புதன், 28 அக்டோபர், 2015

வேர்ட் டிப்ஸ்: சொல்லைத் தேர்வு செய்வதில் கர்சர் பயன்பாடு

நீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.

1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும்.


2. மவுஸால் இருமுறை கிளிக் செய்திடவும். சொல் தேர்ந்தெடுக்கப்படும்.
நீங்கள் இன்னும் கூடுதலாக சொற்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், மேலே சொன்ன இரண்டாவது கிளிக் அடுத்து, மவுஸை அப்படியே, அந்த சொற்களின் மீதாக இழுக்கவும். ஒவ்வொரு முறை இழுப்பதற்கும் ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படும். இப்படியே நாம் விரும்பும் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மவுஸ் கர்சரை விட்டுவிடலாம்.

தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை, வழக்கம்போல பார்மட் மாற்ற பயன்படுத்தலாம். வேறு செயல்பாடுகளுக்கும் உள்ளாக்கலாம்.

சொற்களின் காட்சித் தன்மையை மாற்ற

வேர்ட் டாகுமெண்ட் தயாரித்த பின்னர், நாம் அடிக்கடி சில சொற்களின் எழுத்தின் தன்மையை மாற்ற விரும்புவோம். அனைத்து எழுத்துக்களையும், பெரிய எழுத்துக்களில் (கேப்பிடல் லெட்டர்ஸ்) அமைக்க விரும்புவோம். அல்லது சிறிய எழுத்துக்களில் அமைய வேண்டும் எனக் கருதுவோம். வேர்ட் 2007ல், இதனை எப்படி எளிதாக மாற்றலாம் எனக் காணலாம்.

1. முதலில் எந்த சொற்களின் எழுத்துக்களின் தன்மையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

2.இதில் ரைட் கிளிக் செய்திடவும்.

3. அடுத்து ஹோம் ரிப்பனில், Font பிரிவில் Change Case கிளிக் செய்திடவும். இங்கு உங்களுக்கு எழுத்தின் தன்மையை மாற்ற பல ஆப்ஷன்கள் தரப்படும். நீங்கள் விரும்பும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே, தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் உங்கள் விருப்பமான பார்மட்டில் அமைந்திருக்கும்.

டேபிளில் கோடுகளை நீக்க

வேர்டில் அட்டவணை எனப்படும் டேபிள்களை உருவாக்குகையில், செல்களைக் கோடுகள் அழகாகப் பிரித்து, அதில் உள்ள டேட்டாவினைக் காட்டுகின்றன. டேபிளை முடித்த பின்னர், இந்த கோடுகளை நீக்கிவிட்டாலும், நாம் அமைத்துள்ள தகவல்கள் மிக நல்ல முறையில் காட்டப்படும். இந்த டேபிள் வரிகளை எப்படி நீக்குவது என இங்கு காணலாம்.

1. முதலில் வழக்கம்போல, டேபிளை அமைக்கவும்.

2. அடுத்து, இன்ஸெர்ட் கர்சர், அமைக்கப்பட்ட டேபிளின் உள்ளாக ஒரு செல்லில் இருப்பதை உறுதி செய்திடவும்.

3. அடுத்து ரிப்பனில் Design டேப் காட்டப்பட வேண்டும். இந்த டேப், டேபிளின் உள்ளாக, கர்சர் இருந்தால் மட்டுமே காட்டப்படும்.

4. இப்போது Draw Borders குரூப்பில் உள்ள Eraser டூலில் கிளிக் செய்திடவும். கர்சர் அழிக்கும் ரப்பர் போல காட்சி அளிக்கும்.

5. இதனை இழுத்து வந்து, டேபிளில் எந்த கோடுகளை அழிக்க வேண்டுமோ, அதன் மீது இழுக்கவும். கோடுகள் மறைந்துவிடும்.

6. எரேசர் டூலை நீக்க, மீண்டும் எரேசர் டூலின் மீது கிளிக் செய்திடவும். அல்லது எஸ்கேப் கீயை ஒருமுறை தட்டவும். உடன், எரேஸர் டூல் செயல்பாடு நிறுத்தப்படும்.

இரண்டு செல்களுக்கிடையே உள்ள கோட்டினை நீக்குகையில், இரண்டு செல்களும் இணைக்கப்பட்டு காட்சி அளிப்பதைக் காணலாம். வெளிப்புறமாக, இன்னொரு செல்லின் பார்டராக இல்லாத கோட்டினை நீக்கினால், பார்டர் நீக்கப்படும். ஆனால், செல் மற்றும் அதில் உள்ள டேட்டா அப்படியே இருக்கும்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல