புதன், 19 ஆகஸ்ட், 2015

புலம் பெயர் தேசத்தில் முதலாளி

தொழில் ---- முதலாளி

பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு )

சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள்

வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை

பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது

வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள்


எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள்

தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள்

வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன்

ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன்

customers ------ எப்பவும் காசாகவே குடுப்பவர்கள் ,( கார்ட் வேண்டாம்)

rice ------ பூநகரி கைகுத்தல் என்று கேரளா rice கொடுப்பது

ஆட்டு இறைச்சி----- செம்மறியோ ,மரியாடோ எல்லாம் விற்கப்படும்

ஊர் கோழி இறைச்சி ---- முட்டை போட்ட வயதான கோழிகளை தமிழ் சனத்துக்கு ஏமாத்தி விற்பது

மரக்கறி ------ அழுகும் வரை விற்கப்படுவது

காசு வாங்குபவர் ------- கடை போனில் இலங்கை or இந்தியாக்கு போனில் கதைத்து கொண்டு பில் போடுபவர்

மீன் பக்கட்----- ஆப்ரிக்க கடலில் பிடித்த மீனை யாழ்ப்பாணத்தில் பிடித்ததாக காட்டும் (லேபில் )

காலாவதி திகதி ------ அழுகும் வரை , வாடும் வரை , மணக்கும் வரை

சம்பளம் ------ திட்டி திட்டி கொடுப்பது

மது பானம்----- தமிழில் கதைத்தால் 24 மணிநேரமும் வாங்கலாம்

மனைவி ------- சம்பளம் இல்லாத தொழிலாளி

வீடு ........------ கமராவில் கடை தொழிலாளர்களை பார்க்கும் இடம்

தமிழ் ரவுடிகள் ----- களவு எடுத்த சாமான்களை அரை விலையில் குடுப்பவர்கள்

நெல்லி கிரஸ்------- 1987 இல் தரை மட்டமாக்கிய தோலைக்கட்டி பேரில் இருப்பது

தேங்காய் ---- 5 வாங்கினால் 2 அழுகி இருப்பது

hollyday ,போனஸ்,sick , பிள்ளைபேறு ------ அப்படி எந்த லீவும் எங்களிடம் இல்லை

குறிக்கோள் ------ பணம் மட்டும் (not family )

(பிரகாஷ் uk)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல