புதன், 22 ஏப்ரல், 2015

எக்ஸெல் டிப்ஸ்...

ஒர்க் ஷீட்டில் என்டர் கீ

எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும்.



இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.
பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும்.

அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம். இதற்கான வழிகள்:

1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும்.

2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவும். என்டர் அழுத்திய பிறகு கர்சர் எங்கும் செல்லக் கூடாது எனில், இதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.

4. என்டர் அழுத்திய பின்னர், கர்சர் எங்கேனும் செல்ல வேண்டும் என எண்ணினால், டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின்னர் அருகே உள்ள கீழ்விரிமெனுவிற்கான அம்புக் குறியினை அழுத்தி, அதில் உள்ள கீழே, மேலே, வலது மற்றும் இடது (Down, Up, Right or Left) என உள்ளதில் எந்தப் பக்கம் கர்சர் செல்ல வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் அமைத்தபடி, டேட்டா என்டர் செய்திடுகையில், என்டர் கீ அழுத்தும்போது, கர்சர் நகர்த்தப்படும்.

ஸ்குரோலிங்

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள்.

திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது?

மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள்.

உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு?

ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே?

எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள்.

புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது? அதுதான் இல்லை.

நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது.

புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல்

இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல