வெள்ளி, 10 ஜூலை, 2015

அனைவரும் பகிர்ந்து இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்….

பிறந்த 6 மாதத்திலிருந்து இரத்தச் சோகை (தலசியா மேஜர்) என்ற நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல சிகிச்சைகள் செய்தும் எவ்வித பலனுமின்றி இன்று 5 வயதாகியும் நோயின் தன்மை அதிகமாகி மேற்கொண்டு சிகிச்சை செய்ய எவ்வித வசதியுமின்றி தற்போது உயிருக்காகப் போராடி வரும் இக் குழந்தையின் பூ முகத்தைப் பாருங்கள்..

இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???



இந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு தாங்கிக் கொள்ள முடியாத பிஞ்சு உடலில் எப்படித்தான் ஒரு கொடிய நோயினை கொடுக்க ஆண்டவனுக்கு மனம் வந்ததோ… தெரியவில்லை.!!!

குழந்தைகள் எல்லாம் தெய்வத்தின் குழந்தைகள் என்றால் இந்தப் பிஞ்சுக் குழந்தை யாரின் குழந்தை.???

ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம் என்றால் பரவாயில்லை 30 லட்சங்கள் என்று பேருடியாகச் சொன்னால் இந்த ஏழைப் பெற்றோரால் என்ன செய்ய முடியும்..? எங்கு போக முடியும்.??

அப்படித்தான் சென்னை அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.. அப்பல்லோ மருத்துவமனையில்தான் இந்தக் குழந்தைக்கான மாற்றுச் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

(அப்பல்லோ மருத்தவமனையால் வழங்கப்பட்ட இந்தக் குழந்தையின் நோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கேற்ற செலவு பற்றியும் அறிவிக்கப்பட்ட விபரத் துண்டும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.)

எதுவுமே செய்ய முடியாத இந்த ஏழைப் பெற்றோர் இறுதியாக உதவி கேட்டு வந்த இடம்தான் ஈரோடு கலெக்டர் அலுவலகம்.


(கடந்த வாரம் தமிழகப் பத்திரிகைகளில் இந்தக் குழந்தை பற்றிய செய்திகள் இடம்பிடித்தன… அந்தப் பத்திரிகை விபரங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.)

இதோ அந்தச் செய்தி…..

“ரத்தச் சோகை நோயால் கடுமையாக அவதிப்பட்டு வரும் தங்களது 5 வயது மகளுக்கு சிகிச்சைக்கான உதவி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த பெற்றோர்.

ஈரோடு – கரூர் மெயின் ரோட்டில் உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் தியாஸ்ரீ (வயது 5). யுவராஜ், தனது மனைவி, மகளுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சென்று. அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:

எனது மகள் தியாஸ்ரீ 6 மாத குழந்தையாக இருந்த போதே ரத்தச் சோகை நோயால் (தலசியா மேஜர்) அவதிப்பட்டு வருகிறாள். இதனால் மாதாமாதம் மருத்துவமனைக்கு சென்று புது இரத்தம் செலுத்தப்படுகிறது. இதற்கு ரூ.2500 செலவாகிறது. மேலும் இந்த நோயை குணப்படுத்த ஆபரேசன் செய்ய வேண்டும் என்றால் மருத்துவ செலவு ரூ.30 லட்சம் வரை ஆகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோ டிரைவரான என்னால் மருத்துவ செலவு செய்ய வசதி இல்லை. எனவே தாங்கள் எனது மகளின் மருத்துவ செலவுக்கு அரசின் நிதிஉதவி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.”

ஆகவே உறவுகளே, சிகிச்சை செய்ய வசதியில்லாத ஏழைப் பொற்றோரின் நிலையறிந்து ரத்தச் சோகை நோயினால் மிகவும் அவதியுற்று உயிருக்கு போராடி வரும் குழந்தை, தியாஸ்ரீயின் மருத்துவ சிகிச்சைக்காக உதவிட வசதி படைத்த நல் உள்ளங்கள் தங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையாவது மனமுவந்து கொடுத்து உதவிட முன் வரலாமே???

சிறுதுளி பெரு வெள்ளம் போல உங்களது ஒரு சிறு உதவியால் அந்தக் குழந்தையின் உயிர் காப்பற்றப்படும்.

தொடர்புக்கு:

அலைபேசி : பெற்றோருடன் பேச…
0091-8012432233
0091-9942603372

■ வங்கி விபரம்

Name : Y. Diyasree
Bank : Indian Bank,
Solar Erode – 638002,
A/C No. : 6346749511
FSC Code : IDIB000S229
MICR Code : 638019019
Branch Code : 2433

■ குறிப்பு :
டீடி யாகவோ செக்காகவோ அனுப்புவதாக இருந்தால் அப்போலோ மருத்துவமனையின் பெயரில் அனுப்பவும்.
பணமாக அனுப்பினால் வங்கி முகவரிக்கு அனுப்பவும்.

● அப்பல்லோ மருத்துவமனை முகவரி:

Apollo hospitals enterprise limited
Diyasree Y- 313628

If there are any further queries,please do not hesitate to contactme on -04433151294

நன்றி…

அனைவரும் பகிர்ந்து உதவிட முன்வாருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல