செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கரடி பொம்மையின் தலையை வெட்டும் 3 வயதுச் சிறுவன்

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், 3 வயது சிறுவன் ஒருவன் கரடி பொம்­மை­யொன்றின் தலையை கத்­தி­யொன்றால் வெட்­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.


அந்த வீடியோ காட்­சியில் ஒரு கையால் கரடி பொம்­மையை அணைத்­த­வாறு காணப்­படும் பால் மணம் மாறாத குழந்­தை­யையொத்த முகத்தைக் கொண்ட அந்த சிறுவன், தனது மறு கையில் கத்­தி­யொன்றை ஏந்­தி­யி­ருக்­கிறான்.
அந்த சிறு­வ­னுக்கு பின்­பு­ற­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கறுப்புக் கொடி காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து சிறுவன் அந்தக் கரடி பொம்­மையின் தலையை தனது கையி­லி­ருந்த கத்­தியால் வெட்­டு­கிறான்.

மேற்­படி 30 செக்கன் வீடியோ காட்சி சிறு­வ­னது படுக்­கை­ய­றையில் வைத்து பட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூலை மாதம் சிறுவன் ஒரு­வனால் நப­ரொ­ரு­வ­ருக்கு தலையை வெட்டி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டிருந்தனர்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல