“எனது சகோதரன் இறந்துவிட்டான் ஆனால் ஒரு மயானத்தை அழிப்பதன் மூலம் அவனது நினைவுகளை அழித்துவிட முடியாது. இருந்தும் அவனது உடல் அங்கு ஒரு இராணுவ முகாமின் கீழ் புதைக்கப் பட்டுள்ளது. அது மிகவும் வேதனையானது.
கடந்து போன காலங்களில் இது ஒரு புனித பூமியாக, வணக்கத்துக்குரிய தலமாக இருந்தது, அங்கு அன்புக்குரியவர்களுக்கு அவர்களின் இறுதி மண்ணுலக ஓய்வுக்காக இடம் வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் இதை துயிலும் இல்லம் என்று அன்புடன் அழைத்து வந்தது. ஒரு காலத்தில் பெற்றோர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் இழந்துவிட்ட தங்கள் பிரியமானவர்களை இங்கு வணங்கி வந்தார்கள், மரித்தோர்களுக்கான இந்தக் கோவில் இயல்பாகவே இறந்த எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் இறுதி ஓய்விடமாகவும் விளங்கியது. ‘சிலோன் ருடே’ யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் பாரிய அடக்க ஸ்தலங்களின் அடிச்சுவடுகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது, துயிலும் இல்லங்களை கண்டு பிடித்தோம் ….. ஆனால் அவை விபரிக்க முடியாத வகையில் நாசப் படுத்தப் பட்டிருந்தன.
நாசப்படுத்தப்பட்ட அந்த துயிலும் இல்லங்கள் பரந்த இராணுவ முகாம் வளாகங்களாக மாறிவிட்டிருந்தன, மயானங்களின் ஒரு சிறிய அடையாளம் கூட இனிமேல் கண்களுக்கு புலப்படப் போவதில்லை. இறந்த எல்.ரீ.ரீ.ஈ யினரின் நினைவுச் சின்னங்களும் மற்றும் அடையாளங்களும் இடப்பட்ட 25 மயானங்கள் மற்றும் கல்லறைகள் அங்கிருந்தன, ஆனால் இன்று அவை எங்கே? பாரிய இயந்திரங்களைக் கொண்டு அவற்றை இடித்து தகர்த்து அந்த இடங்களில் இராணுவ முhம்கள் மற்றும் காவல் நிலையங்களை அமைக்கும் முடிவின் பின்னாலிருந்த நோக்கம் என்ன? ஒருவர் இதைக்கண்டு அதிசயப்படலாம்! பாதுகாப்பு படைகள், அவைகள் அழிக்கப்பட்டதனால் கோரமான யுத்தம் மற்றும் தனிநாடு கோரி போராடியவர்கள் என்பனவற்றை எப்போதும் நினைவுகூர முடியாது மற்றும் சில அடக்கத் தலங்கள் அரச காணிகளில் அமைக்கப்பட்டிருந்தன என்று வாதிடுகின்றன – மிகவும் தொழில்நுட்ப ரீதியான காரணங்கள். ஆனால் உளவியல் ரீதியாக, தமிழர்களுக்கு அவர்களின் பிரியமானவர்கள் அந்த துயிலும் இல்லங்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள், அது அவர்களின் ஆத்திரத்தை தூண்ட மட்டுமே உதவும், கோபத்தைக் கூட கிளப்பும், மொத்தமாக அழிக்கப்பட்ட இந்த மரித்தோர்கள், இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் இறுதியான இரத்தமும் சதையுமாக கலந்து நின்ற அவர்களின் பிரியப்பட்டவர்கள், நாங்கள் செய்வதைப்போல தங்கள் குடும்பங்கள் மீது ஆழமான அன்பு செலுத்திய இளைஞர்கள் மற்றும் யுவதிகள். அதுவும் கூட அழிக்கப்பட்டு விட்டது.
நாணயத்தின் மறுபக்கத்தைப் போல, துயிலும் இல்லங்களாக இருந்த எல்.ரீ.ரீ.ஈயின் ஒவ்வொரு மயானத்திலும் கொண்டாட்டங்கள் நடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்தால், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் வருடாந்த வணக்க நிகழ்வான மாவீரர் தினமான நவம்பர் 27 ம் நாளினை 1980ம் முதலே விடாமுயற்சியுடன் அனுசரித்து வந்துள்ளார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ தங்கள் இராணுவத்தை சாதாரண போராளின் இராணுவ ஒழுங்கமைப்பாகவே கருதியது மற்றும் அந்தக் கருத்தின் வெளிப்பாடுதான் சமச்சீருடன் அழகாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட அடக்க ஸ்தலம், அது இராணுவ நபர்களுக்காக மேற்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய இடுகாடுகளின் மாதிரியை ஒத்தது.
பளிங்கு, மணல் கற்கள், அல்லது கிரனைட்டால் ஆன நடுகல் மற்றும் கல்லறை குறிப்புகள் என்பன வெகு அழகாக இடைவெளி விட்டு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பலவும் சிறபக்கலையின் தலைசிறந்த படைப்புகள் ஆகும். சில நடுகற்களில் இறந்தவரின் புகைப்படம் கண்ணாடி உறையிட்டு அதில் பதிக்கப்பட்டிருந்தது. வெளிப்படையாக எல்.ரீ.ரீ.ஈ தங்கள் நடுகல் வடிவமைக்கும் சிற்பக்கலைஞனுக்கு அறிவுறுத்தல் வழங்குவதில், மேற்கு நாடுகளில் போரில் இறந்த அவர்களின் வீரர்களுக்கு பின்பற்றும் அதே பாணியை பின்பற்றி கனகச்சிதமாக அவற்றை உருவாக்க வேண்டும் என்பதில் வெகுவாக அக்கறை காட்டியிருந்தது. இந்த விரிவான கவனம் இறந்தவர்களின் பெறறோர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள்மீது அதீத தாக்கத்தை ஏற்படுத்தியது, இதன் காரணமாக தாங்கள் நேசித்த தங்களது மகன்கள் அல்லது மகள்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டோ அல்லது அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் அதனுடன் இணைந்து கொண்டதற்காக எல்.ரீ.ரீ.ஈயினை அவர்களால் ஒருபோதும் வெறுக்க முடியவில்லை.
இறந்தவர்களை தகனம் செய்வது இந்து சமய வழக்கமாக இருந்த போதிலும், எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை அடக்கம் செய்யும் இந்த நடைமுறை ஒரு அடையாளமாக மாறியிருந்தது ஏனெனில் அவர்கள் இந்துவோ, கிறீஸ்தவரோ அல்லது வேறு சமயத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் யுத்தத்தில் மரித்தவர்கள் ஆவர். எனவே அவர்களின் உயிர்த் தியாகத்தை மரியாதை மற்றும் நன்றியுடன் நினைவு கூருவது எல்.ரீ.ரீ.ஈக்கு மட்டும் முக்கியமானதாக இருக்கவில்லை ஆனால் அவர்களின் அன்புக்கு உரியவர்கள், அவர்களின் தாய்மார்கள் மனைவிமார்கள் தந்தையர் மற்றும் சிலவேளை பிள்ளைகளுக்கும் கூட அதைவிட முக்கியமானதாக இருந்தது.
கோபம் மற்றும் அலட்சியம்
அதேவேளை அத்தகைய கவர்ச்சியான அடக்க ஸ்தலங்களை பாரமரிப்பது ஒரு தீவிரமான நகர்வு , இது இளைஞர்களை வசீகரித்து போராட்டத்தில் ஈடுபட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று சிலர் சொன்னாலும், இந்த நடுகற்களை அழித்தது தங்கள் பிள்ளைகள் உறங்கும் இடத்துக்கு விஜயம் செய்யும் குடும்பங்களிடம் கோபத்தையும் மற்றும் இகழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பெற்றோர்களும் மற்றும் உறவினர்களும் போரின்போது தங்கள் பிள்ளைகள் காணாமற்போகவோ அல்லது தவறிப்போகவோ இல்லை ஆனால் அவர்கள் இறந்துபோய் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்கிற அர்த்தமுள்ள விளக்கம் மற்றும் உறுதிப்பாட்டினால் திருப்தி அடைந்திருந்தார்கள் மற்றும் அவர்கள் அழுது புலம்பி ஆறுதலடைய ஒரு இடமாகவும் அது இருந்தது.
இறந்தவர்களை வருடாந்தம் நினைவு கூரும் நாள் ஒரு துயரம் நிறைந்த நாளாக இருந்தது. அது நவம்பர் 27ந் திகதி வரும் மாவீரர் நாளாகும், அந்த நாளில் தமிழ் மக்கள் அவர்களின் போராளிகளின் மரணங்களுக்கு ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துவதற்கு மயானங்களுக்கு அணி வகுத்துச் சkopay1ெல்வார்கள். முதன்முதலாக போராட்டத்தில் மரணமடைந்தவரான எல்.ரீ.ரீ.ஈயின் அங்கத்தவரான லெப்ரினனட் சங்கர் (சத்தியநாதன் என்கிற சுரேஸ்) மரணமடைந்தது நவம்பர் 27ல் என்று கூறப்படுகிறது. வருடாந்தம் இந்த நாளில் ஒளியேற்றப்பட்டு, அழகாக அலங்கரிக்கப் பட்டு, காட்சிதரும் இந்த துயிலும் இல்லங்களுக்கு பெரும் திரளாக பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்,விதவைகள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஒன்றுகூடுவதை காணமுடியும், அஞ்சலி செலுத்தப்படும் அதேவேளை எல்.ரீ.ரீ.ஈயின் சோககீதங்கள் ஒலிபெருக்கிகளில் இசைக்கப்படும்.; தங்கள் பிரியமானவர்களுக்கு முறையான வருடாந்த அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு ஆசீர்வாதங்களை வெளிப்படுத்தும் மரண நாளைக் கொண்டாட பூமாலைகள், ஒளி விளக்குகள், மெழுகுவர்த்திகள், கற்பூரம், மற்றும் ஊதுவத்திகளை ஏந்தி ஊர்வலமாக வந்திருப்பவர்களை வரவேற்கும், சுறுசுறுப்பான செயற்பாடுகள் இடம்பெறுவதால் இந்த முழு பிரதேசமுமே ஒரு தேன்கூடு போல காட்சி தரும். பல வருடங்களாக பாரம்பரிய எண்ணெய் விளக்குகளை மூன்று நாட்களுக்கு ஏற்றிவைக்கும் சடங்கு நவம்பர் 27ல் முடிவடையும்.
“எனது தாய் அவரது மகனின் நடுகல்லை நோக்கி ஓடிச் சென்று அவன் அவருக்காக காத்திருப்பதைப் போல அதன் முன் விழுவார்;” என்று தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு மனிதர் சொல்கிறார். “அவர் எப்போதும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பார் ஆனால் இப்போது அது அவரால் முடியாது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் அவர் அவனை நினைத்துப் பார்ப்பார், ஆனால் அவரது துயரத்தை ஒன்று கூடு;டவதற்காக செல்வதற்கு விசேஷமான இடம் எதுவுமில்லை. ஒரு மயானத்தை போல வேறு இடம் இல்லை. மற்றும் ஒரு கல்லறைக்கு விஜயம் செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. நாங்கள் ஏன் ஒருவரிடத்தில் பரிதாபம் காட்டக்கூடாது மற்றும் அது எங்கள் மனித உரிமைகளை மறுக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார்.
அவரது சிந்தனையின்படி, ஒருவரது பிரியப்பட்டவரின் மரணத்தை யாராலும் மறக்க முடியாது மற்றும் ஒரு இடுகாட்டினை அழிப்பது மனித உரிமை மீறல்களில் மிகவும் மோசமான ஒன்று மற்றும் அது அவருக்கு கோபத்தையே ஏற்படுத்துகிறது. அவர் தொடர்ந்து சொல்கையில் “எனது சகோதரனை மற்றவர்கள் பயங்கரவாதி என முத்திரை குத்துவதற்கு முன்பு அவன் ஒரு மனிதனாகத்தான் இருந்தான் மற்றும் பயங்கரவாதியும் கூட ஒரு மனிதன்தான் மற்றும் ஒவ்வொருவருக்கும் இன்னொன்றாக மாறுவதற்கு ஏதாவது காரணம் இருக்கும்” என அவர் நியாயப்படுத்தினார். எனது சகோதரன் இறந்து விட்டான் மற்றும் ஒரு கல்லறையை அழிப்பதால் அவனது நினைவுகளை அழித்துவிட முடியாது. இருந்தும் அவனது உடல் அங்கு ஒரு இராணுவ முகாமின் கீழ் புதைக்கப் பட்டுள்ளது. அது மிகவும் வேதனையானது” என அவர் சுட்டிக் காட்டினார். “அது ஒரு ஆத்திரமூட்டும் செயல். அந்த இடத்தில் அவர்கள் ஒரு தாவரவியல் பூங்காவையோ அல்லது வேறு ஒன்றையோ அமைத்திருக்கலாம் ஆனால் ஏன் ஒரு இராணுவ முகாம் அமைக்கப் பட்டுள்ளது? எல்லாவற்றிலும் மேலாக போரும் முடிவடைந்து விட்டது” என அவர் கேள்வி எழுப்பினார்.
மற்றொருவர் சொல்லும்போது, “ உங்களுக்கு ஒரு நினைவிடம் இருந்தால் நீங்கள் அந்த இடத்துக்குச் சென்று அவர் உண்மையில் இறந்துவிட்டார் இங்கே புதைக்கப்பட்டுள்ளார் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு ஆறுதல் அடையலாம்” என்றார்.
கோப்பாயில் உள்ள ஒரு பெண், கோப்பாயில் இருந்த மயானம் இறந்துபோன தனது மகன் உயிரோடிருக்கிறான் என்கிற நினைவையே தனக்குள் எற்படுத்தி வந்ததாகத் தெரிவித்தாள். புலிகளின் யு ரியுப் சொல்வது வடக்கு மற்றும் கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்காக 25 புதைக்கும் மற்றும் நினைவு மயானங்கள் இருந்தன என்று.
பிரதானமானவை, திருகோணமலை ஆலங்குளத்தில் 147 புதைகுழி மற்றும் 137 நடுகற்களை கொண்ட மயானம், வவுனியா ஈச்சங்குளத்தில் 192 புதைகுழி மற்றும் 315 நடுகற்கள் கொண்ட மயானம் மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டில் நான்கு பெரிய புதைக்கும் இடங்களும் மற்றும் மயானங்களும் இருந்தன அவற்றில் கோப்பாய் மயானம் 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட மிகப் பெரிய மயானமாகும்.
கோப்பாய் சவக்காலையில் 168 எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் புதைக்கப்பட்டு 1148 போராளிகளுக்கு நினைவுச் சின்னமும் எழுப்பப் பட்டிருந்தது. கொடிகாமத்தில் உள்ள புதைக்கும் இடத்தில் 463 பேர் புதைக்கப்பட்டும் மற்றும் 505 நினைவு நடுகற்களும் இருந்தன. வல்வெட்டித்துறையில் 309 புதை குழிகள் மற்றும் 486 நினைவு நடுகற்கள் இருந்தன. சாட்டி என அழைக்கப்படும் இடத்தில் நான்கு புதைகுழிகள் மற்றும் 150 நினைவு நடுகற்கள் இருந்தன. தீருவில் என்கிற இடத்தில் மூத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கான ஒரு புதைக்கும் ஸ்தலம் இருந்தது, ஆனால் இப்போது அது ஒரு விளையாட்டு மைதானமாக உள்ளது. உடைந்துபோன சிலைகள் மற்றும் நினைவுக் கற்கள் போன்றவற்றின் சிதைவுகள் குவியலாக விளையாட்டு மைதான மூலையில் கிடக்கிறது.
தீருவில் நினைவுச் சின்னங்கள்
தமிழ் நெற் சொல்வது இந்திய அமைதிகாக்கும் படை 1987ல் இங்கு பிரசன்னமாகி இருந்தபோது, யாழ்ப்பாண மற்றும் திருகோணமலை எல்.ரீ.ரீ.ஈ பிராந்திய தளபதிகளான குமரப்பா மற்றும் புலேந்திரன் ஆகியோருடன் சோந்து வேறு 10 புலி அங்கத்தவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் தமிழர் தாயக கடல் எல்லையில் ஒப்பந்தத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டார்கள், அவர்கள் பலாலி விமானத் தளத்தில் இந்திய அமைதிகாக்கும் படையின் காவலில் இருக்கும்போது சயனைட்டை உண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை தேர்ந்தெடுத்தார்கள். இந்திய அமைதிகாக்கும் படை தனது பாதுகாப்பை கொழும்புக்கு கைமாறி பின்வாங்கிச் சென்றதும் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிலத்தில் தீருவில் நினைவுச் சின்னம் எழுப்பப் பட்டது. 1993ல் எல்.ரீ.ரீ.ஈயின் மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண தளபதியுமான கிட்டு, லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகையில் சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினர் அவர்களை இடைமறித்த போது, கிட்டு, குட்டி, மலரவன் என்பவர்களுடன் சேர்ந்து நான்கு கப்டன்கள் மற்றும் ஏனையோரும் தங்கள் கப்பலை வெடிக்க வைத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர். கேணல் கிட்டு மற்றும் அவரது குழுவினருக்கான நினைவுச் சின்னமும் தீருவிலில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நினைவுச் சின்னங்கள் இப்போது அங்கு இல்லை.
சிலோன் ருடே அந்த நினைவுச்சின்னங்களில் எஞ்சியிருப்பவைகளை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, அந்த இடத்தை கடந்து போன ஒரு இளைஞன் “ இவைகள் வெறும் கற்கள் மட்டுமே அவைகளைப்பற்றிக் கவலைப் படாதீர்கள், அவர்கள் எங்கள் இதயங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றான். எல்.ரீ.ரீ.ஈயின் மயானங்களில் நிறுவப்பட்டுள்ள விரிவான இராணுவ முகாம்களின் ஆரம்ப வைபவங்களைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் தகவல் வெளியிடவில்லை. யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் முன்னர் எல்.ரீ.ரீ.ஈயின் இடுகாடு இருந்த இடத்தில் பெரிய ஸ்ரீலங்கா இராணுவ தளம் உள்ளது அங்கும் ஆரம்ப விழாக்களும் சடங்குகளும் இடம்பெற்றிருந்த போதிலும் கடந்த காலத்தில் அதைப் பற்றி எந்த விளம்பரமும் செய்யப் படவில்லை.
யாழ்ப்பாணக் குடாநாடு கோப்பாயில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யுத்த வீரர்களின் நினைவுச்சின்னங்கள் யாவும் 1995ல் பாரிய இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் அழிக்கப்பட்ட ஏனைய சவக்காலைகள்: வேலணை சாட்டியில் உள்ளது (1995), தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ளது (1996) மற்றும் வடமராட்சி எல்லாங்குளத்தில் உள்ளது (1996) என்பன. 2002, பெப்ரவரியில் இடம்பெற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தப்படி இந்த சவக்காலைகள் யாவும் திரும்பவும் கட்டப்பட்டதாக தமிழ் இணையத்தளம் ஒன்று தெரிவிக்கிறது. யுத்தத்தில் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 40,000 எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் உடல்கள் வவுனியா விசுவமடுவில் உள்ள சவக்காலை ஒன்றில் புதைக்கப் பட்டுள்ளது.
என்னதான் , எல்.ரீ.ரீ.ஈயின் கல்லறைகளை அழித்தது கடந்தகால வன்முறைகளை மறப்பது அவசியம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே என்று இராணுவம் சொன்னாலும்; அது உண்மையில் தமிழர்களை கோபமூட்டியுள்ளது பயத்தின் காரணமாக தங்கள் உணர்வுகளை அவர்களால் வெளிப்படுத்த இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.
தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும் தற்பொழுது நல்லிணக்கத்துக்கான அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஆரம்ப முயற்சிகளுக்கு ஒரு ஆலோசகருமாகவுள்ள முனைவர் ஐவர் ஜென்கின்ஸ், கடந்த வாரம் சிலோன் ருடேக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ‘ ஒரு சிறிய சிறுபான்மை இனம் கூட அரசியல் கட்டமைப்புக்கு வெளியில் நிற்குமானால் அது ஒரு நாட்டின் அரசியலமைப்பை தீவிரமாக சீர்குலைப்பதுடன் அதற்கு இடையூறும் ஏற்படுத்தும், மற்றும் மாறாக போரில் வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை மக்களுக்கு எல்லாம் சீராக இருப்பது போலவும் தோன்றும் இருந்தும் எஞ்சியிருக்கும் கேள்வி என்னவென்றால் அது தமிழர்களின் இதயங்களை வென்றுவிட்டதா என்பதுதான்?’ இது இன்னும் நடைபெற வேண்டியுள்ளது.
சுலோச்சனா இராமையா மோகன்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக