வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

இரு ஆடம்­பர குடி­யி­ருப்பு மாடிக் கட்­ட­டங்­க­ளி­டையே 115 அடி உய­ரத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும் நீச்சல் தடாகம்

இரு ஆடம்­பர குடி­யி­ருப்பு மாடிக் கட்­ட­டங்­க­ளி­டையே தலை­யி­லி­ருந்து 115 அடி உய­ரத்தில் கண்ணா­டி­யா­லான அடித்­த­ளத்தைக் கொண்ட நீச்சல் தடா­க­மொன்றை நிர்­மா­ணிக்கும் நட­வ­டிக்கை பிரித்­தா­னி­யாவில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.



லண்­டனில் தேம்ஸ் நதிக்­க­ரை­யோ­ர­மா­க­வுள்ள பற்­றர்ஸீ பிர­தே­சத்தில் 2,000 வீடு­களை உள்­ள­டக்கி 602,000 ஸ்ரேலிங் பவுண் ஆரம்ப கட்ட செலவில் நிர்­மா­ணிக்­கப்­படும் குடி­யி­ருப்புத் திட்­டத்­தி­லேயே இந்த அந்­த­ரத்தில் காட்­சி­ய­ளிக்கும் நீச்சல் தடாகம் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.

25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த நீச்சல் தடா­கத்தில் நீந்தும் ஒருவர் பாரிய பாதா­ள­மொன்­றுக்கு மேலாக மிதப்­பது போன்ற திகி­லு­ணர்வை அனு­ப­விக்க முடியும் என அந்த நீச்சல் தடா­கத்தை நிர்­மா­ணிக்கும் நட­வ­டிக்­கையில் பங்­கேற்­றுள்ள பால்­லிமோர் குழு­மத்தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி சீன் மல்­ரையன் தெரி­வித்தார்.

இந்த மாடிக்குடியிருப்பிலுள்ள வீடுகளை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல