வியாழன், 15 அக்டோபர், 2015

விசாரணை சூழலை எதிர்கொள்ளும் லைக்கா மொபைல் அதிபர்

சிறிலங்கா அரசிடம் இருந்து லைக்க மொபைல் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா பில்லியன் கணக்கில் பணம் பெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.



சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியான ராஜபக்சவின் உறவினருடன் இணைந்து லைக்க மொபைல் நிறுவனத்தினால் தொடங்கப்பட்ட முற்றிலும் முறைகேடான நிறுவனத்திற்கு சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் 10 மில்லியான் டொலர்கள் வரை முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

மூத்த அரசியல்வாதிகளும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்த குழு ஒன்று Sky Network குழுமத்திற்கு எதிராக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிறுவனமே போலியென தெரிவித்துள்ள அதிகாரிகள், இதுவழியாக பல்வேறு பரிவர்த்தனைகளை ராஜபக்ச உறவினர் நடத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை அப்படியே மறுத்துள்ள அல்லிராஜா, சிறிலங்காவில் தமக்கு எவ்வித தொழிலும் இல்லை எனவும், தாம் ராஜபக்ச அல்லது அவரது உறவினர்கள் எவருடனும் தொழில் ரீதியாக சந்தித்தது இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளது, அதில் Sky Networkன் 95% பங்கும் ராஜபக்ச உறவினரின் பெயரில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த தகவல்கள் பிரித்தானியா பிரதமர் David Cameron மற்றும் அல்லிராஜா உடனான உறவில் அதிக அழுத்தம் தர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. லைக்க நிறுவனம் 1.3 மில்லியன் பவுண்டுகள் வரை பிரித்தானியாவில் குறிப்பிட்ட கட்சியினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

லைக்க நிறுவனம் லண்டனில் முதலீடு செய்யும் பணம் சிறிலங்காவில் முறைகேடாக பெற்றது என இதுவரை எந்த ஆதாரங்களும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் லண்டனில் லைக்க நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

லைக்கா நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1.1 பில்லியன் பவுண்டுகள் ஆதாயத்தை திரட்டியிருந்தது. மேலும் பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக மாநகர வரியை தவிர்க்கும் பொருட்டு நிறுவனத்தின் மொத்த ஆதாயத்தை வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசின் பார்வையில் ராஜபக்ச குடும்பத்தினர் வெளி நாடுகளில் 10 பில்லியன் டொலர்களுக்கும் மேல் பதுக்கியிருப்பதாக கணக்கிட்டுள்ளது. மேலும் 2013-ம் ஆண்டு மட்டும் 5.31 பில்லியன் டொலர்களை வெளி நாட்டுக்கு கடத்தியதாக தெரிவிக்கின்றனர்.

முறைகெடுகள் குறித்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் ராஜபக்ச உறவினர்களை சுற்றியே புதிய அரசின் விசாரணை நடைபெற்று வருகின்றது. ராஜபக்ச சகோதரரை கைது செய்துள்ள அரசு, இன்னொருவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பிரித்தானியாவின் Serious Fraud Office அதிகாரிகளின் ஆதரவுடன் சிறிலங்கா அதிகாரிகள் தொடர் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.

இதில் ஒரு பகுதியாக துபாய் வங்கிக்கணக்கில் Himal Hettiarachchi பதுக்கியுள்ள 1 பில்லியன் டொலர்களுக்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

2006-ம் ஆண்டு ராஜபக்ச உறவினர் ஒருவரின் பெயரில் Sky Network நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 2007=ம் ஆண்டு வரை எவ்வித பரிவர்த்தனையும் நடைபெறாத இந்த நிறுவனம் Himal இயக்குனராக பொறுப்பேற்றதும் 95% பங்குகளும் Hasting Trading எனும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

Sky Network நிறுவனம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பழைய கொட்ட வீதி நாரேவ் வீதியில் உள்ள ராஜபக்சவினரான Himal வீட்டு விலாசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளராக Himal 2007 ஆம் ஆண்டு தனது பெயரை சேர்த்து கொண்டதுடன் 95 வீத பங்குகளுக்கு உரித்தானவரானார்.

போத்துக்கல் நாட்டை தலைமையகமாக கொண்ட Hasting Trading நிறுவனத்திற்கு லைக்கா மொபைல் உரிமையாளரான அல்லிராஜாவே அதிகளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் 90.5 வீதமான பங்குகள் அல்லிராஜாவின் மனைவியான பிரேமதர்ஷனி சுபாஸ்கரன் பெயரிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் லைக்கா மொபைல் பிரதம நிறைவேற்று அதிகாரியான மிலிண்ட் கங்கல் மற்றும் Sky Network இன் Himal Hettiarachchi ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


http://www.buzzfeed.com/janebradley/lycamobiles-offshore-empire-is-embroiled-in-corruption-probe#.bk7kPXYzn

https://www.facebook.com/BuzzFeedUKNews/videos/657601754376295/

Source: Jaffnajet
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல