வெள்ளி, 7 நவம்பர், 2014

2 வயது குழந்தைக்கு மாரடைப்பு, அவசரமாக தரையிறங்கிய விமானம்

அமெரிக்காவில் விமானத்தில் செல்கையில் 2 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.



அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில தலைநகர் பாஸ்டனில் உள்ள புறநகர் பகுதியான நீதமைச் சேர்ந்தவர் தனது 2 வயது ஆண் குழந்தையுடன் பிட்ஸ்பர்கில் இருந்து பாஸ்டனுக்கு ஜெட்ப்ளூ விமானத்தில் வியாழக்கிழமை கிளம்பினார். விமானம் நடுவானில் பறக்கையில் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக லோகன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுயநினைவில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் நிலைமை பற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

விமானத்தில் இருந்த பெனிசில்வேனியாவைச் சேர்ந்த டாக்டர் தான் விமானம் தரையிறங்கும் வரை குழந்தையை கவனித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 2 வயது குழ்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது விமானத்தில் இருந்த பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல