வியாழன், 6 நவம்பர், 2014

ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம்

Sylwia Rajchel died after she fell from a bridge in Spain while taking a ‘selfie.’
image: nydaily news
ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார்.


இன்றைக்கு செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. டேக் செல்ஃபி புள்ள என்று விஜய் பாடுவது பிரபலமானது கூட அதனால்தான். செல்ஃபியினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது.

ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார்.

இன்றைக்கு செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. டேக் செல்ஃபி புள்ள என்று விஜய் பாடுவது பிரபலமானது கூட அதனால்தான். செல்ஃபியினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது.

அங்கு திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற மருத்துவ மாணவி சில்வியா ராச்சேல் (23) மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது செல்ஃபோனில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது தவறி அங்கிருந்து 15 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிகழ்வை அடுத்து சுற்றுலா பயணிகளிடையே அங்கு சோகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேம்பாலத்தின் கீழே உள்ள குடால்க்வீர் நதிக்கரையில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

செல்ஃபி மனநோய்
 எங்கும் எதிலும் செல்ஃபி எடுக்கத் துடிப்பதும், அதற்கு இத்தனை லைக் வரும் என கணக்குப் போடுவதும் ஒருவகை மனநல பாதிப்பு என்றே சமீபத்தில் வகைப்படுத்தியிருக்கிறது அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன். இந்த பாதிப்பின் பெயர், ‘செல்ஃபிடிஸ்' என்கின்றனர் மருத்துவர்கள். இதுவரை பல செல்ஃபி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ரஷ்ய பெண்
 செனியா இக்னட்யேவா... 17 வயதே நிரம்பிய ரஷ்யப் பெண்தன் நண்பர்களை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக இந்த செஃல்பியை ஒரு பாலத்தின் மீதிருந்து எடுத்தார். அப்போது பேலன்ஸ் தவறி கீழே விழுந்து அடுத்த நொடியே இறந்துவிட்டார்.

விமானம் டேக்ஆஃப்
 மெக்ஸிகோவைச் சேர்ந்த பாப் பாடகியான ஜென்னி ரிவேராவும் அவர் நண்பர்களும் தங்களின் தனி விமானம் டேக் ஆஃப் ஆகும் முன் செல்ஃபி எடுத்தனர். துரதிர்ஷ்டவசமாக அந்த விமானம் விபத்துக்குள்ளாகி யாருமே பிழைக்கவில்லை.

காரில் செல்ஃபி
 கோர்ட்னி ஸ்டான்ஃபோர்டு என்ற அமெரிக்கப் பெண் தனது காரில் டிரைவ் பண்ணிக்கொண்டிருக்கும்போது இந்த செல்ஃபி எடுத்து தன் நண்பர்களுக்கு ஷேர் செய்தார். சில நிமிடங்களிலேயே அந்தக் கார் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார்.

நதிக்கரையில் செல்ஃபி
 13 வயதுச் சிறுமியான கரென் ஹெர்னாண்டஸ், மெக்ஸிகோவில் உள்ள ஒரு நதிக்கரையில் செல்ஃபி எடுக்க விரும்பினார். அப்போது தவறி ஆற்றில் விழுந்தவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

ரயில் பின்னணியில்
அசுர வேகத்தில் வரும் ஒரு ரயிலின் பின்னணியில் செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட நபரின் பெயர் மைக்கேல். ரயில் தொடாத தூரத்தில்தான் இவர் நின்றார். ஆனால், யதேச்சையாக கால் நீட்டிய ரயில் ஊழியர் இவரது தலையில் இடித்துவிட்டார். உயிருக்குப் போராடி இறந்தார் மைக்கேல்.

கார் மோதி விபத்து
திருமணத்துக்கு முந்தைய ஜாலி பார்ட்டிக்காக சென்ற இந்தத் தோழிகள், இந்த செல்ஃபியை எடுக்கும்போதே எதிரே வந்த கார் மீது மோதிவிட்டனர். இதில் கொலெட் மொரெனோ என்ற பெண் மட்டும் இறந்துவிட்டார். அவர்தான் மணமகள்!

ஆற்றின் நடுவே
ஹைதராபாத்தைச் சேர்ந்த 48 கல்லூரி மாணவர்கள் பீஸ் நதியின் நடுவே இந்த செல்ஃபி எடுக்கத்தான் போனார்கள். திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து பெரும்பாலானவர்களை அடித்துச் சென்றது நம் ஊரின் சோகம்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல