செவ்வாய், 27 ஜனவரி, 2015

தனக்கு 61 வயது மகன் இருப்பதை 55 வருடங்கள் கழித்து அறிந்த நபர்

குழந்தை பாக்­கி­யமே இல்­லாது தனது வாழ்வு அஸ்­த­ம­ன­மாகப் போகி­றது என கவ­லை­ய­டைந்த நப­ரொ­ருவர், 1959 ஆம் ஆண்டு தனது மனை­வியால் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கடி­தத்தின் மூலம் தனக்கு 61 வயது மக­னொ­ருவர் உள்­ளதை அறிந்து இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளான சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.



டோனி திர­பனி (81 வயது) என்ற மேற்­படி நப­ருக்கு 1959 ஆம் ஆண்டு அவ­ரது முன்னாள் காதலி எழு­திய கடி­தத்தில், ''எனக்கு சிறிய மகன் இருக்­கிறான். அவ­னுக்கு இப்­போது 5 வய­தா­கி­றது. நான் கூறு­வது என்­ன­வென்றால், அவன் உங்கள் மகன். அவன் 1953 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பிறந்­துள்ளான்'' என எழு­தப்­பட்­டி­ருந்­தது.

அக்­க­டி­தத்தை குழந்தை பாக்­கி­ய­மற்ற டோனியின் மனைவி மறைத்து வைத்­துள்ளார்.

இந்­நி­லையில் அண்­மையில் தனது மனைவி இறந்து விட்­டதால் அவ­ரது கோப்­பு­க­ளிலி­ருந்த அலு­மா­ரியை டோனி சுத்­தி­க­ரிக்க முயன்ற போது, அந்த அலு­மாரி இழுப்­ப­றையில் தனது காத­லியால் எழு­தப்­பட்ட கடிதம் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளதை கண்டு திகைப்­ப­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தனது 61 வயது மக­னான சாமுவேல் சைல்ட்­ரெஸை அவர் தேடிக் கண்­டு­பி­டித்­துள்ளார்.

தனது தந்தை தன்னை வேண்டாமென ஒதுக்கியிருந்ததாக இதுவரை காலமும் கருதியிருந்ததாக சாமுவேல் தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல