புதன், 3 செப்டம்பர், 2014

பொதுமக்களின் 30 கோடி ரூபாய் பணத்துடன் வர்த்தகர் ஓட்டம்!

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் வசித்த பிரபல வர்த்தகர் ஒருவர் 30 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.



மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் சிகை அலங்கரிப்பு நிலையம்நடத்தி வந்த அந்தோனிப்பிள்ளை கருணாகரன்( வயது-37) என்பவரே இவர்.

இவர் இரும்பு வாணிபம் ஒன்றையும் நடத்தியதோடு சீட்டு பிடித்தும் உள்ளார். மக்களிடம் பணத்தை வாங்கி அதிக வட்டியும் வழங்கி வந்து உள்ளார்.

இந்நிலையில் இவரை நம்பி அதிகளவான வர்த்தகர்கள், அரச தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், பொது மக்கள் இவரிடம் சீட்டு போட்டனர். இவரை நம்பி பல இலட்சம் ரூபாயை வட்டிக்கு கொடுத்தவர்களும் உள்ளனர்.
பலர் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் வழங்கியும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில் மக்களுக்கு இவர் மேல் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இவரின் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன. .இவரை தேடிய மக்கள் கடைசியில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக இவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களால் இவரின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு விநியோகிக்கப்படுகின்றன.

Thainaadu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல