யாழ்ப்பாணத்தில் சிவாஜி மீண்டும் பிறப்பு, அதிர்ச்சித் தகவல் என்கிற தலைப்பில் நியூ ஜவ்னா இணையத் தளத்தில் வெளிவந்த பத்தி இது.
காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரிக்கின்றோம்.
“ கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த இரகசிய ஆவணம் ஒன்றில் மிகவும் துணிச்சலான அரசியல்வாதி என்று கே. சிவாஜிலிங்கம் வர்ணிக்கப்பட்டு இருந்தார்.
சில வருடங்களுக்கு முன் புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு ஒன்றில் நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரம்பாகு கருணாரட்ண பங்கேற்று திரும்பியபோது பல்லாயிரக் கணக்கான தென்னிலங்கை மக்களால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து முற்றுகை இடப்பட்டார். அப்போது அதிரடியாக சிவாஜிலிங்கம் வாகனத்தில் புறப்பட்டு விமான நிலையத்துக்கு சென்றார். இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் இப்படியொரு சம்பவம் இவருக்கு நேர்ந்து இருந்தால் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியை எடுத்து ஆட்களை சுட்டு இருப்பார் என்று பகிரங்கமாகவே தெரிவித்த வீரன்......
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனின் அம்மா பார்வதி இறந்தபோது பிரபாகரனின் சகோதரர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசோடு இராஜதந்திர பேச்சு நடத்திய சாணக்கியன்.......
சிவாஜிலிங்கம் குறித்து இவரின் ஆதரவாளர்கள் பெருமிதத்தோடு நெஞ்சு நிமிர்த்தி கூறுகின்ற விடயங்கள் இவை.
ஆனால் நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜியையும் மிஞ்சி விட்டார் சிவாஜிலிங்கம்.
இவர் 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இந்திய புலனாய்வுத் துறையான ரோ அமைப்புக்கு உளவாளியாக செயற்பட்டு இருக்கின்றார். இதற்காக ரோவிடம் சம்பளமும் பெற்று உள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது பிரபாகரனின் உறவினர் என்று சொல்லி பலரின், கையிலும் , காலிலும் விழுந்து உள்ளே நுழைந்தார்.
அப்போது சிவாஜிலிங்கம் குறித்து தலைவர் பிரபாகரன் சக தளபதிகளுக்கு சிவாஜிலிங்கம் கொள்கைப் பிடிப்பு இல்லாதவன், சந்தர்ப்பவாத பச்சோந்தி, நய வஞ்சம் நிறைந்தவன், தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு காலத்தில் உடைப்பான், இவன் குறித்து மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேர்ந்த சிவாஜிலிங்கம் ரோ அமைப்புக்கு தகவல் கொடுக்கின்ற வேலையை நிறுத்திக் கொண்டார். இதனால் இந்திய அரசின் கோபத்துக்கும் ஆளானார். இதனால்தான் இராஜதந்திர கடவுச்சீட்டுக்காரராக இருந்தும் இரு தடவைகள் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு துரத்தப்பட்டார்.
இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேர்ந்த காலம் தொட்டு புலிகளின் உளவாளியாக செயற்பட்டார். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் குறித்து புலித் தலைமைக்கு அள்ளிப் போட்டார்.
சரி. இவர் புலித் தலைமைக்கு விசுவாசமாக இருந்தாரா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. புலித் தலைமையை சிங்கள அரசுக்கு காட்டிக் கொடுக்கின்ற பணியில் ஈடுபட்டு ரொக்கப் பணம், சலுகைகள் ஆகியவற்றை பெற்று வந்திருக்கின்றார்.
இவர் தமிழ் மக்களுக்காவது விசுவாசமாக இருந்தாரா? இல்லவே இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி ஆக்குகின்றமைக்காக நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் மூடிய அறை ஒன்றுக்குள் வைத்து சட்டத்தரணி ஒருவருடன் சேர்ந்து அரச தரப்புடன் பேரம் பேசினார். இவரின் கைகளுக்கு பணப் பெட்டி மாறியது. இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து தேர்தலில் நின்றார். அப்போது இதை ஊடகவியலாளர் என். வித்தியாதரன் போன்றோர் தமிழின துரோகம் என்று கோடி காட்டி இருந்தனர். ஆனால் இவரால் 0.09 வீத வாக்குகளை மாத்திரம் தேர்தலில் பெற முடிந்தது.
இவர் உறவுக்காரர்களான பிரபாகரன் குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தாரா? பிரபாகரனின் தாயின் பாதுகாவலர் என்று சொல்லி சுயம் வரித்துக் கட்டிக் கிளம்பிக் கொண்டார். இதிலும் இவரின் சுயநல புத்திதான் பின்னால் உள்ளது. பிரபாகரனின் தாயின் பெயரால் பல ரொக்க பணத்தை புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து அறவிட்டு இருந்தார். சுனாமி வந்தபோது சுனாமி நிவாரண நிதி என்கிற பெயரில் இவரால் பல நிறுவனங்களிடம் இருந்து சுருட்டப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது? என்பது இன்னமும் தெரியவில்லை.
இவர் எப்போதுமே குழப்பவாதியாகவே நடந்து வந்திருக்கின்றார். ரெலோ அமைப்பிலும் இவர் குழப்பவாதியாகவே நடந்து கொண்டார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு இவரை இப்பகுதி மக்கள் தெரிவு செய்து அனுப்பினர். ஆனால் இவர் எந்தவொரு ஆக்கபூர்வ விடயத்தையும் நகர சபை செய்ய அனுமதிக்காமல் குழப்பிக் கொண்டே இருந்தார்.
வட மாகாண சபை உறுப்பினராக தெரிவானபோது முந்திரிக் கொட்டையாக முண்டியடித்து சென்று முள்ளிவாய்க்காலில் மடிந்த பொதுமக்கள், மாவீரர் ஆகியோரின் சமாதிக்கு முன்பாக சிங்கள அரசுக்கு சத்திய வாக்குறுதி ஒன்றை செய்து கொடுத்தார். இலங்கைக்கும், அரசுக்கும் விசுவாசமாக நடப்பார் என்பதை சத்தியப் பிரமாணம் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஆனால் இவர் நடந்து வந்த, கடந்து வந்த பாதையால் யாருக்கு விசுவாசமாக செயற்பட்டு உள்ளார்? என்பதை இவர்தான் வெளிப்படுத்த வேண்டும். மட்டும் அல்லாமல் இது வரை இவர் சாதித்தது என்ன? என்பதை இவர் சுய விமர்சனம் செய்ய வேண்டும்.
பிராயச்சித்தம் செய்ய விரும்புவாராக இருந்தால் அரசியலில் இருந்து விலகி இவர் இளையவர்களுக்கு வழி விட வேண்டும். ....”
தாய்நாடு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக