செவ்வாய், 30 டிசம்பர், 2014

விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட்

விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட் பயன்படுத்த முயன்றால், ஒவ்வொரு முறையும் இன்ஸ்டால் செய்திடக் கேட்கிறது. இன்ஸ்டலேஷனும் முழுமையாக மறுக்கிறது.



விண்டோஸ் 8.1 இயக்க முறைமையில், பேஸ்புக் விடியோ சேட் பிரச்னை தருகிறது . இது பலருக்குப் பிரச்னையாக உள்ளது. ஆனால், இவர்கள் அனைவரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களாக அறிகிறேன். எனவே, வீடியோ சேட் செயலியை, கூகுள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரில் பயன்படுத்திப் பார்க்கவும்.

நீங்கள் ஏற்கனவே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இல்லாமல், வேறு ஒரு பிரவுசர் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உங்களுக்குத் தீர்வாகச் சற்று சுற்றி வளைத்த வழி ஒன்று தருகிறேன்.

விண்டோஸ் 8 / 8.1ல், அப்ளிகேஷன் புரோகிராம்களை, முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்காக, compatibility mode முறையில் இயக்க வழி தருகிறது.

இதனைப் பெற, உங்கள் வெப் பிரவுசர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் விண்டோவில் “Compatibility” என்னும் டேப் செல்லவும்.

“Run This Program In Compatibility Mode.” என்று இருப்பதன் எதிரில் உள்ள செக் பாக்ஸில், டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும்.

மீண்டும் ட்ராப் டவுண் மெனு ஒன்று கிடைக்கும். இதில் கீழாகச் சென்று, Windows 8 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆக இருந்தாலும், பேஸ்புக் அப்ளிகேஷனை compatibility modeல் இயக்க அமைக்க வேண்டும்.

பிரவுசரில் “Tools” மெனு தேர்ந்தெடுக்கவும். “Comparability View Settings” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் கிடைக்கும் டெக்ஸ்ட் பாக்ஸில், “Facebook.com” என டைப் செய்திடவும். பின்னர் “Add” என்பதில் கிளிக் செய்திடவும்.

இந்த வழியிலும், பேஸ்புக் வீடியோ சேட் கிடைக்கவில்லை என்றால், அண்மையில் உங்கள் பிரவுசரில், நீங்கள் அறியாமலே பதித்த ஆட் ஆன் தொகுப்பு பிரச்னை தருகிறது என்று பொருள். அதனைத் தேடி அறிந்து நீக்கவும். பின்னர், பிரவுசரை மீண்டும் இயக்கி, வீடியோ சேட் இயக்கிப் பார்க்கவும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல