புதன், 25 ஜூன், 2014

வெற்றியடைய வைச்சவையைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு ஒரு தும்புத்தடியைத் தன்னும் வாங்கியிருப்பினமா?

சிலபேரை எந்த மாதிரியான கெட்டிக்காரராலும் திருத்தவே முடியாது எண்டு சொல்லுவினமல்லோ... அதை மாதிரி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள்ள இருக்கிற ஐஞ்சாறு வாத்திமாரையும் (சத்தியமாக இவை விரிவுரையாளர்களே இல்லை.) திருத்தவே ஏலாது.

ஏனெண்டால், இந்தப் பல்கலைக்கழகத்தை நாசமறுக்கிறதுக்கெண்டே இவையள் எப்ப பார்த்தாலும் ஏதோ ஒரு குழப்பத்தைச் செய்து கொண்டிருப்பினம்.

ஒண்டில் சும்மா இருக்கிற பெடியளைத் தூண்டி வில்லங்கமாக எதையாவது செய்ய வைப்பினம்.

இல்லையெண்டால், தாங்கள் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து துலைப்பினம்.

தாங்கள்தான் ஏதோ இனப்பற்றாளர்கள், விடுதலை விரும்பிகள் எண்ட கணக்கில அறிக்கை விடுவினம்.

ஆனால், பல்கலைக்கழகத்தின்ரை வளர்ச்சிக்கோ நன்மைக்கோ படிக்கிற பெடி பிள்ளையளின்ரை முன்னேற்றத்துக்கோ இவை ஒண்டையும் செய்யிறதில்லை.

ஆனா, வெளியில பார்த்தால் ஏதோ இவைதான் பென்னாம் பெரிய புரட்சியாளர்கள் எண்ட மாதிரியும் தியாகிக்களைப் போலவம் போராளிகளைப் போலவும் தற்கொலைப்படைக்கே தயங்காத உயிர்க்கொடையாளிகள் எண்ட மாதிரியும் பீலா காட்டுவினம்.

என்ன செய்யிறது... இந்த மாதிரிப் பச்சைப் பொய்யர்களின்ரை காலமல்லோ... இது.

இந்த மாதிரியான பொய்யர்கள்தான் இப்ப எங்க பாத்தாலும் எல்லாத்துக்கும் கொடியேத்திக்கொண்டிருக்கினம்... இதைவிடப் பென்னாம் பெரிய பொய்யர்கள்தான் ஊர்வலத்தில போகினம். இவையளுக்குத்தான் பேர்பர்களிலயும் முதல் பக்கங்களைக் குடுக்கினம். இப்பிடிப் பச்சைப் பொய்யர்களுக்குத்தான் சனங்களும் தங்கட வாக்குகளை நல்லா அள்ளிப் போடுதுகள். இதால எங்க பார்த்தாலும் பொய்யர்களின் கொண்டாட்டம்தான்.
இப்ப பாருங்கோ, இந்தப் பொய்யர்களின்ரை விளையாட்டொண்டை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்ர விழாக்களுக்கோ கொண்டாட்டங்களுக்கோ இனிமேல் ஆரையும் அழைக்கிறதெண்டால், அது ஜனாதிபதியாக இருக்கோணும். இல்லையெண்டால், உயர்கல்வி அமைச்சராக இருக்கோணும். அதுவும் இல்லையெண்டால், கூடுதலான மக்களின்ரை ஆதரவைப்பெற்றவையாக இருக்கோணும் எண்டு ஒரு அறிவிப்பை இந்தப் 'பச்சைப் பொய்கள்' சொல்லியிருக்கினம்.

இவை இப்பிடி ஒளிச்சு மறைச்சு என்னத்தைச் சொல்ல வருகினம் எண்டு உங்களுக்கு விளங்கியிருக்கும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காரரைத்தான் இனிமேல் பல்கலைக்கழகத்தின்ரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் கூப்பிட வேணும் எண்டதை இப்படிச் சொல்லியிருக்கினம்.

இதை இவை வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். அப்பிடியே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையோ இல்லாட்டி அவற்றை ஆட்களையோ கூப்பிட வேண்டாம் எண்டும் வெளியாகச் சொல்லியிருக்கலாம்.

ஆனால், அப்பிடிச் சொல்லிறதுக்கு நெஞ்சில கொஞ்சமாவது தைரியம் வேணும்.

ஏனெண்டால், இவைக்கு நல்லாய்த் தெரியும் தமிழ்க் கூட்டமைப்புக்காரர் இந்தப் பல்கலைக்கழகத்துக்காக ஒரு மசிரைக் கூடப் புடுங்கேல்லை எண்டதைப்பற்றி.

போனவருசம் கூட மருத்துவ பீடத்துக்கான விசேட பிரிவுக்கு முழு ஏற்பாட்டையும் செய்தது அமைச்சர் தேவானந்தாதான்.

இதுக்குக் காணியே இல்லாமல் என்ன செய்யிறது எண்டு இந்தப் பல்கலைக்கழகத்தின்ரை நிர்வாகம் தடுமாறிக்கொண்டிருக்கேக்க, மின்சாரசபைக்குச் சொந்தமான காணியை அவையோட பேசி இணக்கங்கண்டு, பல்கலைக்கழத்துக்கு அதை வாங்கிக் குடுத்ததும் டக்ளஸ் தேவானந்தாதான்.

இந்தப் பல்கலைகழகத்தின்ரை விவசாய பீடத்துக்கும் பொறியியற் பீடத்துக்கும் கிளிநொச்சியில 570 ஏக்கர் காணியை எடுத்துக் குடுத்து, அங்க பொறியியற் பீடத்தை ஆரம்பிச்சு வைச்சதும் அமைச்சர்தான். அங்க விவசாய பீடத்தைக் கொண்டு போங்கோ எண்டு சொல்லி அதை அங்கேயே அனுப்பி வைச்சதும் அவர்தான்.

வன்னியில போர் முடிஞ்சபிறகு, முகாமிலயிருந்த மாணவர்களை அரசாங்கத்தோட கதைச்சு வெளியில எடுத்துக் கொண்டு வந்து, படிக்கிறதுக்கான உதவிகளைச் செய்து விட்டதும் இந்த டக்ளஸ் தேவானந்தாதான்.

இப்பிடியே நாங்கள் சொல்லிக்கொண்டு போகலாம். இதெல்லாம் பொய்யோ புளுகோ இல்லை. நடந்த உண்மையான சங்கதியள்.

ஆனால், இந்த வாத்திமார் சொல்லுகிற கூடுதலான மக்களின் ஆதரவைப் பெற்ற ஆக்கள் இதில எதைச் செய்தவை. இல்லாட்டிக்கு இதுவரையில இந்தப் பல்கலைக்கழகத்துக்கு என்னத்தைச் செய்து கிழிச்சவை எண்டதை ஒருக்கால் சொல்ல வேணும். அதை நாலு சனம் அறியட்டும்.

இவ்வளவுக்கும் ஒவ்வொரு தேர்தல் வரேக்கயும் இந்த வாத்திமாரும் தண்ணியடிக்கிற கொஞ்சப் பெடியளுமாகச் சேர்ந்து (பெரும்பாலானவையள் இதில சேர்த்தி இல்லை) பல்கலைக்கழகத்தின்ரை பேராதரவை வழங்குகிறோம் எண்டு இந்தக் கூட்டமைப்புக்காரருக்குச் சார்பாகவே அறிக்கை விடுகிறவை. அதோட ராப்பகலாக ஊர் ஊராகத் திரிஞ்சு தேர்தல்வேலை வேற செய்யிறவை.

இப்பிடியெல்லாம் செய்து வெற்றியடைய வைச்சவையைக் கொண்டு பல்கலைக்கழகத்துக்காக ஒரு தும்புத்தடியை வாங்கியிருப்பினமா?

இவையாலதான் அருமந்த ஒரு பல்கலைக்கழகம் பாழடைஞ்சிருக்கு.

1974 இல இந்தப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கேக்க இதை வேண்டாம் எண்டு உண்ணாவிரமிருந்த கோஸ்டியின்ரை வாரிசுகள்தானே இவை. அப்பிடியெண்டால் வேற எப்பிடிச் சிந்திப்பினம்?

சுரைக்கொட்டையைத் தாட்டால் பூசினியா முளைக்கும்?

- வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல