புதன், 14 அக்டோபர், 2015

உதயன் முதலாளி சரவணபவனுக்கு எதிராக உதயன் ஊழியர்கள் நடாத்தும் முகப்பக்கம்

சப்ரா எனும் நிதி நிறுவனத்தை இயக்கி அதன் மூலம் பெருமளவு பணத்தை யாழ்ப்பாண மக்களிடம் இருந்து கொள்ளையிட்டு அவர்களை நடுத்தெருவில் விட்ட உதயன் பத்திரிகை முதலாளிக்கு எதிராக அப் பத்திரிகையின் ஊழியர்கள் சிலர் முகப்புத்தகப் பக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.



கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விருப்பு வாக்கில் மோசடி செய்து அருந்தவபாலனை ஏறி மிதித்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்த சரவணபவன் தற்போது தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடத்தில் கண் வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதும் அதற்காக உதயன் பத்திரிகையை தவறான வழியில் நடாத்திக் கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவராக யாழ்ப்பாணத்திற்கு மாறு வேடம் போட்டு வந்த தமிழரசுக்கட்சியின் தலைவரின் வாலை (வேட்டி)ப் பிடித்துக் கொண்டு அவரின் பின்னால் திரிந்த சரவணபவன் வேற்றுக் கிரகத்தில் வந்த தேவதையைப் போல் சம்மந்தனின் செயற்பாடுகளை போற்றிச் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் மிகவும் புகழத்தக்க செய்தி என்னவெனின் கிராமசேவகரிடத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக சம்மந்தன் கேட்ட கேள்வியை மெச்சி செய்தி வெளியிட்டதே.

இவ்வாறான கேவலங்களை உதயன் பத்திரிகையில் வெளியிட செய்ய முற்படும் போது அப் பத்திரிகையில் பணிபுரியும் தன்மானமுள்ள தமிழ்த்தேசிய பற்றுள்ள ஊழியர்கள் சிலர் அச் செய்திகளை வெளியிடத் தயங்கியுள்ளனர்.

இருப்பினும் வேலை பறிக்கப்படும் என்ற அச்சுறுத்தலில் பல செய்திகள் இவ்வாறு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

தனது சுயலாபத்திற்காக உதயன் பத்திரிகையை தவறான வழிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் சரவணபவன் மீது வெறுப்புற்ற அவரது ஊழியர்கள் சிலர் அவருக்கு எதிராக முகப்புத்தகம் ஒன்றை இயக்கி வருவதாகத் தெரிகின்றது.

அந்த முகப்புத்தக இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது. இந்த முகப்புத்தகத்தில் அவரது அந்தரங்கங்கள் வர இருக்கின்றது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

https://www.facebook.com/Uthayan-உதயன்-1006020119462186/timeline/

NewJaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல