கண்காணிக்கப்பட்ட ஒரு வெற்றியின் உத்தியில் இருந்து பெற்ற பாடங்கள்
உலகமயமாக்கப்பட்ட இந்தப் பூமியில் வெகு திறமையாக கடல் வளங்களையும் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஒரு உள்நாட்டுப் போரை வெற்றி கொள்வது எப்படி? இப்போது srilanka warபோராக மாறியுள்ள அப்படியான மோதல்களைப் பொறுத்தவரை அநேகமான அரசாங்கங்கள் விடை காண முயற்சிக்கும் கேள்வி இது. வெகு சிலவே இதில் வெற்றியடைந்துள்ளன, இதில் மிகப் பெரிய விதிவிலக்கு ஸ்ரீலங்கா, அங்கு 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்; புலிகளை (எல்.ரீ.ரீ.ஈ) தீர்க்கமாகத் தோற்கடித்து நீடித்ததாகத் தோன்றும் சமாதானத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றியானது கடந்த தசாப்தங்களில் நல்ல நிதிவளமுள்ள மேற்கத்தைய படைகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் நடத்திய போராட்டங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. உலகத்திலேயே மிகவும் புதுமையானதும் ஆபத்தானதுமான கிளர்ச்சிப் படை எனக் கருதப்படும் ஒன்றுக்கு எதிராக ஸ்ரீலங்காவால் எப்படி வெற்றி பெற முடிந்தது? இதில் மூன்று முக்கிய பகுதிகள் தனித்து நிற்கின்றன.
முதலாவது போராடும் எதிரிக்கு பொருத்தமான வகையில் மூலோபாய இலக்குகள் இருப்பது அவசியம். முதல் 22 வருடங்களும் உள்நாட்டுப் போரில் அரசாங்கத்தின் மூலோபாயம் இராணுவ நடவடிக்கை மூலம் எல்.ரீ.ரீ.ஈ யினை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவதாகவே இருந்தது. உண்மையில் இதுதான் சிறந்ததும் மற்றும் உள்ள ஒரே தெரிவும் என்று வெளிநாட்டு நிபுணர்களால் வழங்கப்பட்ட ஆலோசனை ஆகும். 2006ல், மோதலின் இறுதிக்கட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர், ஓய்வுபெற்ற இந்திய லெப்ரினட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் தெரிவித்தது” மோதலுக்கு ஆயுத தீர்வு வழியல்ல. ஸ்ரீலங்கா இராணுவம் ஸ்ரீலங்கா தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது” என்று.
உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ பேச்சு வார்த்தைகளில் ஐந்து தடவைகள் ஈடுபட்டது, ஆனால் அரச தரப்பு படைகளை தோற்கடிக்கத் தக்க வலிமையான இடத்தில் அது இருப்பது வெளிப்படையாகத் தோன்றியதும்; பேச்சுக்கள் எப்போதும் முறிவடைந்தன. 2006 நடுப்பகுதியில் வெற்றி தனது பிடியில் இருப்பதாக உணர்ந்ததும், எல்.ரீ.ரீ.ஈ நோர்வேயின் இடைத் தரகு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தை வேண்டுமென்றே முடித்துக் கொண்டு நான்காவது ஈழப் போர் என அழைக்கப்படும் யுத்தத்தை ஆரம்பித்தது. அதற்குப் பதிலடியாக ஸ்ரீலங்கா அரசாங்கமும் இறுதியாக தனது மூலோபாய இலக்கான எல்.ரீ.ரீ.ஈ யினை பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்பதை மாற்றி அதை நிர்மூலமாக்குவது என்று முடிவு செய்தது.
வெற்றி பெறுவதற்கு ஒரு மூலோபாயம், விரோதத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்பது. இந்த விடயத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் கிளர்ச்சியின் தன்மைக்கு அது பொருத்தமானதாக இருக்க வேண்டும். உள்நாட்டுப் போரின் முதல் 22 வருடங்களும் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் உத்திகள் இந்த அளவுகோலைப் பூர்த்தி செய்யவில்லை. இறுதியாக 2005ன் பிற்பகுதியில் ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப் பட்டதும் அது எல்.ரீ.ரீ.ஈயினைப் பலமிழக்கச் செய்த அதேவேளை அவர்களின் பிரதான பலவீனங்களுக்கு பொருந்தும் வித்தியாசமான மூலோபாய இலக்குகளை தேர்வு செய்தது.
எல்.ரீ.ரீ.ஈயின் முக்கியமான பிரச்சினை அதன் வரையறுக்கப்பட்ட மனிதவள அடித்தளம்தான். ஸ்ரீலங்காவின் சனத்தொகையில் 12 விகிதமானவர்களே இலங்கைத் தமிழர்கள், இவர்களில் சுமார் 300,000 வரையான மக்கள் மட்டுமே எல்.ரீ.ரீ.ஈக்கு தீவிர ஆதரவு வழங்கினார்கள் என நம்பப்படுகிறது. அதற்கு மேலும் ஒரு அமைப்பு என்கிற வகையில் எல்.ரீ.ரீ.ஈயின் சட்டபூர்வ தன்மையும் சரிவடைந்து கொண்டிருந்தது. 2006ம் ஆண்டளவில் எல்.ரீ.ரீ.ஈ தனது படையணியை நிரப்ப கட்டாய ஆட்சேர்ப்பிலேயே தங்கியிருந்தது – தன்னார்வ தொண்டர்களில் அல்ல - இவர்களில் அநேகமானவர்கள் சிறுவர்கள். செயல்பாட்டு மட்டத்தில் அதன் திடமான கட்டளைக் கட்டமைப்பு, மரபுவழி தரைப் போருக்கான முன்னுரிமை மற்றும் சர்வதேச ஆதரவில் உள்ள ஆழமான நம்பகத் தன்மை உட்பட அதன் பலமாகத் தோன்றுபவகைள் சிலதும்கூட எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராகத் திரும்பின.
பாரிய வியூகம்
இரண்டாவது, வெற்றிக்குத் தேவையானது பாரிய வியூகம். ஒரு பாரிய மூலோபாயம் இராஜதந்திரம், பொருளாதாரம், இராணுவ நடவடிக்கைகள், தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் என்பனவற்றை புத்திசாலித்தனமாக ஒருங்கிணைத்து சமாதானத்தை வரையறை செய்கிறது மற்றும் தேசம் வெற்றி பெறுவதற்குத் தேவையான தகைமைகளையும் முன்னேற்றுவதையும் கருத்தில் கொள்கிறது. புதிய அரசாங்கம், தனது முன்னோடிகளால் பின்பற்றப்பட்டு தோல்வியடைந்த குறுகிய கவனமுள்ள இராணுவ உத்திகளை பின்பற்றுவதில்லை என்று முடிவு செய்தது, ஆனால் மாறாக குறைந்த மட்ட செயல்பாடுகளை வழி நடத்தும் விரிவான முழு நாட்டுக்கும் பொருத்தமான பாரிய மூலோபாயத்தை பின்பற்றியது.
பொருளாதார கோளத்தில் புதிய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சத விகிதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கி ஆயுதப்படைகளுக்கான வரவு செலவுத் திட்டததை சுமார்; 40 விகிதமாக அதிகரித்தது. இது நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட நிதி வளங்களையும் வருடாந்த மானியங்களையும் கணிசமான அளவு கஷ்டத்துக்கு உள்ளாக்கியது எனவே இந்த சுமையை தளர்த்துவதற்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவி சீனாவிடம் கோரப்பட்டது. எண்ணெய் மற்றும் ஆயுதக் கொள்வனவுக்கான கடன்கள் உட்பட வேறு அமைப்புகளிலான நிதி உதவிகள் ஈரான்,லிபியா,ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் மூலமாக கடனாக வழங்கப்பட்டன.
இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈயினை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது, எல்.ரீ.ரீ.ஈ தனது 60 விகிதமான நிதியுதவியையும் மற்றும் பெரும்பாலான இராணுவ உபகரணங்களையும் கடல் வழியாகவே பெற்று வந்தது. இந்த முயற்சி வெற்றி பெற்றது மற்றும் காலப்போக்கில் இந்த குழு கிட்டத்தட்ட சுமார் 32 நாடுகளில் தடை செய்யப் பட்டது. முக்கியமாக புதிய அரசாங்கத்தின் பாரிய மூலோபாயத்துடன் அர்த்தமுள்ள வகையில் இடையீடு செய்யக்கூடிய நாடான இந்தியாவுடன் நெருக்கமாக வேலை செய்யும் உறவு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் 9ஃ2011 பின்னான பயங்கரவாத எதிர்ப்பு காலகட்டமும் கூட உலகின் முதல் தற்கொலை குண்டுதாரி படையினை அழிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் வரவேற்கத் தக்கது என நிரூபணமாகியது. எல்.ரீ.ரீ.ஈயின் கடல்வழி இராணுவ தளபாட கொள்வனவை தடை செய்யும் வகையில் உளவுத் தகவல்களை பகிர்ந்தும், கடலோர காவற் கப்பல்களை வழங்கியும் மற்றும் முக்கியமான ஒரு தேசிய கடற்படை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை வழங்கியும் அமெரிக்கா உதவி செய்தது. கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவையும் முன்வந்து தங்கள் நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ யின் நிதி சேகரிக்கும் வலையமைப்பை சட்டவிரோதமாக்கி தடை செய்ததின் மூலம் அந்த குழுவின் நிதி அஸ்திவாரத்தை கடுமையான தாக்கத்துக்கு உள்ளாக்கின.
உள்நாட்டு ரீதியில் அரசாங்கம் பொதுமக்களின் தீவிரமான ஆதரவை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. 2006ம் ஆண்டளவில் அநேக ஸ்ரீலங்காவாசிகள் யுத்தத்தால் களைப்படைந்திருந்தனர் மற்றும் யாரலும் பெற முடியாத வெற்றியை புதிய அரசாங்கத்தின் திறமை சாதிக்குமா என்கிற சந்தேகமும் அவர்களிடம் இருந்தது. மக்களின் ஆதரவை பெறுவதற்கு போர் நடைபெறும் அதேவேளை அபிவிருத்தி வேலைகளையும் நிறுத்தாமல் தொடரவேண்டியது அவசியம் என அரசாங்கம் உணாந்தது. மேலும் வறுமை ஒழிப்பை நீட்டிப்பதற்கான பல்வேறு தேசிய திட்டங்களும் அவசியம் எனக் கருதியது, அதற்கு ஒரு முக்கிய உதாரணம் ஏழை விவசாயிகளுக்கான உர மானியத் திட்டம். இந்த நடவடிக்கைகள் யுத்தத்துக்கு நிதியளிப்பது மிகவும் கஷ்டமானது மற்றும் வெளிநாட்டு நிதி உதவி முக்கியமானது எனவும் காண்பித்தது, ஆனால் போராடுவதால் பெறுமதியான சமாதானம் கிடைக்கும் என மக்களை நம்ப வைப்பதும் அவசியமாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் வேலை செய்ய ஆரம்பித்தன,. 2005க்கு முதல் வருடாந்தம் 3,000 படை வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது இராணுவத்துக்கு கடினமாக இருந்தது, 2008ன் பிற்பகுதியில் இராணுவத்தால் ஒரு மாதத்துக்கு 3,000 வீரர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடிந்தது. அதிகரிக்கப்பட்ட பாதீடு மற்றும் மக்களின் ஆதரவு என்பன ஸ்ரீலங்கா இராணுவம் கணிசமான அளவு வளர்ச்சியடைய உதவியது. குறிப்பாக இராணுவம் விரிவாக்கப்பட்டது, 2005ல் 120,000 ஆக இருந்து வீரர்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டளவில் 200,000 க்கும் அதிகமாக உயர்ந்தது.
மதிநுட்பமான தந்திரங்கள்
மூன்றாவதாக முடிவுகளைச் சந்திப்பதற்கு பாரிய மூலோபாயம் தேடுவது, எதிரியின் பலத்துக்கு எதிராகப் போராடும் அதேவேளை எதிரியின் பலீனங்களை சுரண்டுவதற்கு அவசியமான கீழ் மட்ட துணை இராணுவ உத்திகளை பயன்படுத்துவது. எல்.ரீ.ரீ.ஈயிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் மட்டுமே உள்ளனர், களத்தில் சுமார் 20,000 – 30,000 பேர்கள் மட்டுமே உள்ளனர் மற்றும் மதிநுட்பமான தந்திரங்கள் சளைத்து விடும். இது தொடர்பாக அரசாங்கப் படைகள் ஏற்கனவே 2006 நடுப்பகுதியில் ஈழப்போர் 4 ஆரம்பமாவதற்கு முன்பே பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தனர்.
2004 பிற்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈயின் மூத்த இராணுவ தளபதியான கேணல் கருணா சுமார் 6,000 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுடன் அதிலிருந்து பிளவுபட்டு வெளியேறியது ஸ்ரீலங்காவின் கிழக்குப் பகுதியில் எல்.ரீ.ரீ.ஈயின் ஆதரவுத் தளத்தை தீவிரமாகப் பாதித்திருந்தது. இந்த திரளான பிளவு ஒரு போராட்ட அமைப்பு என்கிற வகையில் எல்.ரீ.ரீ.ஈயின் ஆழ்ந்த நுண்ணறிவு பற்றிய முக்கியமான புலனாய்வுகளை வழங்கியிருந்தது. முக்கியமாக முதல் தடவையாக அரசாங்க புலனாய்வு முகவர் அமைப்பில் இப்போது உள்ள இலங்கைத் தமிழர்களால் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று தகவல்களைச் சேகரித்து அதை திரும்ப அறிவிக்க கூடியதாகவும் இருந்தது. இந்த பிளவின் அளவுகோல் எல்.ரீ.ரீ.ஈயின் நெறிமுறை தேய்வடைவதை தெளிவாகக் காட்டியது.
ஈழப்போர் 4ன் ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈயினால் நாடு பூராவும் இயங்கக் கூடியதாக இருந்தது. வெளி விவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாகிஸ்தான் தூதுவர் மற்றும் இராணுவ தளபதி என கோடிட்டுக் காட்டக்கூடியவர்களுக்கே உயர் தரமான தற்கொலைத் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான பின்புற பகுதிகள் இருக்கவில்லை. இந்த செயல்திறனை எதிர்ப்பதற்கு ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையினரை உள்ளக பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்துவதை விரிவாக்கியும் மற்றும் ஆயுதம் தாங்கிய கிராமவாசிகளை கொண்டு சிவில் பாதுகாப்பு படை என்று உருவாக்கியும் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. தலைநகர் மற்றும் சில பிரதான நகரங்களில் இயங்கும் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத சிறு குழுக்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆழமான இந்த பாதுகாப்பு, தலைவர்களை அழிக்கும் தாக்குதல்கள் மற்றும் பலவீனமான பொதுமக்கள் இலக்குகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற இரண்டையும் நடத்துவதில் வல்லவர்கள் என திறமையாக நிரூபிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகளை சமநிலைப் படுத்தியது.
நாட்டின் தெற்கிலும் மற்றும் மேற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது மக்களை மையமாக கொண்டுள்ள இடங்களில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் உள்ள எதிரிகள் மீது ஸ்ரீலங்கா இராணுவம் அதிக கவனத்தைச் செலுத்த உதவியாக இருந்தது. பிரதானமான நோக்கமாக இருந்தது, வழக்கமான மேற்கத்தைய கொள்கையான பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து பாதுகாப்பதற்கு மாறாக எல்.ரீ.ரீ.ஈமீது தாக்குதல் நடத்தி அவர்களை தற்காப்பின்மீது கவனம் செலுத்த கட்டாயப் படுத்துவதாக இருந்தது. இதன்படி எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல்களுக்கு இலக்காகி குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் தற்காப்புக்காக போராடுபவர்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி அவர்களை நலிவடையச் செய்தது. இந்த தந்திரோபயமான நன்மைகள் இராணுவத்தின் புதிய எண்ணிக்கையை பல மடங்காக உயர்த்தியது.
இந்த நடவடிக்கைகளில் சிறிதாக, நன்கு பயிற்றப்பட்ட, உயர்வான நகரும் குழுக்;கள் முக்கியமானவை என நிரூபித்தன. இந்தக் குழுக்கள் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னரங்குகளுக்குப் பின்னால் ஊடுருவி உயர் மதிப்புள்ள இலக்குகளைத் தாக்கியதுடன், உண்மையான நேரத்துக்குரிய உளவுத் தகவல்களை வழங்கி எல்.ரீ.ரீ.ஈயின் மீள் விநியோக வழிகள் மற்றும் தொடர்பாடல்களுக்கும் இடையூறு விளைவித்தன. பிரிவு மட்டத்துக்கு கீழான குழுக்களுக்கு நன்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தற்காப்பை மேற்கொள்ளும் எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகள் மீது துல்லியமான வான், பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரமும் வழங்கப் பட்டது. நேரடி மற்றும் ஆழ ஊடுருவற் தாக்குதல்கள் இணைந்ததின் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ அதன் சுதந்திரமான நகர்வுகளை இழந்தது ஓரிடத்தில் நிலை நிறுத்தப்பட்டதுடன் விரிவாகத் தோற்கடிக்கவும் முடிந்தது.
ஆழ ஊடுருவி செயற்படுதல் மற்றும் தனித்துவமான ஒரு ஸ்ரீலங்கா கண்டுபிடிப்பான விசேட படைகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான நன்கு பயிற்றப்பட்ட விசேட காலாட்படை செயற்பாட்டு பிரிவு (எஸ்.ஐ.ஓ.ரி) என்பவர்களைக் கொண்ட சிறிய குழுக்கள் நெருக்கமாகச செயற்பட்டன. கணிசமானளவு விரிவாக்கப்பட்ட 10,000 வலுவான விசேட படைகள், எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ தலைமை இலக்குகள் மீது தாக்குதல் நடத்தவும், மிகவும் தேவையான அதிக அனுபவம் வாய்ந்த தளபதிகளை அழிக்கவும் மற்றும் நெகிழ்வற்ற அதிகாரப் படிநிலை அமைப்பில் கணிசமானளவு இடையூறுகளை எற்படுத்தவும் மிகவும் திறமை வாய்ந்தவை என்பதனை நிரூபித்தன. இந்த எஸ்.ஐ.ஓ.ரி யின் இராணுவ தளபதி ஜெனரல் பொன்சேகா அறிமுகப்படுத்திய கருத்து குறிப்பிடுவது: “நாங்களும் நான்கு மனித குழுக்களாகப் போரிட்டோம் …. காடுகளில் ஆழ ஊடுருவி செயற்பட பயிற்றப்பட்டு … சுய நம்பிக்கையுடன் சுதந்திரமாக செயற்பட்டு போரிட்டோம். எனவே ஒரு படையணியில் பெரிய எண்ணிக்கையிலான நான்கு மனிதரைக் கொண்ட குழுக்கள் இருந்தன, அது எங்களை பரந்த முன்னணியில் செயற்பட அனுமதித்தது”. ஈழப்போர் 4 ஆரம்பித்தபோது 1500 பயிற்றப்பட்ட எஸ்.ஐ.ஓ.ரி துருப்புக்கள் இருந்தனர் 2008ல் அதில் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் அங்கம் வகித்தனர்.
கற்றல் அமைப்பு
சிக்கலான காடுகளில் போராடும் நடவடிக்கைகளுக்கான பயிற்சி விரிவாக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா வீரர்கள் பொதுவாக மிகவும் திறமையானவர்களாக, மிகவும் தொழில் முறை தெரிந்தவர்களாகவும் மற்றும் மிகவும் நம்பிக்கை உள்ளவர்களாகவும் மாறினார்கள். இராணுவத்தால் இப்போது இரவோ அல்லது பகலோ எதுவானாலும் ஒரு உயர்வான வேகத்துடன் அதிகம் கடினமான பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. இராணுவமானது தந்திரமட்டத்தில் முயற்சிகளையும் மற்றும் புதமைகளையும் தழுவிய ஒரு கற்றல் அமைப்பாக மாறியிருந்தது.
உலகளாவிய கிளர்ச்சிக் குழுக்களிடையே எல்.ரீ.ரீ.ஈ தனித்துவமான ஒன்றாகத் திகழ்ந்தது, அதனிடம் மேலும் ஒரு திறமையான கடற்படையும் இருந்தது, அது அரசாங்க கடலோர கப்பல்கள் மற்றும் கடல்வழி தளபாட போக்குவரத்து என்பனவற்றை தடை செய்யும் இரண்டு பிரதான பணிகளை ஆற்றி வந்தது. தடை செய்யும் செயற்பாட்டுக்காக எல்.ரீ.ரீ.ஈ இரண்டு வகையிலான சிறிய வேகப் படகுகளை உருவாக்கியிருந்தது: கண்ணாடி இழையிலான மேலோடு, இயந்திர துப்பாக்கிகள், எறிகுண்டு வீசிகள் போன்ற தாக்குதல் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் குறைவான வேகத்திலான பெருமளவு வெடி குண்டுகள் ஏற்றப்பட்டு தொடர்புடன் இணைக்கப்பட்ட ஆயுதமயமான தற்கொலைப் படகுகள் என்பனவே அந்த இரண்டு வகை. ஈழப் போர் 4ல் கணிசமானளவு கொத்தாக சுமார் 30 தாக்குதல் படகுகள் மற்றும் 8 – 10 தற்கொலைப் படகுகள் பாதுகாப்பை கடினமாக்குவதற்காக உள்ளுர் ரோலர்களுடன் கலந்து திரளாகப் பயன்படுத்தப் பட்டன. இவைகளை இறுதியில் அரசாங்கத்தின் 60 – 70 பெரிய அதிவேக தாக்குதல் படகுகள் திரளாக வந்து எதிர் தாக்குதல் நடத்தி தோற்கடித்தன, இவை அமெரிக்க கட்டுப்பாட்டின் கட்டளையில் இயங்கும் சுமார் 20 கரையோர ராடர்கள் வழங்கும் தகவல்களை இலக்காகப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தின.
கடல் போக்கு வரத்து செயற்பாடுகளுக்காக எல்.ரீ.ரீ.ஈ பதினொரு சரக்கு கப்பல்களைப் பயன்படுத்தின, அவை உலகெங்கிலும் இருந்து கொள்வனவு செய்யப்படும் இராணுவ தளபாடங்களை ஏற்றிக்கொண்டு வந்து ஸ்ரீலங்காவிலிருந்து கிட்டத்தட்ட 2,000 கி.மீ தூரத்தில் கடற்படையினர் அணுக முடியாத தூரத்துக்கு அப்பால் நிறுத்தப்படும் மற்றும் கரைக்கு நெருக்கமான இடத்தில் காத்திருக்கும் எல்.ரீ.ரீ.ஈயின் இயந்திரப் படகுகளில் சரக்கை வேகமாக இறக்கிவிட்டுச் சென்றுவிடும். ஈழப்போர் 4ல் கடற்படை சமீபத்தில் பெற்ற மூன்று பழைய கடலோர காவற் கப்பல்கள்(அமெரிக்கா அன்பளிப்பு செய்த அதன் முன்னாள் கடலோர காவற் படகு உட்பட) மற்றும் புதுப்பிக்கப்பட்ட தந்திரங்கள் மற்றும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் என்பனவற்றுடன் இணைந்து எல்.ரீ.ரீ.ஈயின் போக்கு வரத்து கப்பல்களைத் தாக்கியது. 2007ன் பிற்பகுதியில் கடைசியாக மூழ்கடிக்கப்பட்ட படகு, ஸ்ரீலங்காவிலிருந்து 3,000 கி.மீ தூரத்துக்கு அப்பால் ஆவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கொகோ தீவுக்கு அருகிலும் மூழ்கடிக்கப்பட்டது.
இந்த மூன்று காரணிகளும் இணைந்த மூலோபாய இலக்கினை பின்பற்றுவது விரோதிக்கு பொருத்தமானது, இந்த நோக்கத்திற்கான முழு நாட்டினதும் கவனத்தை ஈர்க்கும் பாரிய உத்தியை பயன்படுத்தவதும் மற்றும் உகந்ததான ஒரு துணை இராணுவ மூலோபாயத்தை பின்பற்றுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபணமாகியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ முற்றாக அழிக்கப் பட்டுவிட்டது. தொடர்ச்சியான தோல்விக்குப் பதிலாக அதன் வியூகத்தை மாற்ற முடிந்தால் வெற்றி பெறலாம் என்பதை அரசாங்கம் நிரூபித்தது. அதே நேரம் எல்.ரீ.ரீ.ஈ அதன் முந்தைய வெற்றிகரமான சூத்திரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருந்ததால் தோல்வி அடைந்தது.
அரசாங்கம் பொதுமக்களின் இறப்பினை கருத்தில் கொள்ளாது இராணுவ படைகளை கண்மூடித்தனமாகவும் கொடூரமாகவும் பயன்படுத்தியதால் மாத்திரம்தான் ஸ்ரீலங்காவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இந்தக் கருத்து சரியாக வலியுறுத்துவது யுத்தங்கள் என்பது அதன் இயல்பில் கொடூரமானதும் வன்முறையானதும் ஆகும் அதில் பிரவேசிப்பதோ அல்லது அதனை தொடர்வதோ எளிதான ஒன்றல்ல. எனினும் அது முக்கியமான காரணிகளை உதவியற்ற முறையில் புறக்கணித்துள்ளது மற்றும் அதை சற்று விளக்குவோம். இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வெற்றிகரமான உத்திகளினால்தால் வெற்றி அரசாங்கத்துக்கு கிடைத்தது என்று – ஆயினும் கூட அந்த உத்திகளை கண்டு பிடிப்பதற்கு அரசாங்கத்துக்கு 22 வருடங்கள் பிடித்துள்ளன.
இது தொடர்பாக வேறு இரண்டு மேற்கின் தலைமையிலான கிளர்ச்சி எதிர்ப்பு யுத்தம் நடந்த காலத்தில் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமாக இருக்கும்.
மோதலில் ஏற்பட்ட மொத்த மரணங்களின் விபரங்கள்
கொல்லபட்டவர்களின் வகை ஸ்ரீலங்கா போர் ஈராக் போர் ஆப்கானிஸ்தான் போர்
(1983 – 2009) (2004 - 2009) (2001 - 2014)
1.நட்பு படை ஆட்கள் 29% 17% 29%
2.ஏதிரி படை ஆட்கள் 37% 22% 46%
3.பொது மக்கள் 34% 61% 25%
___________________________________________________________________________________________________________
இவைகள்தான் மூன்று வித்தியாசமான உள்நாட்டுப் போர்கள் அவை ஒவ்வொன்றும் கிளர்ச்சி எதிர்ப்பு மூலோபாயங்கள் முன்னேறப்பட்ட பரிணாமங்களைக் காண்பிக்கின்றன. அனைத்திலும் தொடர்புபட்டுள்ள பொதுமக்கள் இறப்பு விகிதத்தில் முக்கியமாக ஈராக்கில் குறிப்பிடத் தக்க அளவு மோசமான முறையில் 61 விகிதம் ஆகவும் ஆப்கானிஸ்தானில் ஓரளவு மெச்சத்தக்க வகையில் 25 விகிதம் ஆகவும் உள்ளது. ஸ்ரீலங்கா போரில் கொல்லப் பட்ட மொத்த பொதுமக்கள் தொகை 34 விகிதமாக உள்ளது மற்றும் இதன்படி பரந்தளவில் ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீலங்கா யுத்தம் தீhக்கமான வெற்றி என்பதை தவிர ஓரளவு குறிப்பிட்டு கூற முடியாதது எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஈராக்; மற்றும் ஆப்கானிஸ்தானில் வெற்றி என்பது கிடைக்கவில்லை, அங்கு சமாதானம் தோன்றவில்லை மற்றும் மக்கள் தொடர்ந்து மரணித்து வருகிறார்கள்.
ஸ்ரீலங்காவில் 2009ல் துப்பாக்கிகள் மௌனமாக்கப்பட்டு விட்டன, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, வேலையில்லா திண்டாட்டம் குறைவாக உள்ளது மற்றும் தனி நபர் வருமானம் சீராக அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் வறுமையான நாடாக இருந்த போதும் ஒரு உள்நாட்டு யுத்தத்தில் அதனால் சமாதானத்தை வெல்ல முடியும் எனத் தெரிகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மூலோபாயத்தை சரியான வகையில் பயன்படுத்துவதே.
(பீற்றர் லேயிற்றன் கணிசமானளவு பாதுகாப்பு அனுபவம் கொண்டிருப்பதுடன் பாரிய மூலோபாயத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்)
- பீற்றர் லேயிற்றன்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக