திங்கள், 22 ஜூன், 2015

மெல்­லிய உத­டு­களை தடிப்­பா­ன­தாகக் காட்ட.....

இன்­றைய பெண்கள் அனை­வ­ருமே தங்­க­ளது உடல் அழகை பரா­ம­ரிப்­பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். குறிப்­பாக, முக அழகு பரா­ம­ரிப்பில் அதிக கவனம் எடுத்­து­வ­ரு­கின்­றனர். இதன் கார­ண­மாக பல ஒப்­பனை பொருட்­களை பயன்­ப­டுத்த தொடங்­கி­யுள்­ளனர்.



பெண்கள் தங்­க­ளது ஒப்­பனைப் பொருட்­களை தேர்வு செய்­யும்­போது அவை தர­மா­ன­தா­கவும் சரு­மத்­திற்கு ஏற்­பு­டை­ய­தா­கவும் இருக்­கு­மாறு தேர்வு செய்­ய­வேண்டும். உங்கள் உத­டுகள் மெல்­லி­ய­தாக இருப்­பதை நினைத்து கவலை கொண்­டுள்­ளீர்­களா? இவை அழ­கா­கவும் தடி­ப்பா­னதாகவும் இல்லை என்று வருத்­தப்­ப­டு­கின்­றீர்­களா? இவை அனைத்­தையும் சில டிப்ஸ்கள் மூல­மாக தீர்க்­கலாம். உங்கள் உதட்டை அழ­கு­ப­டுத்­தவும் வடி­வ­மைக்­கவும் லிப் இன்­ஜெக் ஷன் உப­யோ­கிக்­கலாம். எனினும், இவை விலை அதி­க­மாக இருப்­ப­தா­கவும் இவற்றால் பல பின்­வி­ளை­வுகள் ஏற்­ப­டு­வ­தா­கவும் நிரூ­ப­ணமா­கி­யுள்­ளது.

உதடு அறுவை சிகிச்சை மற்றும் அதிக அழ­குப்­பொ­ருட்­களை உப­யோ­கிப்­பது போன்­ற­வை­களால் உதடு அழகு அதி­க­ரிக்­காது. லிப் இன்­ஜெக் ஷன் பயன்­ப­டுத்­திய உத­டுகள் தடி­ம­னா­கவும் பிர­கா­ச­மா­கவும் இருக்கும். ஆனால், இவற்றின் பின்­வி­ளை­வுகள் கொடு­மை­யா­னவை. எளிய டிப்ஸ்­களை கொண்டு இயற்­கை­யான முறையில் உங்கள் மெல்­லிய உத­டு­களை தடி­ம­னாக மாற்­றலாம். இதுவே உங்­களை அழ­காகக் காட்டும் சிறந்த வழி­யாகும். உங்கள் அழகை விளக்­கு­வதில் உங்கள் உத­டுகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. அதனால், அதனை சிறந்த முறையில் பாது­காக்­க­வேண்டும்.

உங்கள் மெல்­லிய உதட்டை தடி­ம­னாக மாற்றும் வழியில் அதி­க­மாக எதையும் செய்­ய ­வேண்டாம். சிறந்த எளிய முறை­யி­லேயே சரி­ செய்­து­வி­டலாம். பில்லர் உப­யோ­கித்தல் துளைத்தல், சிகிச்­சைகள் போன்­ற­வற்றை செய்ய வேண்டாம். ஏனெனில், அவற்றை நாம் திரும்ப திரும்பச் செய்­ய­வேண்டி இருக்கும். அதனால், இயற்­கை­யான முறையில் மெல்­லிய உத­டு­களை தடி­ம­னாக்கும் சில எளிய வழி­களைப் பார்க்­கலாம். சரி­யான வளை­வுகள் உங்கள் உதட்­டிற்கு சரி­யான அவுட்லைன் கொடுத்தால் அழகாக் காட்­சி­ய­ளிக்கும். உத­டு­களை தடி­ம­னாக காண்­பிப்­ப­தற்­காக சிலர் தவ­றான வளை­வு­களை வரைந்து விடு­வார்கள். எனினும், அழ­கான நேர்த்­தி­யான அவுட்லைன் வரைந்தால் உங்கள் உத­டுகள் தடி­ம­னா­கவும் அழ­கா­கவும் காட்­சி­ய­ளிக்கும்.

டூத் ப்ரஷ் இது உங்கள் உத­டு­களை இயற்­கை­யான முறையில் தடி­ம­னாக்­கு­வ­தற்­கான வழி­களில் ஒன்­றாகும். உங்கள் டூத் ப்ரஷ் நீங்கள் விரும்­பிய .ெமஜிக்கை செய்யும். ஒப்­பனை போடு­வ­தற்கு முன்பு உங்கள் உத­டு­களை பிரஷால் தேய்த்து விடுங்கள். இதன்­மூலம் உங்கள் உத­டுகள் பெரி­தா­கவும் அழ­கா­கவும் காட்­சி­ய­ளிக்கும். மேலும் அழ­கு­ப­டுத்த உதட்­டு­சா­யத்தை பயன்­ப­டுத்­தலாம்.

மொய்ஸ்­சு­ரைசர் உங்கள் உத­டுகள் அழ­கா­கவும் பெரி­தா­கவும் மாற்­று­வ­தற்கு உத­டு­களை .ெமாய்ஸ்­சுரைஸ் செய்ய வேண்டும். அதனால் சிறந்த மொய்ஸ்­சு­ரை­சரை தெரிவு செய்­யுங்கள். உங்கள் உத­டு­களை சுற்றி .ெமாய்ஸ்­சு­ரைசர் தட­வுங்கள். உங்கள் கைக­ளிலும் தட­வுங்கள். உங்கள் உத­டு­களை தவிர்த்து விடா­தீர்கள். ஏனெனில், உங்கள் உடம்பில் அதுவும் ஒரு பகு­திதான். இது உங்கள் மெல்­லிய உத­டு­களை தடி­ம­னாக மாற்­றக்­கூ­டிய இயற்கை வழி­களில் ஒன்­றாகும்.

ஸ்கரப் உடல் அழகு பரா­ம­ரிப்பில் எக்ஸ்­போ­லி­யேஷன் மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதனை வழக்­க­மான முறையில் செய்து வர­வேண்டும். ஒப்­பனை செய்­வ­தற்கு முன்பு உங்கள் மெல்­லிய உத­டு­களில் உள்ள இறந்த அணுக்­களை ஸ்க்ரப் செய்­ய­வேண்டும். பிறகு மொயிஸ்சு­ரைசர் தடவ வேண்டும்.

அழகு குறிப்­புகள் உங்கள் உத­டு­களைச் சுற்றி கன்­சீலர் உப­யோ­கித்து உங்கள் மெல்­லிய உத­டு­களை தடி­ம­னாக மாற்­றலாம். உத­டுகள் முழு­வதும் அல்­லாமல் உத­டு­களின் மத்­தியில் மட்­டுமே லிப் க்ளாஸ் தட­வலாம்.

இது உங்கள் உத­டு­களை பெரி­தாகக் காட்ட உதவும். சரி­யான நிறம் ஒப்­பனை நேர்த்­தி­யாக அமை­வ­தற்கு நாம் நமது சரு­மத்­திற்கு ஏற்ற ஒப்­பனை நிறங்­களை தேர்வு செய்வதில் தான் இருக்கின்றது. அடர் நிறங்களை தவிர்த்து மென்நிறங்களை பயன்படுத்தினால் உங்கள் மெல்லிய உதடுகள் பெரிதாகக் காட்சியளிக்கும்.

மென்தால் மாயம் உங்கள் உதடுகளுக்கு லிப் பாம் அல்லது க்ளாஸ் தேர்வு செய்யும் போது மென்தால் உள்ளவைகளாகவே தேர்வு செய்யுங்கள். இது உங்கள் உதடுகளை தடிமனாக காட்டும். இது தற்காலிகமான ஒன்று என்றாலும் சிறந்த பலனை அளிக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல