செவ்வாய், 30 டிசம்பர், 2014

எக்ஸெல் டிப்ஸ்... பைலை மறைக்கவும் திறக்கவும்

பைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது


ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.

சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.

இப்போது ஒரு சந்தேகம் உங்களூக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.

இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவெ அய்யோ போய்விட்டதே! என்ற கவலை வேண்டாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல