வெள்ளி, 18 ஜூலை, 2014

புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியின் அவல வாழ்க்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவரின் இன்றைய அவல வாழ்க்கையை காட்டுகின்ற பதிவு இது.



யாழ்ப்பாணத்தில் கோப்பாய் வடக்கு, சூசையப்பர் கோவிலடியில் வசித்து வருபவர் மைதிலி. 1998 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் ஆயுத போராளியாக சேர்ந்தவர். கள முனையில் காயப்பட்டவர்.

குடும்ப வாழ்க்கையில் இப்போது ஈடுபட்டு வருகின்ற இவருக்கு 42 வயது. கணவர் எதிர்பார்த்து இராத விதமாக விபத்தில் சிக்கி கால்களில் காயப்பட்டுக் கொண்டார். இருப்பினும் வாழ்வாதாரம் எதுவும் அற்ற நிலையில் சில கூலிப் பணிக்ளை செய்கின்ற்மை மூலம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை ஈட்டுகின்றார்.

இவர்களுக்கு சிறிய வயதில் இரு குழந்தைகள். மைதிலியின் இளைய சகோதரி மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு வயது 35. செவிப் புலன் அற்ற இவருக்கு யாழ். போதனா வைத்தியசாலையால் செவிப் புலக் கருவி வழங்கப்ப்ட்டு உள்ள்து. ஆனால் இக்கருவியின் பற்றரி தற்போது செயல் இழந்து விட்டது. புதிய பற்றரி வாங்க வெறும் 300 ரூபாயே தேவை. ஆனால் இதற்கு திராணி அற்றவர்களாக உள்ளனர். சகோதரியையும் மைதிலியே பராமரித்து வருகின்றார்.

இவர் ஆஸ்பத்திரி, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் போன்றவற்றில் கடந்த காலங்களில் தொண்டராக கடமை ஆற்றி உள்ளார். கல்விப் பொது தராதர சாதாரண தரம் வரை படித்த இவருக்கு எந்தவொரு பாடத்திலும் சித்தி அடைய முடிந்து இருக்கவில்லை. இதனாலும், இவரது வயது போன்ற காரணிகளாலும் இவருக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை. குடும்ப நிலை காரணமாக சுகாதார தொழிலாளியாக கடமை ஆற்றுகின்றமைக்குக்கூட தயாராக உள்ளார்.

குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற காரணத்துக்காக இவருக்கு இராணுவ தொண்டர் படையில் சேர முழு விருப்பம். ஆனால் திருமணமானவர், வயதுப் பிரச்சினை ஆகிய காரணங்களால் இவருக்கு இவ்வாய்ப்பும் குதிரைக் கொம்பாகவே உள்ளது.

தனியார் துறையிலும் சரி, சுய தொழிலிலும் சரி ஈடுபடுகின்றமைக்கும் இவர் தயாராகவே உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல