள் வித்தியாசமாக நடக்க கடமைப்பட்டவர்கள். எல்.ரீ.ரீ.ஈயி;ன் தார்மீக உயர் பங்கு இழந்து போவதற்கான மற்றொரு காரணி வடக்கு கிழக்கு மக்கள் அது இளைஞர்களை கடத்துகிறது என்கிற அச்சம் அடைந்துள்ளதுதான். இன்று வெளிநாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களில் அநேகமானவர்கள் எல்.ரீ.ரீ.ஈக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள் ஆனால் முரண்பாடாக இந்த கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்கள்தான் இவர்கள்.
இவை அனைத்தும் உண்மை, ஆனால் பயங்கரவாதம் மற்றும் தார்மீக உயர் அடிப்படையை இழந்தது என்பவைகள்தான் தோல்விக்கான நேரடிக் காரணங்கள் அல்ல. அவர்களின் விடயத்தில் மக்களின் நம்பிக்கை மற்றும் சர்வதேசத்தின் ஆதரவு என்பன நிலையாக இருந்திருந்தால் அந்த இரக்கமற்ற கொடிய அமைப்பு வெற்றி பெற்றிருக்கும். இது தொடர்பாக நினைவுக்கு வரும் ஒரு தெளிவான விடயம் இஸ்ரவேலின் உருவாக்கம்தான். யதார்த்த உலகத்தில் அரசியலில் நல்லவைகள் ஒருபோதும் வெற்றியடைவதில்லை. சிலவேளைகளில் பயங்கரவாதத்தை பயன்படுத்தும் இயக்கங்கள் வெற்றி பெறுகின்றன. எனவே எனது பட்டியலில் இரண்டாவதாக உள்ள காரணி, எல்.ரீ.ரீ.ஈக்கு பயங்கரவாதம் மீதான நாட்டம் ஆயுதப் படைகளின் அரச பயங்கரவாதத்துக்கு ஈடாக உள்ளதால் அதற்கு எல்.ரீ.ரீ.ஈயின் தோல்விக்கு நேரடி பங்களிக்கும் காரணிகளின் பட்டியலில் குறைந்த முன்னுரிமையே வழங்க வேண்டும்.
எனது பட்டியலில் மூன்றாவது விடயமாக உள்ள தமிழீழம் என்பது இயல்பாகவே ஒரு மாயை. சனத்தொகையில் இலங்கைத் தமிழர்கள் 13 விகிதம் எனச் சொல்லப்படும் அதேவேளை சிங்களவர்கள் 75 விகிதமாக உள்ளார்கள். அரசாங்க அதிகாரத்திலிருந்து தமிழர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ காட்டில் இருந்து இயங்கும் ஒரு குழு. இலங்கை ஒரு தீவு அதனை பகிர்வதற்காக நீண்ட மற்றும் பிரிவினையான எல்லையை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும், பிரிக்கப்;பட்டு 65 வருடங்கள் கடந்த பின்பும் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்காக அவர்கள் இன்னமும் சண்டையிட்டு வருகிறார்கள். எனவே எல்.ரீ.ரீ.ஈயின் கனவான தனிநாடு என்பது ஒருபோதும் நடக்ககூடிய ஒன்றல்ல என்பதை முடிவு செய்வதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும்.
இந்த ஆய்வில் ஒரு தகுதி உள்ளது, ஆனால் மற்றக் காரணிகள் சரியாக இருந்தாலும் பிரச்சினையானதும் மற்றும் சர்ச்சைக்குரியதுமான சில நிலைப்பாடுகளும் தோன்றுகின்றன. உதாரணங்களாக நடைமுறைக்கு ஏற்றதும் மற்றும் போட்டியாக பிரிக்கப்பட்டவைகளுமான சிறிய தீவான சைப்பிரஸ், சிறிய எல்லையை கொண்ட கொசோவா, சிறிய மோல்டோவா மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடிய கிழக்கு உக்ரேன் என்பனவற்றைக் கருதலாம். எனவே எனது பட்டியலில் உள்ள மூன்றாவது விடயம் எல்.ரீ.ரீ.ஈ திட்டத்தில் கடக்கவியலாத ஒன்றாக இருக்கும் என நான் நம்பவில்லை.
நான்காவது கோட்பாடு
நான் இப்போது கொழும்பு டெலிகிராப்பின் விசேட பதிப்பில் வெளியாகும் யுத்தம் முடிவடைந்த ஐந்தாவது வருட நினைவு பற்றிய எனது கட்டுரையின் கடைசிப் பகுதிக்கு திரும்புகிறேன்.
எல்.ரீ.ரீ.ஈ ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கான காரணிகளை முன்னுரிமைப் படுத்த முயன்று வருகிறேன். ஆனால் இந்தக் கட்டுரை சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கும் என்பதையும் நானறிவேன் - ஆனால் உண்மை வெல்லட்டும். இதுவரை நான் கையாண்ட மூன்று காரணிகளையும் முக்கியத்துவம் குறைந்தவைகளாகவே வரிசைப் படுத்தியிருந்தேன். நான் மிகவும் முக்கியமானவை என நம்பும் இரண்டு விடயங்களின் பக்கம் திரும்புகிறேன். அதில் இரண்டாவது நிலையில் உள்ளதாக நான் வரிசைப்படுத்தியுள்ளது சர்வதேச சமூகத்தின் , விசேடமாக டெல்லி, அமெரிக்கா, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவற்றின் எதிர்ப்புகளை,
மற்றும் நான் முதலாவதாக விருது கொடு;க்க இருப்பது, எல்.ரீ.ரீ.ஈயின் உயிரணுக்களில் உள்ள பிறப்பு குறைபாடுகளுக்கே,
என்னுடைய மனதில் சர்வதேசகாரணி விசேடமாக வெளிநாட்டிற்கு அருகில் உள்ள சிறிய தீவிற்கு தொலைவில் உள்ள மற்ற எல்லா இடங்களையும் காட்டிலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஆய்வினை உக்ரேனில் திரும்பவும் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன, அயலில் உள்ள பெரிய சக்தி எப்படி நடக்கவேண்டும் என்பதை முடிவு செய்கிறது. கிரிமியா நிரந்தரமாகப் போய்விட்டது. கிழக்கு உக்ரேனின் தலைவிதியை ரஷ்யா தீர்மானிக்க உள்ளது, ஒபாமா, ஏஞ்சல் மேர்க்கல், மற்றும் நேட்டோ என்பன தங்கள் மனசை திறந்து அசுத்தத்தை வெளியேற்ற முடியம் ஆனால் அதில் பிரச்சினை இல்லை அவர்கள் கிரிக்கட் விளையாட்டில் நாங்கள் அழைக்கும் 12வது விளையாட்டு வீரரைப்போல தருணம் வேண்டிக் காத்திருக்கும் மேலதிகமானவர்கள். ஒன்றில் கீவில் உள்ள படையணி கிழக்குக்கு கணிசமான சுயாட்சியை அதாவது பெடரலிசத்தை அனுமதிக்க வேண்டும், அல்லது உக்ரேனின் ஒரு பகுதி தனிநாடாக பிரிந்து செல்லும் அல்லது பிரிந்து சென்று ரஷ்யாவுடன் ஒன்றிணையும். அதுதான் முக்கியமான அடிப்படையாக இருக்கும். ஸ்ரீலங்காவில் அது அத்தனை இலகுவானதல்ல, அனால் காலப்போக்கில் அது அதிகாரப் பகிர்வு அல்லது இந்த தீவின் மரணம் என்றாக இருக்கும்.
21ம் நூற்றாண்டில் சர்வதேசக் காரணிகள் முக்கியமானவை, அருகில் உள்ள வெளிநாடு, அது பெரியதோ அல்லது பிராந்திய அதிகாரம் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளதோ எப்படி இருப்பினும். ராஜபக்ஸ வம்சத்தினர் இதைப்பார்த்து ஊமைகளைப் போலிருப்பாhகள், எனவே அந்த அறிவிப்பு கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டும். தமிழ் ஈழம் ராஜீவ் காந்தியுடன் மரணித்து விட்டது. ஏனனில் எல்.ரீ.ரீ.ஈ முட்டாள்களால் இந்தியாவின் முக்கியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய தினத்தில் ராஜீவ், பிரபாகரன், மற்றும் தமிழ் ஈழம் ஆகிய மூன்றுமே இறந்து விட்டன. இந்த சிறிய தீவில் உள்ள ஒரு குகையில் தடித்துப் பருத்த அரக்கி ஒளிந்திருக்க முடியுமா? கடந்தகால மற்றும் எதிர்கால பிரதமர் ஒருவரை கொலை செய்துவிட்டு அதிலிருந்து தப்ப முடியுமா? பதின்மூன்றாவது திருத்தத்துக்குப் பின் அந்த அலைகளில் நீந்திச் சென்று சர்வதேச உத்தரவாதத்துடன் கூடிய ஒரு சுயாட்சி அலகினைக் கொண்ட வட கிழக்கு மாகாணசபை நிருவாகத்தை எல்.ரீ.ரீ.ஈ அமைத்திருக்குமானால் ஸ்ரீலங்காவின் சரித்திரம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் மற்றும் தமிழர்கள் அனுபவித்த இவ்வளவு கஸ்டங்களிலும் இருந்து அவர்கள் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் எடுத்த மடமையான ஒரு முடிவு பிரபாகரனின் மற்றொரு முட்டாள்தனத்தை பறை சாற்றுகிறது.
இந்தியாவின் ஆதரவு இல்லாமலேயே எல்.ரீ.ரீ.ஈ யினை ஒதுக்கி வைத்து மேற்குலகம் முழுவதும் தடை செய்ததால் புலிகள் தனிமைப் படுத்தப் பட்டு தோல்வியை நோக்கிச் சபிக்கப்பட்டார்கள். ஆம் கேபியினால் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் திரட்டியிருக்க முடியும், எல்.ரீ.ரீ.ஈ யிடம் கப்பல் சேவைகளும் போதைப் பொருள் மூலம் பணம் திரட்டும் வழியும் இருந்தது, ஆனால் இது சர்வதேச அரச சக்திகளுக்கு ஈடாகுமா? இல்லை, சர்வதேச பச்சாதாபத்தை இழந்த அன்றே எல்.ரீ.ரீ.ஈ சபிக்கப்பட்டு விட்டது. அதன் சர்வதேச இழிநிலைக்கு அதன் விதி முடிவைத் தேடிக்கொண்டது. கோட்டா மற்றும் மகிந்த ஆகியோர் இப்போது அதே படுகுழியை முறைத்து பார்த்தவண்ணம் உள்ளார்கள்.
நவீன காலப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து புதிய அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன அல்லது பிராந்தியங்கள் பிரிந்து சென்றன விதிவிலக்காக அவை இன, மத மற்றும் மொழியியல் ரீதியாக ஒரே விதமாக இருந்தன. நாடுகளின் சுயநிர்ணய உரிமை ஆய்வு கணிசமானளவு குறைந்து வருகிறது. பிரிந்து போவதோ அல்லது பிரிந்து போகாததோ நவீன காலத்தில் நவீன யதார்த்தங்கள், உலக பொருளாதாரம், தொழில்நுட்பம், மற்றும் வர்த்தகம் என்பனவற்றுக்கு ஏற்ப அதிகம் செய்யவேண்டி உள்ளது அந்த நாடுகளின் ஒற்றுமைக்கு மேலதிகமாக வல்லரசுளின் தாக்கம் மற்றும் உள்ளக ஜனநாயகம் என்பனவும் அதில் தங்கியுள்ளன.
எனவே 1991ல் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியது, அது ஒரு குற்றமாக இருப்பதற்கு அப்பால் ஒற்றுமையான தமிழ் தேசத்தை உருவாக்க முயன்றுள்ளார்கள், இது நவீன மாநிலங்களின் பன்முகத்தன்மையை பிடித்துக்கொள்ள தவறிய ஒரு காலத்துக்கு ஒவ்வாத செயலாகும். சோவியத் ரஷ்ய குடியரசில் இருந்து உருவாகிய 15 மாநிலங்கள்,; ஏழு முன்னாள் யுகோஸ்சிலாவிய மாநிலங்கள், அநேகமான புதிய ஆபிரிக்க நாடுகள், மற்றும் இப்போது கிழக்கு உக்ரேன் ஆகியவை ஒரே மாதிரியானவை அல்ல. அவை கடந்த கால கட்டத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிற சுய நிர்ணய உரிமை பெறுவதற்கு உரிமையுள்ள ஒரே மாதிரியான நாடுகளுக்கு உதாரணம் அல்ல, மாறாக நவீன காலகட்டத்தில் சுய நிர்ணயத்துக்கு உரித்துள்ள பன்முகத் தன்மையுள்ள சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளுக்கு உதாரணம்.
இறுதிப் பதில்
எல்.ரீ.ரீ.ஈ சிதிலமடைந்ததுக்கு மிகவும் முக்கியமான காரணம் அரசியல் சம்பவத்தை மீறிய அதன் இராணுவ சம்பவத்துக்குத் தவறான முன்னுரிமைகளை அளித்ததே ஆகும். அதன் குட்டி முதலாளித்துவம், மார்க்கசியம் அல்லாத உயிரணுக்கள். இராணுவமே தவிர அரசியல் அல்ல. நான் ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கவில்லை இதுவரை அது ஒரு துணையானதாகவே இருந்து வருகிறது, ஆனால் அதிகளவு அரசியல் முன்னுரிமை கொடுக்கும் மூலோபாயத்தை நான் நிராகரிக்கிறேன். இதன் விளைவாக எல்.ரீ.ரீ.ஈ ஒரு இராணுவமாக மற்றும் இராணுவ அமைப்பாக மாறியது அரசியல் அமைப்பாக அல்ல. சிங்கள அரசாங்கத்தின் கொடூரமான அடக்கு முறைக்கு ஆளாகியிருந்த அந்த இருண்ட மற்றம் துயரமான நாட்களில் ,எல்.ரீ.ரீ.ஈ தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்து போராடியது. இதனால்தான் பெரும்பாலான தமிழர்கள் இல்லாவிட்டாலும், இவை அனைத்தும் சில கண்ணீர் துளிகளுடன் முடிந்து விடும் என்கிற சந்தேகம் இருந்தபோதும் பலர் அந்தப் பொடியன்கள் மீது ஒருவித அனுதாபம் கொண்டிருந்தனர். அப்படியே இருந்தாலும் பிரபாகரன் ஒரு லெனினோ, ஒரு மாவோவோ அல்லது ஒரு மண்டலாவோ அல்ல அவர் 1960 களில் பெருவில் (Peru) இருந்த சைனிங் பாத் கெரில்லாவை போன்றவர்.
எல்.ரீ.ரீ.ஈ ஒரு அரசியல் மூலோபாயத்துக்கு மாறாக கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட இராணுவக் கூறுகளை கொண்ட இராணுவத் தீர்வுக்காகவே வாதாடி தொலை தூரக் கடலேரியில் உள்ள முட்டுச் சந்துக்குள் உயிரைவிட்டது. ராஜீவ் காந்தியின் கொலை, கெட்ட நம்பிக்கை மற்றும் பேச்சு வார்த்தைகளில் ஏமாற்று, பொறுப்பற்ற பயங்கரவாதம் என்பவைதான் அரசியல் சம்பவத்தின் முக்கியத்துவம் மற்றும் அளவுக்கு மீறிய எதிhபார்ப்புகளின் முக்கித்துவம் என்பனவற்றை ஜீரணிக்க முடியாத ஒரு தலைவரின் தனித்தன்மையாக உள்ளது. களத்தில் வெற்றி பெற முயலும் இராணுவத்துக்கு தனியான ஒரு முத்திரை உண்டு அது அரசியல் நயத்தின் அடையாளம் அல்ல. எல்.ரீ.ரீ.ஈ ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து மறைந்துவிட்டது. இந்தக் கருத்தை நான் முப்பத்தைந்து வருடங்களாக எனது இடது சமசமாஜ காலமான 1970 மற்றும் 1980 களில் இருந்தே கொண்டிருக்கிறேன். 989ல் மறைந்த கதிர்காமருடன் இணைந்து எழுதிய எனது புத்தகத்திலும் (அரினா வெளியீடான ‘இனம்’) மற்றும் அடுத்தடுத்த எனது தலையீடுகளிலும் தெரிவித்துள்ளேன். இந்த பத்தியை முடிவு செய்யும் விதமாக அதை மீண்டும் தெரிவிக்கிறேன்.
- குமார் டேவிட்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக