இப்போதெல்லாம் டெராபைட் அளவுகளில் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்பட்டாலும், பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறித்த பிரச்னை தலை தூக்குகிறது. எந்த ட்ரைவில் இடம் உள்ளது? ஏன் இந்த ட்ரைவில் இவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது? காலி இடம் கொஞ்சமாக உள்ளதே? என்ற கேள்விகளெல்லாம் நம்மை ஆக்ரமிக்கின்றன.
இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் மற்றும் உருவாக்கும் பைல்கள் மட்டுமின்றி, நாம் ஹார்ட் டிஸ்க்கினை நிர்வகிக்கும் செயல்பாடுகளும் தான். அதிக அளவில் இடம் உள்ளதே என்ற எண்ணத்தில், தேவையற்ற புரோகிராம்களையும் பைல்களையும் நீக்காமல் விட்டுவிடுகிறோம்.
பின், ஒரு நிலையில், எதனை நீக்குவது, எதனை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்திற்கு ஆளாகிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் ஹார்ட் டிஸ்க்கின் நிலை குறித்து தெரிவிக்கும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த புரோகிராமான TreeSize Free குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த புரோகிராம், நம் ஹார்ட் டிஸ்க்கின் இடம் எப்படி அதற்குள் நிறைய பதிவாகிவிட்டது என்று காட்டுகிறது. எங்கு இடம் உள்ளது என்றும் காட்டுகிறது.
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போல்டர் ஒன்றின் அளவினையும், அதில் உள்ள துணை போல்டர்களின் அளவினையும் காணலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் காட்டும் வகையிலேயே காட்டுகிறது. அதிக இடத்தைக் கொண்டுள்ள போல்டர்கள் பார்கள் வடிவில் காட்டப்படுவதால், எளிதாக, எது அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் பார்த்த நிலையிலேயே உணரலாம்.
இதனை தனி ஒரு பைல் நிலையிலும் காணலாம்.
இதில் தரப்பட்டுள்ள filters வழியாக, குறிப்பிட்ட வகை பைல்கள் மட்டும் எடுத்துக் கொண்டுள்ள இடத்தை அறியலாம்.
ஸ்கேன் செய்து காட்டுகையில் column view என்று ஒரு காட்சித் தோற்றம் கிடைக்கிறது. இது ஒவ்வொரு பைல் மற்றும் போல்டர் சார்ந்து அதன் அளவு, பைல் எண்ணிக்கை, இறுதியாக பைல் ஒன்றைப் பார்த்த நாள், பைலை உருவாக்கியவரின் பெயர் எனப் பல பயனுள்ள தகவல்கள் காட்டப்படுகின்றன.
ட்ரீ சைஸ் ப்ரீ புரோகிராம், MFT (Master File Table) இருந்தே செயல்படுவதால், ஸ்கேன் செய்யப்படுகையிலேயே, முடிவுகளையும் பார்க்கலாம்.
புரோகிராம் தொடர்ந்து பின்னணியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். இந்த அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளாகவே, பைல்களை இழுத்து சென்று அமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இந்த புரோகிராம் விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, பின்னர் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கத்திலும் செயல்படுகிறது. இதனை https://www.jamsoftware.com/treesize_free/ என்ற முகவரியிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒவ்வொன்றுக்குமாக இந்த புரோகிராம் கிடைக்கிறது. சரியான புரோகிராமினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக