மேற்கு வங்கத்தில் பெண்ணொருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், கோபால்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரமிளா மோண்டல் (வயது 42) என்ற பெண் 4 வயது பாரதி என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பாரதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரமிளாவின் மைத்துனர் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரமிளா தனது மகளின் தலைப் பகுதியில் தோலை அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மைத்துனரும் அவரது மனைவியும், தலையில் இரத்தம் வழிந்த பாரதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் பிரமிளாவை கட்டி வைத்து அடித்துள்ளனர். நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்ட பிரமிளா அதற்கான காரணத்தை சொல்லவில்லை. 5 குழந்தைகளுக்கு தாயாரான பிரமிளா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று கிராம வாசிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, கிராம மக்களால் கட்டி வைக்கப்பட்ட பிரமிளாவை மீட்டுள்ளனர். பிரமிளாவின் கணவர் ஹபு மோண்டல் கூலிவேலை செய்வதற்காக ஓராண்டுக்கு முன் டில்லி சென்றதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக