ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

பின்லேடனின் ‘அந்த’ கிரேன் முறிந்து விழுந்த சம்பவம் கடவுளின் செயல்! – மெக்கா இன்ஜினியர் பேட்டி!

மெக்காவில் கிரேன் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடவுளின் செயலால் நடைபெற்றது என்றும்தொழில் நுட்ப கோளாறு ஏதும் இல்லை என்று கட்டுமான விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விழுந்து விபத்து ஏற்பஊஈஆ கிரேன் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் குடும்ப நிறுவனத்திற்கு சொந்தமானதாகும் என்று செய்தி வெளியாகியுள்ளது



சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவில் 24–ந்தேதி ‘ஹஜ்’ பண்டிகை தொடங்குகிறது. இதையொட்டி இங்குள்ள பெரிய மசூதியில் பல்லாயிரக்கணக்கான ‘ஹஜ்’ யாத்ரீகர்கள் முன்கூட்டியே குவிந்து வருகின்றனர்.பெரிய மசூதியில் அதிக ‘ஹஜ்’ யாத்ரீகர்கள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக கட்டிட விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கு மிகப்பெரிய கிரேன் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் முறிந்து மசூதியின் கூரைப் பகுதியின் மீது விழுந்தது.இதைத்தொடர்ந்து அந்த கூரையின் ஒரு பகுதி பெருத்த சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது. இதனால் மசூதிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான ‘ஹஜ்’ யாத்ரீகர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 107 பேர் பலியாகினர்.

மெக்காவில் நடந்து வரும் கட்டுமான விரிவாக்க பணியில், அந்நாட்டில் செயல்படும் பிரபல நிறுவனுமான சவுதி பின்லேடின் என்ற கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் குழுவைசேர்ந்த ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மேற்கண்ட சம்பவம் கடவுளின் செயலால் நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொறியாளர் கூறியதாவது: இதேபோன்ற பல கட்டுமானப்பணிகளை கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இன்றி எங்கள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.மெக்காவில் கிரேன் முறிந்து விழுந்ததில் தொழில் நுட்ப கோளாறு எதுவும் இல்லை. மனித தவறுகளும் இல்லை. இது முழுக்க கடவுளின் செயல் ஆகும்” என்றார்.

மெக்கா மசூதியில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சவுதிபின்லேடின் என்ற நிறுவனம், கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் குடும்ப நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல