திங்கள், 26 மே, 2014

சத்தியமாகச் சொல்லுங்கோ செல்வம் அண்ணை...

சனங்களுக்காக நீங்கள் என்ன செய்தியள்?

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போக மாட்டோம் என்று அடித்துச் சத்தியம் பண்ணியிருக்கிறார் செல்வம் அடைக்கலநாதன் எம். பி.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பதிலாக அவர் வேற ரண்டு தெரிவுகளைச் சொல்லிறார்.

ஒண்டு சர்வதேச நடுநிலைமையாம். மற்றது அரசாங்கத்தோட நேரடியான பேச்சுவார்த்தையாம்.

இதில என்ன புதினம் இருக்கு? என்ன விசேசம் இருக்கெண்டு உண்மையாக எனக்குத் தெரியேல்ல.

உங்களில ஆருக்காவது செல்வத்தாரின்ரை இந்தக் கதையில – கோரிக்கையில இல்லாட்டிக்கு இந்த நிபந்தனையில இந்தத் தெரிவில ஏதாவது இருந்தால் தயவு செய்து ஒரு தயக்கமும் இல்லாமல் அதைச் சொல்லுங்கோ...

'இலங்கை அரசாங்கத்தோட நாங்கள் பேச முடியாது. அவர்களை நம்ப முடியாது. இனிமேல் பேச்சுவார்த்தை நடக்கிறதெண்டால் அது மூண்டாந்ததரப்பின்ரை மத்தியஸ்துவத்தோடதான் நடக்க வேணும். அப்பிடியெண்டால்தான் நாங்கள் பேச்சுகளில கலந்து கொள்ளுவம் எண்டு இருவத்தைஞ்சு வருசத்துக்கு முந்தியே பல்லவியைப்பாடத் தொடங்கி விட்டினம் தமிழ்த்தலைமைகள்.

இயக்கங்களே இந்த மாதிரியான ஒரு பிடிவாதத்தோட நிண்டுதான் 1985 இல திம்பு பெங்களுர் எண்ட இடங்களில் இந்தியாவின் மத்தியஸ்துவத்துடன் பேச்சுகள் நடந்தன.

அந்தப் பேச்சுவார்த்தைகளால் கிடைத்த இலங்கை - இந்திய உடன்படிக்கையையும் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையையும்தான் வேண்டாம் எண்டோம். அந்த உடன்படிக்கையால வந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் மறுத்தம்.

இப்ப அதுக்காகவே அடிபட்டுக்கொண்டிருக்கிறம். இது வேற கதை.

சரி பிறகும் பிரச்சினை போர் சண்டை முடிவில்லாத பிரச்சினைகள் எண்டதால புலிகளின் காலத்தில நோர்வேயின்ரை மத்தியஸ்த்துவத்தோட ஒரு பேச்சு வார்த்தை நடந்தது.

அந்தப் பேச்சுவார்த்தையிலும் அரசாங்கமும் புலிகளும் ஒஸ்லோ ரோக்கியோ சூரிச் பாங்கொக் எண்டு ஊர் சுற்றினார்களே தவிர உருப்படியாக ஒரு மசிரும் நடக்கேல்ல.

இலங்கை இனப்பிரச்சினையின் பேரால வெளிநாடுகளில இருந்த நாலு ஹொட்டேல்காரன்கள் பிழைச்சதைத் தவிரஇ இலங்கைக்கோ இலங்கையில இருக்கிறவைக்கோ ஒண்டும் கிடைக்கேல்லை.

கடைசீல பேச்சுக்குச் சமபலத்தோட இருக்கிறம் எண்டு சொன்ன புலிகளே இல்லாமல் போய்விட்டார்கள்.

சரியோ பிழையோ... போருக்கும் சமபலம் உண்டு. பேச்சுக்கும் சமபலம் உண்டு என்று ஒரு காலத்தில் புலிகள் இருந்தார்கள் எண்டது உண்மை.

ஆனால் இப்ப கூட்டமைப்பு அப்பிடியா இருக்கு? தங்களுக்குள்ள அடிபிடியும் குத்து வெட்டும் இழுபறியுமா...

இந்தச் சீத்துக்கேடான நிலையில – கிழக்கு மாகாணத்தையும் பறிகுடுத்திட்டு.... தனிய வவுனியாவுக்கு வடக்கால ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டி வைச்சிருக்கிறம் எண்டு நினைச்சுக்கொண்டு....

வாயால வெட்டி விழுத்தினால் எல்லாம் சரியாகி விடுமா? அல்லது சமபலம் வந்து விடுமா?

இதாலதான் கூட்டமைப்பின்ரை அறிக்கைகளையோ கோரிக்கைகளையோ புலிகள் இல்லாமற்போன பிறகு ஆரும் கணக்கில எடுக்கால் இருக்கினம்.

இதையெல்லாம் தெரியாததைப்போல அல்லது இதையெல்லாம் மறந்ததைப் போல செல்வத்தாரும் சு. பிரேமச்சந்திரனும் பாராளுமன்றத்தெரிவுக்குழுவை நம்ப முடியாது என்கினம்.

இது சாப்பிடுதுக்கு முதலே கறிக்கு உப்புக் காணாது எண்ட மாதிரியான கதை.

இந்தப் பாராளுமன்றத்தெரிவுக்குழுவை நம்ப முடியாது. இந்த மாதிரி ஏற்கனவே பல பேச்சுகளில் எல்லாம் தமிழர்கள் கலந்து கொண்டும் எந்த நன்மையையும் பெறவில்லை. அதால இதையும் நம்ப முடியாது என்கினம் இந்த எம்பிமார்.

சர்வதேச நடு நிலைமை வந்தால்தான் தாங்கள் பேசப்போவம் எண்டும் ஒரு கதை விடுகினம்.

இப்ப உள்ள சூழ்நிலையில அப்பிடி ஒரு மத்தியஸ்துவத்துக்கு இப்போதைக்கு எந்த நாடும் வரத்தயாரில்லை. அப்பிடி வந்தாலும் அந்த மத்தியஸ்த்துவத்தில ஒரு நல்ல – உருப்படியான பேச்சுவார்த்தை நடக்கும் எண்டு சொல்ல முடியாது. அப்பிடித்தான் பேச்சுகள் நடந்தாலும் ஒரு தீர்வை எட்டும் எண்டு நம்பேலாது.

இதுவும் கறியைச் சாப்பிடாமலே உப்புக்காணாது எண்டு சொல்லிறமாதிரியான அபிப்பிராயந்தானே எண்டு நீங்கள் கேட்கலாம்.

உண்மைதான்.

பேச்சுவார்த்தை எண்டால் அல்லது இனப்பிரச்சினை எண்டால் அதுக்கு நீங்கள் இலங்கை அரசாங்கத்தோட பேசுங்கோ எண்டுதான் எல்லாரும் சொல்லுகினம். ஆரும் அப்பிடித்தான் சொல்லுவினம். மூண்டாந்தரப்பின்ரை மத்தியஸ்தம் வந்தாலும் இதுதான் நிலை. இப்பிடித்தான் சொல்லுவினம்.

ஆனால் இந்த மூண்டாந்தரப்பு ஒரு பார்வையாளர் தரப்பே தவிர எதையும் தீர்மானிக்கும் தரப்பல்ல.

இன்னொரு பிறத்தியாளுக்கு முன்னுக்கு நிண்டு நாங்கள் அடிபடுகிறதாக முடியுமே தவிர எங்களுக்கிடையில இருக்கிற பிரச்சினையை நாங்கள் கதைச்சுப் பேசி முடிக்கிற மாதிரி முடிவுக்குக்கொண்டு வாற மாதிரி இருக்காது.

அடுத்தது செல்வத்தார் சொல்லிறமாதிரி அரசாங்கத்தோட பேசிறது எண்டதைப்பற்றி...

அரசாங்கத்தோட பேசிறது எண்டால்... தாங்கள் மட்டும்தான் பேசிறதா?

இதுதானே பிழை எண்டிறது. இந்த நாட்டில பல தரப்புகள் இருக்கினம். எல்லாத்தரப்பையும் மக்களும் ஆதரிக்கிறார்கள். அவையும் இந்த இனப்பிரச்சினையில ஏதோ வகையில சம்மந்தப்பட்டவை. அதிலயும் இனப்பிரச்சினையில ஒரு முக்கியமான சக்தியாக இருந்த ஐ.தே.கவை விட்டுவிட்டுப் பேச்சா?

பேச்சுவார்த்தையில என்ன மாதிரியான முடிவை எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதா விடுவதா எண்டு தீர்மானிக்கிறதில ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளும் இருக்கின்றன.

ஜனநாயக அடிப்படையில மக்களால் தெரிவு செய்யப்பட்ட பலருடைய தீர்மானங்களுக்கும் இடமளித்து விட்;டால் அது சட்டரீதியான விசயமாகியும் விடும். இதுக்குத்தான் தெரிவுக்குழுவுக்குப்போங்கோ எண்டு சொல்ல வேண்டியிருக்கு.
தெரிவுக்குழுவில ஒரு தீர்வை அரசாங்கம் வைக்கேல்ல எண்டால் அதால பாதிக்கப்படப்போறதும் அரசாங்கமே தவிர தமிழாக்களாக இல்லையே.

சரி அப்பிடித்தான் எல்லாரையும் விட்டுப்போட்டு அரசாங்கத்தோடதான் பேசிறது எண்டாலும் அது எவ்வளவு உத்தரவாதத்தைத் தரும்? அதால என்ன உருப்படியைத் தரும்?

சத்தியமாகச் சொல்லுங்கோ செல்வம் அண்ணை...

நீங்கள் தமிழாக்களின்ரை நன்மை நலன் எண்டு எப்பவாவது ஒரு நாளாவது உருப்படியாகச் சிந்திச்சிருக்கிறியளா..

சும்மா ஸ்ரியோ ரேப் மாதிரி திரும்பத்திரும்ப இந்தப் பழைய வாய்பாட்டைப் பாடாதேங்கோ.. அலுப்பாயிருக்கு....

-வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல