ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

41 வயசில் மகனுக்கு தங்கை போல தோற்றமளிக்கும் தைவானின் ”அழகான அம்மா”! (படங்கள் இணைப்பு)

தைவானில் 41 வயதான பெண்மணி ஒருவர் மிகவும் அழகான தோற்றத்துடன் சமூக வலைத் தளங்களை வைரலாகக் கலக்கி வருகின்றார். தற்போது 41 வயது தைவான் பெண்மணியான இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரை சாதாரண அழகு என்று சொல்ல முடியாது.



வியக்கதக்க வகையில் மிக அழகாக உள்ளார்.அவரை பார்த்தால் பள்ளி படிக்கும் மாணவி போலவே உள்ளார். சமூக வலைதளங்களில் தனது மகன் மற்றும் மகளுடன் இவர் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பவர்கள் மகனின் காதலி என்றும் மகனின் தோழி என்றுமே கூறுகின்றனர்.

உண்மையில் இந்த நடுத்தர வயது பெண் புகைப்படத்தில் போட்டோஷாப்பாலோ அல்லது அழகுக்கான அறுவை சிகிச்சையாலோ அவர் அழகை பெற வில்லையாம். அதைவிட எளிமையான ஒன்றால் அவர் இந்த இளமை தோற்றத்தை பெற்று உள்ளார். அதுதான் எலுமிச்சை சாறு என கூறி உள்ளார் இவர்.

எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும் என தன்னுடைய அழகின் ரகசியத்தைக் கூறுகின்றார் இந்த அழகான 41 வயதான அம்மா!




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல