தற்கொலை செய்து கொள்ளும் முகமாக மருத்துவமனையொன்றின் 11ஆவது மாடி ஜன்னலால் குதித்த பெண்ணொருவர் கீழே நிறுத்தப்பட்டிருந்த வேனொன்றின் மீது விழுந்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஸெஜியாங் மாகாணத்தில் தெய்ஸொயு நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான விஜயம் செய்த பெண்ணே இவ்வாறு மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.
வேனின் மீது விழுந்த அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்த போதும் அவரது உயிருக்கு எதுவித ஆபத்துமில்லை என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட வேனின் உரிமையாளரான யாங் விபரிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயாரை பார்ப்பதற்காக அருகில் நிறுத்தி விட்டு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அந்தப் பெண் குதித்த போது தாம் வேனில் இருக்காமல் தப்பியுள்ளதை தமது அதிர்ஷ்டமாக உள்ளதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக