இந்தியாவின் புதிய பிரதமராக மோடி பதவியேற்கிற நிகழ்வுக்கு மகிந்தரைக் கூப்பிட்டிருக்கினமெல்லோ...
மகிந்தருக்கு எதிராக தமிழ்நாட்டில எத்தினை கறுப்புக் கொடியைக் காட்டினாலும் டில்லி செங்கம்பளத்தை விரிக்கத்தான் போகுது எண்டது தெளிவு.
மோடி வந்தால், காங்கிரஸ் போய் பாரதீய ஜனதாக் கட்சி வந்தால் மகிந்தற்றை ஆட்டமும் கொழும்பின்ரை கூத்தும் அடங்கீடும் எண்டு கன சாத்திரிமார் சோதிடம் சொன்னவை.
கொழும்பும் டில்லியும் எப்பவும் ஒரே மாதிரித்தான் சிந்திக்கும் எண்டது கனபேருக்கு விளங்கிறேல்ல.
அப்பிடித்தான் தப்பித்தவறிக் கொஞ்சம் மாறிச் சிந்திச்சாலும் அதில கனக்க வேறுபாடிருக்காது.
இதில தமிழர்கள் என்ன செய்யலாம் எண்டு சிந்திக்கோணும்.
இப்ப நல்ல ஒரு சான்ஸ் விக்கியருக்கு வந்தது, 'வாங்கோ விக்கியண்ணை, ஒருக்கால் இந்தியாவுக்குப்போயிட்டு வருவம். மோடியர் கூப்பிடுறார். ஒண்டாப்போனால் கதைக்க வேண்டியதைக் கதைச்சு, செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு வந்திடலாம்' எண்டு மகிந்தர் கூப்பிட்டார். ஆனால், இதுக்கு மறுத்து அதையும் விக்கியர் பழுதாக்கிப்போட்டார்.
விக்கியருக்கு உள்ளுர டில்லிக்குப் போக விருப்பம்.
அப்பிடிப்போனால், இந்த 13 க்கு மேலயா கீழயா எண்ட பிரச்சினையையும் கதைக்கலாம். அப்பிடியே போரில பாதிக்கப்பட்டிருக்கிற சனங்களுக்கு எண்டு இந்திய உதவிகளையும் கேட்டுக் கொள்ளலாம். அதோட மாகாணசபைக்கும் ஏதாவது உதவி செய்யுங்கோ எண்டு கேட்கலாம்... போற பயணம் நல்லாக இருக்கும் எண்டு அவருக்குத் தெரியும்.
ஆனால், அங்க டில்லிக்குப்போறன் எண்டு ஒரு சொல்லுச்சொன்னால் போதும் தன்;ரை உள்ளாடையைக் கூட தன்னோட கூட இருக்கிற ஆட்கள் கிழிச்சிடுவாங்கள் எண்டு அவருக்கு நல்லாய்த்தெரியும். இதால பிச்சையும் வேண்டாம். நாயும் வேண்டாம் எண்ட கணக்கில ஆள் அப்படியே காய் வெட்டிப்போட்டுச் செத்தனே சிவனே எண்டிருக்குது.
உண்மையில விக்கியண்ணைக்கு இது ரண்டாந்தடவை விழுந்த ஸ்வீப் ரிக்கெற்.
ஆனால், அவர் ரண்டாந்தடவையும் இதைத் தவற விட்டிட்டார் எண்டுதான் சொல்லோணும்.
முதல்ல சார்க் மாநாட்டுக்கு கொழும்புக்கு வாறதுக்கு மன்மோகன் சிங் வெளிக்கிட அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி ஆளை அங்க நிப்பாட்டிப்போட்டினம். அப்ப விக்கியர் சரியாக அதைக் கையாண்டு மன்மோகனைக் கூப்பிட்டு அப்பிடியே வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கும் கூட்டிக்கொண்டு போய்க் காட்டி நிலைமைகளை விளங்கப்படுத்திக் கன காரியங்களைப் பார்த்திருக்கலாம்.
அப்படிக் காரியங்களைப் பாக்கிறதுக்குத்தானே இந்த முதலமைச்சர் பதவி. அதை விட்டுப்போட்டு தன்ரை காரியம் பாக்கவோ, தங்கட கட்சிக்கான லாப நட்டக்கணக்குப் பாக்கவோ இதை வைச்சுக்கொண்டிருக்கேலாது எல்லோ.
அப்ப மன்மோகனுக்கும் சப்போர்ட் பண்ணேல்ல. அந்த நேரம் மன்மோகனுக்குச் சப்போர்ட் பண்ணியிருந்தால் அப்பிடியே 13 ஆவதையும் ஒரு மாதிரி அவரைக்கொண்டே சீராக ஒப்பேற்றியிருக்கலாம்.
அதைப்போல இப்ப கூட ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தது. அதையும் மகிந்தரே கையில எடுத்துக்குடுத்திருக்கிறார். ஆனால், விக்கியண்ணை தன்ரை ஆக்களை நினைச்ச பயக்கெடுதியில அப்படியே கீழ போட்டு உடைச்சிட்டு நிக்கிறார்.
இப்ப விக்கியண்ணை டில்லிக்குப்போயிருந்தால் மகிந்தரை வைச்சே மோடியரை மடக்கியிருக்கலாம்.
ஆனால் என்ன செய்யிறது? உதெல்லாம் சரிப்பட்டு வராது. நாங்கள் தனிய மோடியரைச் சந்திப்பம். இப்ப மகிந்தர் எங்களை வைச்சுத் தன்ரை காரியத்தைப் பாக்க ட்ரை பண்ணிறார். உதுக்கு நாங்கள் இடங்குடுக்க மாட்டம். தான் இந்தியாவுக்குப்போறதுக்கு தமிழ்நாட்டில எதிர்ப்பிருக்கிறதால, இப்பிடி விக்கியரையும் கூட்டிக் கொண்டு போனால் அந்த எதிர்ப்பைச் சமாளிச்சிடலாம் எண்டு யோசிக்கிறார். இதுக்கு நாங்கள் பலியாக மாட்டம் எண்ட மாதிரி ஒரு கணக்கை வைச்சுத்தான் மகிந்தற்ற அழைப்பை விக்கியர் மறுத்திருக்கிறார்.
இதுக்கு நாங்கள் என்னதான் செய்ய ஏலும்? 'கெடு குடி சொல் கேளாது' எண்டு எங்கட முன்னோர் சொன்னதில தப்பே இல்லை.
தமிழர்களுக்கு ஆர்தான் நல்லதைச் சொன்னாலும் அவை அதை ஒருக்காலும் கேட்க மாட்டினம்.
அது ஒரு தனிக்குணம். பிறவிக்குணம் எண்டும் அதைச் சொல்லலாம். ஏன் தமிழர்கள் உலகிலேயே அதிசயமான ஒரு கூட்டம் லி 'தனிப்பிறவி'யள் எண்டு கூட எண்ணத்தோன்றுது.
என்னதான் நல்லது கிடைச்சாலும் அதை வாங்கவோ, வைச்சிருக்கவோ தெரியாது தமிழாக்களுக்கு.
கிடைக்கிற வாய்ப்புகளை வைச்சே நன்மைகளை அடையத்தெரியாது. சும்மா வெத்து வேட்டிப் பேச்சுப்பேசத்தான் தெரியும்.
மோடி என்ன எங்கட சித்தப்பாவின்ரை பிள்ளையா... நாங்கள் நினைக்கிறதெல்லாத்தையும் அள்ளித்தரவும் அனுமதிக்கவும்?
டில்லிக் கோட்டையின்ரை கோடி கிழிப்புக்கு மாறி அவர் ஒரு நாளும் சிந்திக்க மாட்டார். தலையாட்டவும் மாட்டார். இதையெல்லாம் விளங்கக் கூடியமாதிரி இருந்தால் தமிழ்க்குடி ஏன் இன்னும் இப்பிடிக் கிடந்து சீரழியுது?
இதாலதான் ிஇந்தப் பேய்குணத்தாலதான் இந்த மூத்த குடி மூதேவிக்குடியாக இருக்கு.
- வடபுலத்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக