ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார்.
கண்டியின் கலேவெலவில் கராத்தே பயிற்றுவிப்பாளராக இருந்த இவர், ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பின்னர் இஸ்லாமிய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார் என்றும் இதனால் பாகிஸ்தானின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்தை கற்று எல்.எல்.பி. பட்டம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது.
6 பிள்ளைகளின் தந்தையான இவர் கராத்தே பயிற்சிகளை வழங்குவதற்காக மகரகமவிற்கும் அடிக்கடி செல்பவர் என்றும் கூறப்படுகின்றது. அபூவின் மரணம் குறித்து அவரின் மாணவர்கள் தமது முகநூல் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டதுடன் அவருக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பலர் இணைந்துள்ளனர்
எனினும் இவரே முதலாவது இலங்கையர் எனக் கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து சி.ஐ.டியினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இதில் வெளிவிவகார அமைச்சும் அக்கறை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக