வியாழன், 11 செப்டம்பர், 2014

ஹெயார் டிப்ஸ்

உருளைக்கிழங்கைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் ஒரு முட்டை மற்றும் தயிரையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலை முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடியின் அனைத்துப் பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.



நரைமுடி உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவும். உருளைக்கிழங்கின் தோலை மட்டும் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து, 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, அந்த நீரை ஷாம்புவுடன் கலந்து தலைமுடியில் தடவி, பிறகு நீரில் கழுவ வேண்டும். ஒருமுறை விட்டு ஒருமுறை தலைக்குக் குளிக்கும் போது இதைக் கடைப்பிடித்து வந்தால், உங்கள் கூந்தல் கருகருவென்று இருக்கும்.

உங்களுக்கு முடி நிறைய உதிர்கிறதா? இந்த முறையைக் கடைப்பிடியுங்கள். 3 ஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறு, 3 ஸ்பூன் கற்றாழைச் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து தலைமுடியின் வேர்களில் தடவவும். சுமார் 2 மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு முடியைக் கழுவவும். வாரத்திற்கு இரு முறை இது போல் செய்து வந்தால், முடி உதிர்வது விரைவில் நிற்கும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் உருளைக்கிழங்கை நன்கு சுத்தமாக கழுவி, தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல