வியாழன், 20 ஆகஸ்ட், 2015

புலம்பெயர் தமிழர்களிற்கு அன்பான வேண்டுகோள்கள்

குறுகிய கோடை கால விடுமுறையை கழிக்க தாயகம் வந்து செல்லும், தாயகம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக பீத்திக்கொள்ளும் புலம்பெயர் தமிழகர்களிற்கு எனது அன்பான வேண்டுகோள்கள் சில...

1. நீங்கள் தாய்கம் வரும்போது சில தாயகத்திற்கே உரித்தான சில கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளீர்கள் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.



2. உங்கள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்பிள்ளைகளை இங்கு அழைத்து வரும் போது தயவு செய்து அவர்களிற்கு குழைந்தை பருவத்தில் அணிந்த ஆடைகளை அணிவித்து கூட்டி வர வேண்டாம். நம் தனித்துவ கலாச்சார ஆடைகளான சுடிதார், பாவாடை சட்டை அல்லது சேலை என்பவற்றின் அருமை பெருமைகளையும் நமது கலாச்சார விழுமியங்களையும் எடுத்து கூறி அவற்றை அணிவித்து கூட்டி வரவும்.

3. உங்கள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஆண்பிள்ளைகளை இங்கு கூட்டி வரும்போது அவர்கள் கழுத்து காது மூக்கு கை போன்றவற்றில் அணிந்துள்ள நாய்ச்சங்கிலிகள், மூக்குத்திகள், வளையங்கள் , மற்றும் இதர பொருட்களை கழற்றி மதவாச்சி நகரில் காணப்படும் குப்பைத்தொட்டிகளில் எறிந்து விட்டு தாயகத்துக்குள் நுழையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

4. உங்கள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஆண்பிள்ளைகளை இங்கு கூட்டி வரும்போது அவர்களின் இடுப்புக்கேற்ற வகையில் காற்சட்டைகளையோ நீள்காற்சட்டைகளயோ அணிந்து வரும்படி அவர்களை கேட்டுங்கொள்ளுங்கள். அல்லாவிட்டால் தாயகத்திற்குள் நுழைந்தவுடன் வவுனியாவில் இறங்கி கயிற்று கடை ஒன்றிற்கு கூட்டி சென்று சணல் கயிறு 3 அடி வேண்டிக்கொடுத்து அவர்களை நன்றாக இறுக்கி கட்டும் படி கேட்டுக்கொள்ளவும்.

5. அத்துடன் அவர்களை திருத்த முன்னர், உங்கள் நடை உடை பாவனைகளையும் சும்மா லேசாக பார்த்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன்.

6. இறுதியாக ஒரு உருக்கமான வேண்டுகோள். நீங்கள் இங்கு வந்து உங்கள் பாழடைந்த வீடுகளையும், உதவி இன்றி பரிதவிக்கும் உங்கள் சொந்தங்களையும் பார்த்த பின்னர் தயவு செய்து ஒருமுறையேனும் சிந்தியுங்கள் ' நாங்கள் இங்கு நிரந்தரமாக வாழ்ந்தால் தான் என்ன' என்று. தயவு செய்து ஒப்பீடு செய்யாதீர்கள் வெளிநாட்டு சுக போகத்தையும் தாயக வலியுடனான வாழ்க்கையையும். அவ்வாறு சிந்திக்காவிட்டால் தயவு செய்து யாழ்ப்பாண நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையப்போகிறது என்று முதலைக்கண்ணீர் வடிக்காதீர்கள். ஏனென்றால் அதற்கு நீங்கள் அருகதை அற்றவர்கள்.

(Tharsuthan Muthulingam)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல