திங்கள், 17 ஆகஸ்ட், 2015

விண்டோஸ் 10ல் டிவிடி இயங்க கட்டணமா?

விண்டோஸ் 10, இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்ட பல செயலிகளை விலக்கியுள்ளது. அதில் ஒன்று, நாம் வழக்கமாகக் கையாளும் டிவிடி பிளேயர் இயங்குவதற்கான புரோகிராம். ஆனால், இந்த டிவிடி புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.



விண்டோஸ் 10 இலவசமாக அப்கிரேட் செய்யப்பட்டாலும், இதுவரை நமக்கு அளிக்கப்பட்டு வந்த சில புரோகிராம்களை, இது போல கட்டணம் செலுத்திப் பெறுமாறு மைக்ரோசாப்ட் வழி அமைத்துள்ளது. இது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கான கட்டணம் 15 டாலர்.

இதே போல சாலிடெர் கேம் விளையாடவும், விளையாடுபவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவும், இந்த விளையாட்டுப் பிரியர்களைத் திகைக்க வைத்துள்ளது.

விண்டோஸ் 8 சிஸ்டத்திலும், டிவிடி பிளேயர் தரப்படவில்லை. அதற்கான புரோகிராமினை அப்டேட் செய்திட கட்டணம் செலுத்த வேண்டியதிருந்தது.

இப்போது, பல பயனாளர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்துதான், விண்டோஸ் 10க்கு மாறிக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு, டிவிடி இயங்காது என்பது ஆச்சரியமும் திகைப்பும் கூடிய ஒரு உணர்வாக இருக்கும்.

கட்டணம் செலுத்த வேண்டுமா? என முகம் சுளிப்பவர்கள், பிரபலமான தர்ட் பார்ட்டி புரோகிராமான வி.எல்.சி. புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்டோஸ் 10க்கான புரோகிராமிற்கு, வி.எல்.சி. செயலியைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், “VLC for Windows Store” என அழைக்கிறது. இதில் விடியோ பைல்கள் மட்டுமின்றி, பல பார்மட்களில் உள்ள ஆடியோ பைல்களையும் இயக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவலாகும். இதில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், பல குறைகளையும் நிவர்த்தி செய்துள்ளதாக இதனை வடிவமைத்த தாமஸ் நைக்ரோ தெரிவித்துள்ளார்.

புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில், இதன் இடைமுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேடி அறியும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. சப் டைட்டில் மற்றும் 10 பிட் விடியோ இயக்கத்திற்கான தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது.

இதனை டவுண்லோட் செய்திட http://blog.thomasnigro.fr/2015/08/07/vlc-1-5-on-the-road-to-windows-10/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மொபைல் போனுக்கான விண் 10 பதிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல