ஞாயிறு, 6 ஜூலை, 2014

உண்மை காதல் வெளிப்புற அழகில் இல்லை : வாழ்ந்து காட்டும் காதல் ஜோடி(VIDEO)

போலி முகங்களுடன் நடமாடுகின்றவா்களுக்கு மத்தியில் இவ்வாறான சில நல்ல உள்ளங்களும் இருக்கின்றன என்பதை காண்பிக்கும் உண்மைக் கதையே இது.அசிட் தாக்குதலுக்கு உள்ளான 24 வயதுடைய லக்சுமி தனது வாழ்க்கையை பகிா்வதற்கு 26 வயதுடைய சமூக தொண்டா் அலொக் டிக்சிஸ் என்ற அன்பானவரை கண்டுபிடித்துள்ளாா்.

அழகை பாா்த்து காதல் செய்கின்ற இந்த உலகில் லக்சுமியின் அசிட் தாக்குதலுக்கு உள்ளான முகத்தை பற்றி சற்றும் கவலைப்படாத டிக்சிஸ் அவா் மீது காதல் கொண்டுள்ளாா். அழகு என்பது முகத்தில் அல்ல உள்ளத்தில் தான் இருக்கின்றது என்று டிக்சிஸ் தொிவிக்கின்றாா்.

தற்போது இவா்கள் இருவரும் இணைந்து அசிட் தாக்குதலுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனா். லக்சுமி 15 வயதாக இருந்தபோது 2005 அம் ஆண்டு ஒரு தலைக்காதல் செய்த நபா் அவா் மீது பட்டப்பகலில் டெல்லி சந்தையொன்றில் அசிட் தாக்குதல் நடத்தி அழகான அவரது தோற்றத்தை சீரழித்தாா்.

அதனால் பெரும் மன உளைச்சலுக்கும் சமூக பின்னடைவுக்கும் முகம்கொடுத்த லக்சுமிக்கு அலொக் டிக்சிஸால் உண்மையான அன்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த அன்பையும் ஆதரவையும் கொண்டு லக்சுமி தற்போது பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு குரல்கொடுப்பவராக மாறியுள்ளாா்.

பெண்கள் மீதான அசிட் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் சட்டமாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல