முதலமைச்சர் விக்கிக்கு மீண்டும் நெஞ்சுக்குத்தோ முதுகுவலியோ வயிற்றிலயோ வாயிலயோ கட்டியோ என்ன நாசமோ... அறியேன்...
ஆனால், பாவம் முதலமைச்சர், மாகாணசபையில் இருக்கிறதுக்குப் பதிலாக மருத்துவமனையில படுத்திருக்கிறார்.
முந்தியொருக்கால், மந்திரிசபைக்கூட்டத்துக்கு வாறன் எண்டு கொழும்பில சொல்லிப்போட்டு வந்து இஞ்ச அனுமதிகிடைக்காமல் சிக்குப்பட்டதால நெஞ்சுக்குத்தெண்டு ஆஸ்பத்திரிக்குப் போனவர். இப்ப சாவகச்சேரியில மேதினக்கூட்டத்தில் பேசினதால் வந்த பிரச்சினையைச் சமாளிக்க ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறார்...
மாகாணசபைக்கு வாறதுக்கு முதல்ல மனிசன், உயர் நீதிமன்றத்தில் நிம்மதியாக இருந்தார். கொஞ்சம் ஆன்மீகம். கொஞ்சம் கம்பன் கழகம். கொஞ்சம் தமிழ்ப்பற்று எண்டு அங்குமிங்குமாகச் சந்தோசமாகத் திரிஞ்சார்.
மனிசனுக்குச் சனியன் பிடிச்சமாதிரி இந்த அரசியல் ஆசை வந்திது, பாருங்க, அதோட நெஞ்சுக்குத்து, தலையிடி, முதுகுவலி எண்டு ஏராளமான தொல்லைகளும் வியாதிகளும் வந்திட்டுது.
'தானுண்டு, தன்ர பாடுண்டு எண்டு கொழும்பில சும்மா குளுகுளு எண்டிருந்த மனிசனைத் திட்டம்போட்டுக் கொண்டு வந்து இந்த அரசியல் சேத்துக்குள்ள தள்ளிவிட்டிருக்கிறாங்கள்' எண்டு விக்கியற்றை மனிசிக்காறி பேசிறதில என்ன பிழை சொல்லுங்கோ பாப்பம்?
அவ சொல்லிக் கவலைப்படுகிறதைப்போல, விக்கியர் கொழும்பில சிங்கள ஆட்களோடயும் தமிழ், முஸ்லிம் ஆக்களோடயும் இன மத பேதங்களெல்லாம் இல்லாமல் - வேறுபாடு, வித்தியாசமெல்லாம் இல்லாமல் பழகினவர்.
தன்ரை பிள்ளையளைக் கூட இன மத பேதமில்லாமல் கலியாணம் கட்டி வைச்சவர்.
இப்பிடியெல்லாம் இருந்த மனிசன், இந்தச் சேத்துக்குள்ள (அரசியலுக்குள்ள) குதிச்சதுக்குப்பிறகு, என்னமாதிரியெல்லாம் கதைக்கிது? வாய்க்கு வந்தமாதிரிக் கதைச்சு தேவையில்லாத வியாதிகளை எல்லாம் வாங்கிக் கொண்டிருக்குது...
அரசியல்ல குதிச்சால் நல்லாக் குத்துக்கறணம் அடிக்கத் தெரியோணும். கொஞ்சக்காலத்துக்கு முதல்ல சுமந்திரன் தம்பியும் இப்பிடித்தான் குத்துக்கறணம் அடிக்கத்தெரியாமல், கொஞ்சம் நிதானமாக நடந்து பார்த்தார். அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்தினாங்கள், அவற்றை சகபாடிகளான கூட்டமைப்புக்காறரும் புலிக்குப்பயந்து அந்த நாளையில புலம்பெயர்ந்து போய்ப் பின்னாளில தமிழ்த்தேசியவாதிகளாகவும் புலிவிசுவாசிகளாகவும் மாறின ஆட்களும் பத்திரிகைக்காறரும்.
கொஞ்சம் நிதானமாகச் சுமந்திரன் நடக்கேக்க அவரைப்பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் பலரிடத்திலயும் இருந்திது. இந்த இனப்பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு ஒரளவுக்குப் பொருத்தமாகச் சிந்திக்கக் கூடிய ஆள் சுமந்திரன் எண்டு தமிழாட்கள் மட்டுமில்லைச் சிங்கள ஆட்களும் கதைச்சவை.
ஆனால், பன்றியோட கூடின பசுவும் மலம் அளையும் எண்டமாதிரி சுமந்திரனும் மற்றவையின்ரை அலைவரிசைக்குள்ள போய் விழுந்து தன்னைப்பழுதாக்கிப்போட்டார். இப்ப அவற்ற மதிப்பும் மரியாதையும் போட்டுது. அரியநேத்திரனுக்கும் சுமந்திரனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை எண்ட அளவுக்கு மச்சான் இறங்கீட்டார்.
இதில கெட்டிக்காரன் அரியநேத்திரனும் சிறிதரனும்தான். இவையள் ரண்டு பேரையும் இன்னும் இவையைப்போல விசுக்கோத்துத்தனமாகக் கதைச்சுக்கொண்டிருக்கிற ஆட்களையும் தன்ரை லெவலுக்கு சுமந்திரன் ஏத்தியிருக்கவேணும்.
ஆனால், கதை மாறித்தான் நடந்திருக்கு. அரியநேத்திரன், சிறிதரன் ஆட்கள் தங்கட லெவலுக்குச் சுமந்திரனைக் கொண்டந்திட்டாங்கள்.
இதில வலு கெட்டிக்காரர் ஆரெண்டு சொல்லுங்கோ பாப்பம்...?
இப்பிடித்தான் இப்ப விக்கியற்றை கதையுமிருக்கு. அரசியல்ல (சேத்தில) குதிச்ச பிறகு, மாகாணசபைக்கு வந்த பிறகு, விக்கியருக்கு என்ன கதைக்கிறது? எப்பிடிக் கதைக்கிறது? என்ன செய்யிறது? எப்பிடிச் செய்யிறது? எண்ட ஒண்டும் விளங்கவேயில்லை.
பிரபாகரன் மாவீரன் எண்டால் பழைய நண்பர்கள் முகத்தைச் சுழிக்கினம். ஏன், விக்கியற்றை வீட்டுக்குள்ளயே இதைக் கேட்டு முகத்தைச் சுழிச்சிருக்கினம். எட இவையெல்லாம் இப்பிடி முகத்தைச் சுழிக்கிறம் எண்டுபோட்டு கொஞ்சம் மாத்தி பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி எண்டால் மற்றாக்கள் (புதிய கூட்டாளிகள்) சீறிப்பாயினம்.
அப்பிடியெண்டால் என்னதான் செய்யிறது? இதுக்குள்ள கிடந்து மல்லுக்கட்டிறதை விட பேசாமல், நெஞ்சுக்குத்து, வயிற்றுவலி, தலையிடி, முதுகில கட்டி எண்டு ஆஸ்பத்திரியில நிம்மதியாக் கிடக்கலாம் எண்டு நினைச்சிருக்கிறார்..விக்கியர்.
ஆனால், 'முதலமைச்சருக்கு இந்த வருத்தங்களை விட ஆளுக்குத் தலையுக்குள்ளதான் ஏதோ பிரச்சினைபோல. இந்தத் தலைப் பிரச்சினையாலதான் ஆளுக்கு ஆயிரம் தொல்லைகள்' எண்டு சொல்கிறார் அவருடைய அனுதாபி ஒருதர்.
இன்னொரு அனுதாபி சொல்லிறார், 'அவற்றை வாயாலதான் பிரச்சினை. இந்த வாயிலதான் சனியன் குடியிருக்கு. அதுதான் அவரைப்போட்டுலைக்குது எண்டு....
- வடபுலத்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக