புதன், 28 ஜனவரி, 2015

தங்கச் சாமியாருக்கு விதிக்கப்பட்ட ரூ. 48 இலட்சம் அபராதத்தை அப்போதே செலுத்தினார்

தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார் 48 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார்.



அம்பிட்டிய கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தல் பிரபல சாமியராக இருக்கும் இவர், காளி தேவியின் அருள் கொண்டு அற்புதங்கள் மேற்கொள்பவராக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இதன் காரணமான இவரது தேவாலயத்திற்குச் சென்று அனேகர் தங்கமாக தமது காணிக்கைகளைச் செலுத்துவர். இவரது உடலில் சுமார் 20ற்கும் மேற்பட்ட கிலோ எடைகொண்ட தங்கம் அணிந்து கொண்டு, சர்வசாதாரணமாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் பல வருடங்களாக வருமான வரி செலுத்த வில்லை என தொடரப்பட்ட வழக்கில் கண்டி நீதவான் சிரிநீத் விஜேசேக்கர ரூபா 488 6840 அபராதத்தை விதித்தார்.

இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்தில் அப்பணம்முழுவதும் செலுத்தப்பட்டு அவர் விடுதலையாகியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல