திங்கள், 12 மே, 2014

இராணுவத்தை தமிழ் யுவதியுடன் சம்பந்தப்படுத்தி வதந்தி!(படங்கள் இணைப்பு)

இலங்கை இராணுவத்தில் தமிழ் யுவதிகள் சேருகின்றமைக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பொய்ப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளன.



இதில் ஒன்றாகவே முல்லைத்தீவில் வல்லுபுரம் பிரதேசத்தில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் மிகவும் சூட்சுமமான முறையில் திரிக்கப்பட்டு உள்ளது.

இதன் உண்மைத் தன்மையை உணராது ஆங்கில, சிங்கள, தமிழ் ஊடகங்கள் இராணுவத்தில் மனைவி சேர்ந்தமையால் கோபம் அடைந்த கணவன் மனைவியை படுகொலை செய்து விட்டு, தற்கொலை செய்து உள்ளார் என்று பரவலாக செய்தி வெளியிட்டு உள்ளன.

யுவதி இராணுவத்தில் சேர்கின்றமைக்கு விண்ணப்பித்து இருந்தார் என்பது உண்மைதான். ஆயினும் இவர் இரு குழந்தைகளின் தாய். இதனால் இராணுவத்தில் சேர்கின்ற அருகதை இவருக்கு கிடையாது. இதனால் இவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கணவனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இடம்பெற்று வந்திருக்கின்றது. கணவனால் துன்புறுத்தப்படுகின்றார் என்று மனைவி புதுக்குடியிருப்பு பொலிஸில் முறையிட்டு இருந்தார். கணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும் உள்ளார்.

கொலையாளிக் கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக நண்பர்களுக்கு இந்நபர் சொல்லி இருக்கின்றார். ஆண் யாருடனாவது மனைவியை பார்க்க நேர்ந்தால் தகவல் தரும்படி கேட்டு இருக்கின்றார்.

ஆண் ஒருவருடன் மனைவியை சம்பந்தப்படுத்தி தொலைபேசி அழைப்பு ஒன்று இவருக்கு நேற்று வந்து உள்ளது. இதை உண்மை என்று நம்பியே கணவன் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து உள்ளார்.

திரிபுபடுத்தப்பட்ட பொய்ச் செய்திக்கு பின்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட ஊடகங்களே பின்னால் உள்ளன என்று தெரிகின்றது.

கொல்லப்பட்ட மனைவி

இவர்களுக்கு இரு குழந்தைகள். ஒன்றுக்கு 04 வயது. மற்றதுக்கு 02 வயது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி
மரண வீடு

தாய்நாடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல