வியாழன், 22 மே, 2014

தீயல் குழம்பு

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் - 2
மல்லி - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காய், மிளகு, மல்லி, வரமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து ஒரு 5-8 நிமிடம் வதக்க வேண்டும்.
 அடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டால், தீயல் குழம்பு ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல