வெள்ளி, 9 மே, 2014

புலிகள் குறித்த அமெரிக்க அறிக்கையால் உஷார்!

 LTTE attack on BIA
புலிகள் இயங்கி வருகின்றனர், சில புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்து நிதி பெறுகின்றனர் என்பதை அண்மைய அறிக்கை ஒன்றின் மூலம் அமெரிக்கா தெளிவாக குறிப்பிட்டு உள்ளது என இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான அமெரிக்க அறிக்கை புலிகள் இப்போதும் சர்வதேச நாடுகளுக்கு மாத்திரம் அன்றி இலங்கைக்கும் பேராபத்தாக உள்ளனர் என்று வெளிப்படுத்தி உள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வன்னியசூரிய தெரிவித்து உள்ளார்.

சர்வதேச தொடர்புகள், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகியவற்றில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் புலிகள் ஆயுத கொள்வனவு, தொடர்பாடல், நிதி, ஏனைய தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்று அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது.

புலிகள் மீள புத்துயிர் பெறுவது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய பிரச்சினை!


தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் மீள புத்துயிர் பெறுவது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய பிரச்சினையாக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டேலி தெரிவிக்கினறார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல