செவ்வாய், 21 ஏப்ரல், 2015

எக்ஸெல் டிப்ஸ்...

சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.



எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம்.

எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:

1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.

2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும்.

3. இதில் உள்ள Data Labelsஎன்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது.

4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.

அடுத்து எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:

1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.

2. பின் Chart மெனுவிலிருந்து Chart Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Chart Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

3. இந்த பாக்ஸில் உள்ள Data Lables என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் பல்வேறு வகையான டேட்டா லேபிள்களைக் காட்டும். உங்களுடைய சார்ட்டின் தன்மைக்கேற்ப காட்டப்படும் டேட்டா லேபிள்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை மாறும்.

4. இந்த டேட்டா லேபிள்களைப் பார்த்தால் அடிப்படையில் ஐந்து வகைகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொன்றும் டேட்டாவின் தன்மை மற்றும் லேபிளின் வகை ஆகியவற்றை இணைப்பதில் வேறுபட்டிருக்கும். இவற்றிலிருந்து உங்கள் நோக்கத்தை வெளிக்காட்டும் சிறந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

5. OK கிளிக் செய்திடவும். சார்ட் லேபிள்களுடன் வடிவமைக்கப்பட்டு காட்டப்படுவதற்கு தயாராக இருக்கும்.

ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்பு: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராம் கிராபிக்ஸ் இல்லாத புரோகிராம். அதன் தனித்தன்மை ஸ்ப்ரெட்ஷீட் உருவாக்குவதுதான். இருந்தாலும், நாம் ஒர்க் ஷீட்டுகளைத் தகவல்களைச் செம்மையாகத் தரும் வகையில், வரையப்பட்ட படங்களை இணைக்கிறோம். இவற்றை ஆப்ஜெக்ட் என அழைக்கிறார்கள்.
இந்த ஆப்ஜெக்ட்களை எப்படி இணைப்பது எனவும், அவற்றில் வண்ணம் அமைப்பது எனவும் இங்கு பார்க்கலாம்.

1. எந்த ஆப்ஜெக்ட்டை மாற்றி அமைக்க வேண்டுமோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.

2. ட்ராயிங் (Drawing) டூல்பாரில், Fill Color அருகே உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒரு கலர் மெனுவினைக் காட்டும்.

3. இந்த கலர் மெனுவில், Fill Effects என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் Fill Effects டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இந்த டயலாக் பாக்ஸில் உள்ள டூல்ஸ்களைப் பயன்படுத்தி, ஆப்ஜெக்ட்டில் பில் செய்திடுகையில் எப்ப்படிப்பட்ட வகையில் வண்ணம் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவை பின்வருமாறு:

Gradient: ஆப்ஜெக்ட்டின் பல்வேறு பகுதிகளில் நிரப்பப்பட்ட வண்ணத்தின் ஆழம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை வரையறை செய்திட, இந்த டேப்பினைப் பயன்படுத்தலாம். நாம் விரும்பும் வகையில் அமைத்திட, இந்த டூலைப் பயன்படுத்தலாம்.

Texture: ஆப்ஜெக்டின் மேற்புறப் பூச்சுக்கு வண்ணம் தீட்ட இந்த டேப்பினைப் பயன்படுத்தவும். இதில் marble, fabric, மற்றும் wood எனப் பல வகைகள் தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

Pattern: நீங்கள் எந்த வண்ணம் தேர்ந்தெடுத்து அமைத்தாலும், பல வகை அமைப்புகளில், அவற்றை அமைத்திட இந்த டேப் உதவுகிறது.
இந்த அமைப்புகளில் பல விண்டோஸ் டெஸ்க்டாப் போல அமைகிறது.

Picture: இந்த டேப் மூலம், உங்கள் ஆப்ஜெக்டினை பில் செய்திட உதவும் படம் ஒன்றை எடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் படத்தைப் பொறுத்து, பல புதிய, எதிர்பாராத, ஆர்வமூட்டும் விளைவுகளை இதில் ஏற்படுத்தலாம்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல