திங்கள், 22 ஜூன், 2015

துன்பங்களை துரத்தும் துளசிச் செடி

மனித குலத்தைக் காக்க இறைவன் எத்­த­னையோ வச­தி­களை செய்­தி­ருப்­ப­தோடு உடல் நலத்தைப் பேண மூலி­கை­க­ளையும் படைத்­தி­ருக்­கிறார். அவை­களில் துளசிச் செடியும் முக்­கி­ய­மா­ன­தாகும். துள­சியை அறி­யாத இந்­துக்கள் இல்­லை­யென்றே சொல்­லலாம். கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இச்­செடி இயே­சு­நா­தரின் சமா­தி­யி­லி­ருந்து முளைத்­த­தென்ற நம்­பிக்­கை­யுள்­ளதால் கிழக்கு ஐரோப்­பிய தேவா­ல­யங்­க­ளிலே துளசி இலை­களை வணங்கும் வழக்கம் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது. “பிருந்தை" எனும் பக்தை திரு­மாலை விட்டுப் பிரி­யாமல் இருப்­ப­தற்­காக தவம்­செய்து துளசிச் செடி­யாகப் பிறந்து அவர் கழுத்தை அலங்­க­ரிக்க வரம் பெற்­ற­தாக புரா­ணமும் சொல்­கி­றது.



துள­சிக்கு பல பெயர்கள் இருக்­கின்­றன. பிருந்தா, கிராம்யா, பகு­மஞ்­சரி, பகுத்­திரி, பாவனி, விஷ்ணு வல்­லபா, சூலக்னி, சுரசா, சுரபி, குல்லை, துழாய், வனம் என்­ப­தாகும்.

துள­சியில் பத்து வகைகள் இருப்­ப­தா­கவும் சொல்­லப்­ப­டு­கின்­றது.

சிவ­து­ளசி, விஷ்­ணு­து­ளசி, கற்­பூ­ரத்­து­ளசி, சிவப்­புத்­து­ளசி, காட்­டுத்­து­ளசி, சிறு­து­ளசி, பெருந்­து­ளசி, பைரத்­து­ளசி, கிருஷ்­ண­து­ளசி.இலட்­சுமி துளசி என்­ப­வை­யாகும்.

துளசிச் செடி மத பேத­மில்­லாமல் ஒவ்­வொ­ருவர் வீட்­டிலும் வளர்க்க வேண்­டிய அதி­முக்­கியமான ஒரு செடி­யாகும். பொது­வாக மரங்கள் பகலில் மட்டும் பிராண வாயுவை வெளி­யி­டு­கின்­றன. துளசி இரவும் பகலும் பிரா­ண­வா­யுவை வெளி­வி­டு­கின்­றது. சிறந்த மருத்­து­வக்­ கு­ணங்கள் துளசி இலை­க­ளுக்­குண்டு. ஆயுர்வேத வைத்­திய முறை­யிலும் இதனைப் பற்றி விசே­ட­மாகக் கூறப்­பட்­டுள்­ளது. இதன் நறு­ம­ணக்­காற்றை சுவா­சிப்­பதில் நோய்கள் தீரு­கின்­றன. துள­சி­ வ­னத்தில் பிணம் எத்­தனை நாள் இருந்­தாலும் அழு­க­மாட்­டா­தென்று இன்­றைய மருத்­து­வர்­களும் ஒப்­புக்­கொள்­கின்­றனர். துள­சி­யி­லி­ருந்து வரும் காற்று நீண்ட ஆயு­ளைத் ­த­ரு­கின்­றது.

தேள் கடித்த இடத்தில் துள­சி­வேரை நன்­றாக அரைத்துப் பூசினால் வலி­கு­றையும். கருப்­புத்­து­ளசி "மலே­ரியா" காய்ச்­சலைப் போக்­கு­கின்­றது என்று 1907இல் நடந்த ஒரு "ஒரு மலே­ரியா மாநாட்டில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் கருந்­து­ளசி அழ­கற்­ற­வரை அழ­குள்­ள­வ­ராக ஆக்­கு­கின்­றது என்று "அதர்­வ­ண­வேதம்" கூறு­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது.

துள­சிச்­செடி உள்ள இடத்தில் கிரு­மிகள் மட்­டு­மல்­லாது பாம்பு போன்­ற­வையும் இருக்­காது. துளசி உள்ள வீட்டில் இடியும் விழா­தென்று விஞ்­ஞானம் கூறு­கின்­றது. இச்­செ­டியில் மின்­சக்தி அதி­க­முள்­ளதால் இரத்த ஓட்­டத்தைச் சீர்­ப­டுத்­து­கின்­றது. துளசி இலை­களை மென்­று­தின்றால் பல­வித வியா­தி­களும் குண­மா­கின்­றன. 30 மி.லீ துளசி ரசம் வீதம் 41நாள் அருந்­தினால் பெண்­க­ளுக்கு நீண்ட நாள் இடை­வெ­ளியில் வரும் மாத­விடாய் பிரச்­சினை தீரும்.

இப்­ப­டிப்­பட்ட பல நற்­கு­ணங்கள் துள­சிக்கு இருப்­பதால் தான் நம்­முன்­னோர்கள் துள­சி­மணி மாலை அணியச் சொல்­லியும் துள­சி­மாடம் வீடு­களில் வைத்து வணங்­கு­மாறும் சொல்­லி­யி­ருக்­கி­றார்கள். சில ஆல­யங்­களில் துளசி தீர்த்­தமும் வழங்­கப்­ப­டு­கின்­றது.

துள­சி­மாடம் வைத்து வணங்­கு­வோர்கள் எந்­த­முக வாசல் வீட்­டிற்­கா­னாலும் தென் மேற்­குத்­தி­சையில் அமைக்கும் போது மட்டும் மாடத்தை உயரமாகக் கட்டி வளர்க்கலாம். வடகிழக்கு, வடக்கு, கிழக்கு வீட்டில் வசிப்பவர்கள் பெரியமாடம் கட்டி வளர்க்கக் கூடாது. சிறிய தொட்டி, உயரம் குறைந்த பூச்சாடி, அல்லது நிலமட்டத்திலே வைத்து வணங்கலாம். இது முக்கியமானதாகும். திசைக்கேற்ப மாடம் உயரமாகவும் சிறியதாகவும் இருக்க வேண்டும் என்பது வாஸ்து விதியாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல