சனி, 17 மே, 2014

மசிரைக் கூடப்பிடுங்க முடியாத மாகாணசபையில் மாபெரும் தீர்மானங்கள்?

'ஒரு மசிரைப் புடுங்கிறதுக்கும் அரசாங்கம் விடுகுதில்லை. அதிகாரங்களைத்தந்தால்தானே நாங்கள் எதையாவது செய்யலாம்' எண்டு வாற, போற, சந்திக்கிற ஆட்களிட்டையெல்லாம் விக்கியர் அழுதுகொண்டேயிருக்கிறார்.

ஒரு முதலமைச்சர் இப்படிப் புலம்பிறதைக்காண ஆருக்குத்தான் பொறுக்கும்?



விக்கியர் மட்டுமா இப்பிடி அழுகிறார்? அவரோட சேர்ந்து மாகாணசபையின்ர உறுப்பினர்களும் மந்திரிமாரும் அல்லவா அழுதுகொண்டிருக்கினம்.

'ஒண்டையும் செய்யிறதுக்கு ஆளுநர் விடுகிறார் இல்லை' எண்டதுதான் இப்ப ஊரேல்லாம் பேச்சு. அட நல்லாய்ப்படிச்ச மனிசரே இந்தக் கதைக்குத் தலையாட்டிறாங்கள் எண்டால்.....!

அந்த அளவுக்குச் சனங்களின்ரை மண்டையைக் கழுவி வைச்சிருக்கினம் இந்தக் கூட்டமைப்புக்காரர்.

உண்மையில அரசாங்கம் மாகாணசபையை இயங்க விடாமல் தடுக்கிறதாக இருந்தால், அது எந்தெந்த விசயங்களில அப்பிடித் தடுக்குது? எப்பிடி அந்தத் தடையைப் போடுது? ஆர் மூலமாக இந்தத் தடை உத்தரவுகள் போடப்படுகின்றன? எண்ட சங்கதிகளையெல்லாம் தெளிவாகச் சொல்லோணும்.

ஆனால், இதையெல்லாம் அவை சொல்ல மாட்டினம்.

ஏனெண்டால், அப்பிடிச் சொன்னால், அதை நிரூபிக்க வேணும். அப்பிடி நிரூபிச்சால், 'இந்தத் தடைகளுக்கும் தடுப்புகளுக்கும் எதிராக நீங்கள் என்ன மசிரையா புடுங்கிறீங்கள்?' எண்டு சனங்கள் கேட்குங்களல்லோ...

'ஒண்டுக்கும் உதவாத மாகாணசபையைப் பிறகேன் கட்டிப்பிடிச்சுக்கொண்டிருக்கிறியள்? நீங்கள் சம்பளம் எடுக்கிறதுக்கும் சலுகைகளை அனுபவிக்கிறதுக்கும் பிரச்சினையில்லை. ஆனால், எங்களின்ரை ஒரு தேவையெண்டால்தான் அரசாங்கத்திட்டப்போய்க் கேட்கமாட்டம். அரசாங்கம் ஒண்டையும் தருகுதில்லை. ஒண்டுக்கும் விடுகுதில்லை' எண்டு கதை விடுகிறியள் எண்டெல்லாம் சனங்கள் கேட்குங்கள்.
அதால, இதைப்பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்லாமல் சும்மா பொத்தாம் பொதுவாகக் கரடி விட வேண்டியதுதான்.

இந்தக் கரடி விடுகிற விளையாட்டில இந்தத் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிகர் இந்த ஈரேழு உலகத்திலயும் வேற ஆரும் இல்லை.

சொந்த இனத்துக்கே மாபெரும் துரோகத்தை – மாபாதகத்தைச் செய்யிற கூட்டம் இது.

ஆனால், தான் செய்யிற பாதகத்தையும் துரோகத்தனத்தையும் வலு சிம்பிளாக மறைச்சுக்கொண்டு மற்றவனையெல்லாம் துரோகியாக்கிக் காட்டிறதிலயும் இவங்கள் வலு விண்ணன்கள்.

இந்தப் பாதகரைச் சனங்கள் தங்களை விட்டு நீக்காதவரை ஒருத்தருக்கும் மீட்சியுமில்லை. விடுதலையுமில்லை.

பாருங்கோ இப்ப கூட இந்த மாகாணசபையை வைச்சு எப்பிடி ஏமாத்துப் பண்ணுறாங்கள் எண்டு.

மற்ற ஒன்பது மாகாணசபைகளையும் விட வட மாகாணசபைக்குத்தான் இந்த வருசம் கூடுதலான காசு ஒதுக்கப்பட்டிருக்கு.

அதைவிட மாகாணசபைக்கு வரவேண்டிய முத்திரை வரி போன்ற வேற காசுகளும் இருக்கு.

ஆனால், இதையெல்லாம் சனங்களுக்குப் பயன்படுகிற மாதிரி இவை ஒரு திட்டத்தையும் உருப்படியாகப் போட்டதாகத் தெரியேல்ல.

ஒதுக்கப்பட்ட காசில இவை தேத்தண்ணி குடிச்சது, வடை சாப்பிட்டது, சொந்த பந்தங்களின்ரை கொண்டாட்டங்களுக்குப் போய்வந்தது எண்டு செலவழிச்ச காசைத்தவிர, மற்றக்காசெல்லாம் திரும்பித் திறைசேரிக்குப் போகக்கூடிய நிலைமைதான் இப்ப இருக்கு.

இதைப்பற்றி மாகாணசபையிக்குள்ள இருக்கிற அதிகாரிகளே கவலைக்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கினம்.

தங்கட கதையையும் கேக்கினம் இல்லை. தாங்களாகவும் ஏதும் செய்யினமில்லை. இந்த நிலைமையில நாங்கள் என்னத்தைச் செய்யிறது? ஏதோ நடக்கிறதைக் காணவேண்டியதுதான்.

அநியாயமாகக் காசு திரும்பிக் கொழும்புக்குப்போகப்போகுது... எண்டு கவலைப்படுகினம் வடமாகாணசபையின்ரை திறைசேரிக்காரரும் உயர் மட்ட அதிகாரிகளும்.

இப்ப மாகாணசபையில இருக்கிற காணி, பொலிஸ் அதிகாரத்தைத் தவிர, மற்ற 37 (முப்பத்தி ஏழு ) அதிகாரங்களையும் எடுத்துத் தங்கட மடியுக்குள்ள வைச்சுக்கொண்டு அதிகாரம் இல்லை, ஒண்டுக்கும் வழியில்லை எண்டு கதை விடுகினம் கூட்டமைப்புக்காரர்.

அட இருக்கிற அதிகாரத்தை வைச்சுக்கொண்டே செய்யக் கூடியதைச் செய்யுங்கோவன்ராப்பா.... எண்டால் அதுக்கு ஒருபதிலும் இல்லை.
ஏன் இருக்கிற அதிகாரத்தை வைச்சுக்கொண்டே செய்யக் கூடியதைச் செய்யேல்லை எண்டால், அதுக்கு இதயக்கதவு திறக்க வேணுமே...

எல்லாத்துக்கும் சனங்களில இரக்கமும் பாசமும் அக்கறையும் வரோணும்....

இவையின்ரை இதயத்தில ஒரு நாளும் சனங்களுக்கான கதவு திறப்பதேயில்லை. சனங்களுக்குச் சேவைசெய்யிறது எண்டால் அதைச் சாதாரணமாகச் செய்ய ஏலாது. நல்லாக் கஸ்ரப்படவேணும். முறியவேணும். எல்லாரையும் திருப்திப்படுத்த வேணும். இதுக்கு ஆரும் தயாரில்லை.

அப்ப சனங்களைக் குழப்பி விடுகிற மாதிரி, அவையின்ரை காதில பூ வைக்கிற மாதிரிக் கதை விடத்தான் வேணும்.

அப்பிடியான கதைகள்தான் நடந்து கொண்டிருக்கு.. ஆளுநர் தடுக்கிறார். ஆளுநர் பறிக்கிறார் எண்டமாதிரி...

அப்பிடியெண்டால்...அதிகாரமேயில்லாத மாகாணசபைக்கு ஏன் ஒரு மந்திரிசபை? ஏன் ஒரு முதலமைச்சர்? ஏன் ஒரு அவைத்தலைவர்? ஏன் கூட்டங்கள்? ஏன் தீர்மானங்கள்?

பேசாமல் இதையெல்லாம் விட்டுப்போட்டு வெங்காயம் உரிக்கப்போகலாம்.. இல்லாட்டிக்கு, ஒரு மரத்துக்குக் கீழ இருந்து வெத்திலை பாக்கைப் போட்டுத் தெருவில் துப்பிக்கொண்டிருக்கலாம்.....

-வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல