திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சேப் மோட் (Safe Mode) சேப் மோடில் நுழைய வேண்டும் என்றால்

1. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கட்டத்தில் “msconfig” என டைப் செய்து எண்டர் தட்டவும். இது, System Configuration டூல் காட்டும்.

2. இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.



3. Safe Boot என்பதற்கு அடுத்து உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். “Minimal” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்வு செய்தவுடன் ஓகே கிளிக் செய்திடவும்.

4. இதனை அடுத்து காட்டப்படும் பாக்ஸில் ஓர் எச்சரிக்கை செய்தி இருக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். அதாவது, உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்கள் சேப் மோடில் இயக்கலாம்.

இதில் Restart என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது நீங்கள் அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் பணியினை முடிக்க வேண்டும் என்றால், ரீ ஸ்டார்ட் செய்திடாமல், அந்த வேலையை முடிக்கவும். அதன் பின் ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் சேப் மோடில் இயங்கத் தொடங்கும்.

5. நீங்கள் சேப் மோடில் இருக்கும்போது, நீங்கள் எதை எல்லாம், கம்ப்யூட்டரில் சரி செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டீர்களோ, அவை அனைத்தையும் முடித்துவிடவும். பின் மீண்டும் எம்.எஸ். கான்பிக் கொடுத்து System Configuration utility விண்டோ பெறவும்.

இங்கு சேப் மோட் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இல்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து சேப் மோடில் தான் இயங்கத் தொடங்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல