செவ்வாய், 21 ஏப்ரல், 2015

22 - 25 வயது இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.....

1) உங்கள் காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளுக்கெல்லாம் காதலன் இருப்பான், நீங்கள் மட்டும் தனிமையில் இருப்பீர்கள். புறக்கணிக்கப்பட்டதாய் உணர்வீர்கள்.



2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் கிழிக்கப் போகுது என்றிருக்கும்.

3) நண்பன் இருந்தால் அவன், உங்கள் நல்லதொரு காதலனைப் போல பேசுவான். காதலா என்று கேட்டால், வெறும் நட்பு என்று கழட்டி விடுவான்.உங்களை உபயோகிப்பதைப் போல உணருவீர்கள், வேறு வழி இல்லாமல் பழகுவீர்கள்.

4) விளையாட்டுக்களில் ஆர்வம் குறையும். செய்தி தாள் படிக்க மாட்டீர்கள். ஆராவது சொல்வதை நம்பகூடாதென்று தோன்றினாலும் நம்பி விட நினைப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. பொது இடத்தில் விளையாட்டுத் தனமாய் இருக்க ஆசைப்பட்டாலும் இருக்க முடியாது.

6) தினமும் முகத்தை பொலிவுற செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். யாராவது உங்களையே உற்றுப் பார்ப்பது போல் நினைத்தாலும் யாரும் பார்க்கவில்லை என்பதே உண்மையாக இருக்கும்.

7) முகப்பரு, நிறம் குறைவு, உடல்ப்பருமன், மாதவிடாய் வலி இப்படி ஏதாவதொரு பிரச்சினையை ஒரே நாளில் முடித்து விட ஏங்குவீர்கள்.

வீட்டில் யாருடனும் எதுவும் கதைப்பதற்கு இருக்காது, நெருங்கிய யாருடனாவது எல்லாவற்றையும் கதைக்க வேண்டும் போல் உணர்வீர்கள். நெருங்கிய தோழனே காதலனாகவும் இருக்க நினைப்பீர்கள்.

9). உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ, சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்? மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

10) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

11) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

12) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட, வேலை கிடைத்திருக்காது.

13) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். பெண்கள் என்றால் சிபாரிசுடன் சேர்ந்து புன்னகைக்கவும் வேண்டும் என்றும் உணருவீர்கள். மேலதிகாரியின் சுரண்டலுக்கு பதிலாக செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஒரு தடவையாவது நினைப்பீர்கள்.

14) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள்.ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்க முடியுமா என்ற கேள்வி ஒரு நாளில் ஆயிரம் முறை வந்து போகும்.

15) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

16) கற்பு, கலாசாரம், நாகரீகம் எல்லாவற்றுக்கும் நடுவில் உங்களுகென்று தனி வட்டம் அமைத்து அதில் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவீர்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் இது தொடர்பான மூன்று பிரச்சினைகளையாவது எதிர்நோக்குவீர்கள்.

17)ஒரு நாளில் உங்களை விட வயது குறைந்த/கூடிய/நடுத்தரப் பிராய அங்கிள் வயதுடைய இப்படி யாராவது ஒருவருடைய கேலி/கிண்டல்/ பெண் ஒடுக்குமுறைக்கு உள்ளாவீர்கள்.பொம்புளைப் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை ஒரு நாளில் ஒரு தடவையாவது எங்காவது கேப்பீர்கள்.

18) பஸ்ஸில், தெருவில், கல்லூரியில் சில மோசமான தருணங்களை சந்திக்கும் போது, ஆணாகப் பிறந்திருக்கலாம் என்று ஒரு தடவையாவது நினைப்பீர்கள். நீங்கள் பெண்ணாக பூரிப்படையும் போது, யாராவது ஏமாற்ற காத்திருப்பார்கள்.

19) நேரம் சென்று வீட்டுக்கு வரும் போதோ, தனியாகப் பயணம் செய்ய நேருகையிலோ யாருடைய துணையும் இல்லாமல் செல்வதையே விரும்புவீர்கள். இருப்பினும் யாராவது ஒருவருடைய துணையை வலிந்து திணிக்கும் போது சாகலாம் போல வலிக்கும்.

20) காதல் தோல்வி பெண்களுக்கு கூடாது என்ற சமுகத்தில் வாழும் உங்களின் காதலை நீங்கள் கொண்டாட முடியாது/ வருத்தப்பட முடியாது. கேட்பவர்கள் உங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள்.

21) நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்த அடுத்த கணம், உங்கள் மகிழ்ச்சிக்கான காரணம் மறைந்து போகும்.

22) பெற்றோர்களும், உறவினர்களும், சகோதரர்களும் உங்களை உளவு பார்த்த்துக் கொண்டே இருப்பார்கள்.

23) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல