தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வன்முறைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் நீதிமன்றில் அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி புதுடெல்லி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலான விசாரணைகளின் போது இவ்வாறு அரசாங்கம் தமது பக்க நியாயத்தை அறிவித்துள்ளது.
1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் இந்தியாவின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய ஆபத்து நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் ஐந்து ஆண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடையை நீக்குமாறு வை.கோ உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக