வியாழன், 17 ஜூலை, 2014

துபாயில் பிரபல இந்திய தயாரிப்பாளர் குடும்பத்துடன் படுகொலை

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் துபாயில் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற தயாரிப்பாளர் சோபார்னிகா பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியதுடன் பல மலையாள படங்களை தயாரித்துள்ளார்.



மலையாள திரையுலகில் சிறப்பாக திகழ்ந்த இந்த பிரபல தயாரிப்பாளர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் வர்த்தக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தற்போது குடும்பத்தினருடன் துபாயிற்கு சென்றுள்ள அவரை கடந்த 10ம் திகதி முதல் அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்களது அழைப்பை சந்தோஷ் குமார் எடுக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் துபாய் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற பொலிசார் வீடு பூட்டியிருந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

அப்போது சந்தோஷ் குமார், அவரது மனைவி மஞ்சு மற்றும் மகள் கவுரி ஆகியோர் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

மேலும் கத்திக்குத்து காயங்களுடன் இருந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பொலிசார் தற்போது இவ்விடயம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல