“பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியப் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினருமான ஜனாவும் பாரீஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”
ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.
மேலுள்ள செய்தி சம்பவம் நடைபெற்று முடிந்த சில மணிநேரங்களில் ஜேவிபி இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இச்செய்தி நடந்த சம்பவத்தை முற்றாக திரிபுபடுத்தியதுமல்லாமல் வன்முறையோடு கூடிய ஜனநாயக மறுப்பை அங்கிகரித்து ஆராதித்தும் உள்ளது. இந்தச் செய்தியினதும் இதன் பின்னுள்ளவர்களதும் பின்னணியை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.
பரிஸில் தமிழர்களின் மையமாகத் திகழும் லாச்சப்பல் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. புலிகளை மீறி அங்கு கூட்டங்களை ஏற்பாடு செய்வது மிகவும் ஆபத்தானது. கடந்த காலங்களில் புலிகள் நான்கு படுகொலைகளை பாரிஸில் மேற்கொண்டிருந்தமை அவர்களின் வன்முறையின் கொடூரத்தை வெளிப்படுத்த போதுமானது. 2009ற்குப் பின்னரும் இந்நிலை தொடர்ந்தது.
இந்தப் பின்னணியில் ஒக்ரோபர் 9 2015 மாலை 3:00 மணிக்கு லாச்சப்பலில் உள்ள இந்திரா உணவகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இச்சந்திப்பிற்கு ஜெனிவா வந்திருந்த தமிழரசுக் கட்சியினரோ ஈபிஏர்எல்எவ் (சுரேஸ் அணி) கட்சியினரோ இறுதி நேரத்தில் கலந்துகொள்ளவில்லை. அதனால் அக்கூட்டம்; ரெலோ உறுப்பினர்களுடனான சந்திப்பாக மாலை 3:45 மணி அளவில் ஆரம்பமானது.
இதற்கு முன் இன்னொரு சம்பவமும் குறிப்பிடப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பாக இதனை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை விரும்பாத தமிழரசுக் கட்சி இடையில் மற்றுமொரு இரகசிய சந்திப்பிற்கு தயாரானது. நாவாந்துறையை பூர்வீகமாகக் கொண்ட அகஸ்தின் ரவீந்திரன் வடமாகாணசபை உறுப்பினர் பாஷையுரைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்னல்ட் ஆகியோரின் ஏற்பாட்டில் ஓக்ரோபர் 5இல் தமிழரசுக் கட்சியினர் தங்கள் கட்சிக்கான கிளையை உருவாக்கும் திட்டத்துடன் ஒரு இரகசிய சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அச்சந்திப்பில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார். ஆனால் இவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கவில்லை. பொதுத் தேர்தலுக்கு முன் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களுடனும் மாவை சேனாதிராஜா சந்திப்பை ஏற்படுத்தவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு மாறாக தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதன் பின்னணியிலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது.
ஓக்ரோபர் 9 இல் இந்திரா உணவகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ரெலோ தலைவர் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன்> அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ரொபின்சன்> ஜனா என அறியப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்> வட மாகாண சபை உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவது மற்றும் ஐநா தீ;ர்மானங்களுக்கு வலுச்சேர்ப்பது என்ற அடிப்படையிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டம் ஆரம்பமாகிய சிறிது நேரத்திலேயே மாலை 4:45 மணி அளவில் உணவகத்திற்கு வெளியே நின்ற மூவர் தகாத முறையில் நடந்து கொண்டு தகாத வார்த்தைகளாலும் கூச்சலிட்டனர். இவர்கள் மூவருமே ஜனாவைக் குறி வைத்தே குற்றச்சாட்டுகளையும் கூச்சல்களையும் எழுப்பினர். இவர்கள் மூவரையும் உள்ளே அழைத்து ரெலோ தலைவர்களிடம் அவர்களது கேள்விகளை நேரடியாக முன் வைக்குமாறும் அதற்கு ரெலோ தலைவர்கள் பதிலளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உள்ளே வந்தவர்கள் ஜனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தாங்கள் அவருக்கு பாடம் புகட்டப் போவதாகவும் மிரட்டி தாக்கவும் முற்பட்டனர்.
ஜனாவைத் தாக்க முற்பட்ட மூவரில் ஒருவர் கோபி என அறியப்பட்ட வன்முறையாளன். அன்றைய பிரதமர் சந்திரிகா குமாரதுங்க மீதான தாக்குதலில் புலிகளின் புலனாய்வுத்துறையில் தாக்குதலுக்கான தகவல் சேகரிப்பில் இவர் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. இரண்டாமவர் புலிகளின் குரல் இணைய வானொலியை நடத்துகின்ற பாலச்சந்திரன் பாலமுரளி என்ற அறியப்பட்ட வன்முறையாளன். இவர் வன்முறை மறற்றும் சட்டவிரோத செயல்களுக்காக தண்டனை பெற்றவர். இவர் பரிஸின் பொபினி நீதிமன்றில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் வெளியில் உள்ளார். மூன்றாமவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. இவர்களோடு இருந்த மற்றையவர் பாரிஸ் ஈழநடு பாலச்சந்திரன். இவர் வெளியே இருந்து கூச்சல் போடாவிட்டாலும்> அவ்வாறு கூச்சல் போட்டவர்களுக்கு ஏற்ப கூட்டத்தில் நடந்துகொண்டார். இவர், “எவன் வந்தான் போனான் என்று தெரியேல. பிள்ளையான் கூட முதலமைச்சரா இருந்திட்டான்? இன்றைக்கு இவனை பண்ணுறன் வெளியில கொண்டுபோய்;” என்று உள்ளிருந்தே மிரட்டியுள்ளார்.
கோபியும் முரளியும் புலிகளாக அறியப்பட்டவர்கள். இவர்கள் புலிகளின் ஒரு பிரிவினரான விநாயகம் தலைமையிலான தலைமைச் செயலகத்தின் ஆதரவாளர்கள். இதனை அந்த அமைப்புடன் நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியும் உள்ளனர். இவர்கள் வன்முறைக் காரணங்களுக்காக தண்டனை பெற்றிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோபியோடு லண்டனில் இருந்து தொடர்பு கொண்ட போது அவ்வாறான சம்பவத்தில் தான் ஈடுபடவில்லை என முற்றாக மறுத்துவிட்டார்.
ஏன் இச்சம்பவத்தில் ரெலோ உறுப்பினர்களில் ஜனா குறிவைக்கப்பட்டார் என்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. புலிகளின் ரெலோ அழிப்பிற்குப் பின் புலிகளை எதிர்த்து நின்றவர் ஜனா. செல்வம் அடைக்கலநாதனும்> எம் கெ சிவாஜிலிங்கமும் புலிகளை அனுசரித்தே செயற்பட்டனர். ஆனால் ஜனா புலிகளை கடுமையாக எதிர்த்தவர். அது வரலாறாகிப்போன விடயம்.
ஆனால் இவ்வாண்டு ஏப்ரல் முற்பகுதியில் புலிகளின் ஒரு பிரிவினரான தலைமைச் செயலகம் தயாமோகன் என்பவருக்கூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடன் சுவிஸில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. சந்திப்பின் நோக்கம் இரகசியமாகவே வைக்கப்பட்டது. இச்சந்திப்பில் புளொட் தரப்பில் இருந்து யாரும் கலந்தகொள்ளவில்லை. தமிழரசுக் கட்சி> ரெலோ> ஈபிஆர்எல்எப் (சுரோஸ் அணி) கலந்துகொண்டது. இச்சந்திப்பில் வைத்து புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தப்பட்டனர். இதனை சுவிஸில் மிகக் கடுமையாக எதிர்த்தவர் ஜனா. அதனால் தலைமைச் செயலகத்தினர் எண்ணம் நிறைவேறவில்லை. ஜனா மீது குறி வைப்பதற்கு இது முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தப் பின்னணியில் நடந்த சம்பவத்தை, ஜேவிபி நியுஸ் மேலுள்ளவாறு ஆரவாரித்து செய்தியாக வெளியிட்டு இருந்தது. அந்தச் செய்தியில் ரெலோ தலைவர்கள் ‘தமிழ் தேசிய உணர்வாரள்களால் நையப்புடைக்கப்பட்டார்கள்’ என்ற பெருமிதத்துடன் பாதிக்கப்பட்வர்கள் ‘துரோகிகள்’ ஆகவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஜனநாயகத்தை மறுத்தவர்கள் தமிழ் தேசிய உணர்வாரள்களாகவும் ஆக்கப்பட்டு உள்ளனர்.
ஜேவிபி நியூஸ் ஏன் இவ்வாறு இந்த செய்தியை திரிபுபடுத்தியது என ஆராய்ந்தால், இன்னும் சில உண்மைகள் துலங்கும்.
ஜேவிபி நியுஸ் லங்காசிறி – தமிழ் வின் ஆகிய ஊடகங்கள் சிவஞானம் சிறிகுகன் என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சொந்த சககோதரர். சுவிஸில் வாழ்கிறார்.
லங்காசிறி – தமிழ்வின் என்ற ஓரளவு நாகரீகமான இணையத்தளத்தையும் மூன்றாம்தர செய்திகள் கிசு கிசு க்களுக்காக ஜேவிபி நியூஸ் இணையத்தையும் நடத்துகின்றனர்.
சிவஞானம் சகோதரர்களில் மற்றுமொருவர் கனடா மிரரை நடத்துகின்றார்.
இலங்கையில் பதிவு செய்யப்படாத உண்மைக்குப் புறம்பாக தங்களுடைய அரசியல் நலன்களுக்காக செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களை தடை செய்ய வேண்டும் என அண்மையில் வடமாகாண சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்குக் காரணம் எஸ் சிறிதரனின் சகோதரரால் நடத்தப்படுகின்ற சிறிதரனின் பின்னணியில் இயங்கும் ஜேவிபி நியூஸ் போன்ற இணையத்தளங்களே என வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் புகைந்துகொள்கின்றனர்.
ஜேவிபி நியூஸ் செய்தியின் 2ம் இணைப்பில் ‘பரிஸ் வாழ் தமிழர்கள் ஜனா மீது தாக்குதல் செய்ய முற்பட்டபோது பிரான்ஸ் பொலிஸாரின் உதவியுடன் செல்வம் குழுவினர் இந்திரா உணவகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.’ அச்செய்தி; இவ்வாறு தொடர்ந்தது, ‘…அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உணவுச்சாலையிலிருந்து ஜனாவை வெளியே வருமாறும் கிழக்கு மாகாணத்தில் ஜனாவினால் செய்யப்பட்ட கொலைகள் பற்றிய சந்தேகங்களை தீர்க்க வேண்டும் எனவும் மிகவும் ஆவேசத்துடன் குரலெழுப்பினர்.
மேற்படி உணவுச்சாலையிலிருந்த ரெலோ உறுப்பினர்கள் இவற்றைச் செவிமெடுக்காதிருப்பதை அவதானித்த மக்கள் ஆவேசம்கொண்டு உணவுச் சாலைக்குள் நுழைய முற்பட்டபோது பிரெஞ்சுப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.’
இங்கு வன்முறையில் ஈடுபட முற்பட்டவர்கள் மூவர் மட்டுமே. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நூற்றுக்கும் குறைந்தவர்களே கலந்துகொண்டனர். உணவகத்தினுள் இடமின்மையால் பலர் வெளியே நின்றனர். ஜேவிபி நியூஸ் குறிப்பிடுவது போல் கிழக்கு மாகாணத்தில் ஜனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் குரரெழுப்பவில்லை. மாறாக புலிகளினால் பாதிக்கப்பட்ட பல ரெலோ உறுப்பினர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஏற்கனவே புலிகள் கொலைகளை மேற்கொண்டு இருந்தமையால் வன்முறையில் ஈடுபட்டு இருந்தமையால் நிலைமை மோசமாகிவிடும் அவர்கள் கொலை முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் ஏற்பாட்டாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதேசமயம் பாரிஸில் உள்ள இலங்கைத் து}தரகமும் தன்னுடைய நாட்டின் பாராளுமன்ற அவைக்குழுவின் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆபத்தில் உள்ளதை பொலிஸாருக்கு அறிவித்திருந்தது. அதனால் அப்பகுதிக்கு உடன் விரைந்த பொலிஸார் இலங்கை நாட்டின் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை தகுந்த பாதுகாப்போடு அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
புலிகளின் இந்த அராஜகச் செயலை அடுத்து அதற்குப் பினர் தென்னிந்தியர்களால் நடக்க இருந்த தமிழாராய்சி மாநாட்டின் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஊர்வலத்தை பிரான்ஸ் பொலிஸார் தடை செய்தனர்.
ரெலோ தலைவர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதே அராஜகம் 2012 ஓகஸ்டில் அப்போது பா உ ஆக இருந்த சந்திரகுமார் லண்டன் வந்த போதும் மேற்கொள்ளப்பட்டது. ஓகஸ்ட் 21, 2012இல் தேசம்நெற் இல் வெளியான அச்செய்தி: எம்பி மு சந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருபவர். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி எஸ் சிறிதரனும் கிளிநொச்சியைத் தளமாகக்கொண்டு இயங்குபவர். எம் பி மு சந்திரகுமாரின் வளர்ச்சி இவருக்கு இடையூறாகவே இருந்தது. லண்டனுக்கு பல தடவைகள் வந்திருந்த அவர் புலிகளின் பின்னணி காரணமாகஇ பிரித்தானிய தமிழர் பேரவையினருடனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகத்துடனும் மிக நெருக்கமானவர். அவர்களே இவரை லண்டனுக்கு அழைப்பது வழமை.
கிளிநொச்சியில் தங்களுக்கு இடையே உள்ள போட்டியைத் தீர்க்க எம்பி சந்திரகுமாரை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிராகரித்தனர்; அவரைத் தாக்கினர்; அவரது கூட்டத்தைக் குழப்பினர் என்ற விதமாகச் செய்திகள் வரவேண்டும் என அவ் எம்பி பிரித்தானிய தமிழர் பேரவைஇ அனைத்துலகச் செயலக முக்கியஸ்தர்கள் சிலரைக் கேட்டுக்கொண்டதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். இந்த வேண்டுதலுக்கு அமைய பிரித்தானிய தமிழர் பேரவை – அனைத்துலகச் செயலகம் (இரண்டையும் இயக்குபவர்கள் ஓரே நபர்களே.) எம்பி மு சந்திரகுமாரைத் தாக்க திட்டமிட்டது.
போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இளைஞர்களைப் பயன்படுத்தினர். கூட்டணித் தலைவர்கள் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என்றனர். அன்று இளைஞனாக இருந்த வே பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சவலாக நின்ற அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்தார்.
இன்று எஸ் சிறிதரன் ‘வே பிரபாகரன் வளர்த்தெடுத்தவர்கள் சயனைடை கடித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் அரசின் கூலிகள்’ என்றார். அதனை சிறிதரன் சகோதரர்களின் ஜெவிபி நியூஸ், தமிழ் வின், கனடா மிரர் வெளியிடவில்லை. ஆனால் வன்முறையாளர்கள் தனது அரசியல் நலனுக்காக அராஜகத்தில் ஈடுபட்ட போது அவர்கள் ‘தேசிய உணர்வாளர்’களாக சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் காட்டுகின்றன.
சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் சிறிதரனின் தனிப்பட்ட அரசியல் எதிரிகள் மீதும் திட்டமிட்ட தனிநபர் தாக்குதலை நடாத்துகின்றன. பா உ சுமந்திரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றன. இந்த வன்முறை மற்றும் அராஜக அரசியலில் பா உ எஸ் சிறிதரன் லாபமடைவதால் அவர் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். கல்லூரி அதிபராக இருந்த பா உ சிறிதரன் மாணவருக்கும் சமூகத்துக்கும் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டுமே அல்லாமல் மூன்றாம்தரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க முற்படுவது நீண்ட காலத்தில் எதிர் விளைவை ஏற்படுத்தும்.
அதுவே கூட்டணி அரசியலுக்கும் வே பிரபாகரனுக்கும் இருந்த உறவிலும் ஏற்பட்டது. வே பிரபாகரன் போன்ற இளைஞர்களைப் பயன்படுத்த முற்பட்ட கூட்டணித் தலைமைகள் பின்னர் வே பிரபாகரனாலேயே கொல்லப்பட்டனர். பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால் மீண்டும் ஒரு நச்சுச் சுழலுக்குள் தன்னையும் தமிழ் சமூகத்தையும் தள்ளும் நிலையேற்படும்.
குறிப்பு: பாரிஸ் அராஜகச் செயல் தொடர்பாக தமிழ் கருத்துக்களம் மேற்கொண்ட உரையாடலின் ஒளிப்பதிவு கிழே இணைக்கப்பட்டு உள்ளது.
த ஜெயபாலன்
அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”
ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.
மேலுள்ள செய்தி சம்பவம் நடைபெற்று முடிந்த சில மணிநேரங்களில் ஜேவிபி இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இச்செய்தி நடந்த சம்பவத்தை முற்றாக திரிபுபடுத்தியதுமல்லாமல் வன்முறையோடு கூடிய ஜனநாயக மறுப்பை அங்கிகரித்து ஆராதித்தும் உள்ளது. இந்தச் செய்தியினதும் இதன் பின்னுள்ளவர்களதும் பின்னணியை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.
பரிஸில் தமிழர்களின் மையமாகத் திகழும் லாச்சப்பல் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. புலிகளை மீறி அங்கு கூட்டங்களை ஏற்பாடு செய்வது மிகவும் ஆபத்தானது. கடந்த காலங்களில் புலிகள் நான்கு படுகொலைகளை பாரிஸில் மேற்கொண்டிருந்தமை அவர்களின் வன்முறையின் கொடூரத்தை வெளிப்படுத்த போதுமானது. 2009ற்குப் பின்னரும் இந்நிலை தொடர்ந்தது.
இந்தப் பின்னணியில் ஒக்ரோபர் 9 2015 மாலை 3:00 மணிக்கு லாச்சப்பலில் உள்ள இந்திரா உணவகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இச்சந்திப்பிற்கு ஜெனிவா வந்திருந்த தமிழரசுக் கட்சியினரோ ஈபிஏர்எல்எவ் (சுரேஸ் அணி) கட்சியினரோ இறுதி நேரத்தில் கலந்துகொள்ளவில்லை. அதனால் அக்கூட்டம்; ரெலோ உறுப்பினர்களுடனான சந்திப்பாக மாலை 3:45 மணி அளவில் ஆரம்பமானது.
இதற்கு முன் இன்னொரு சம்பவமும் குறிப்பிடப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பாக இதனை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை விரும்பாத தமிழரசுக் கட்சி இடையில் மற்றுமொரு இரகசிய சந்திப்பிற்கு தயாரானது. நாவாந்துறையை பூர்வீகமாகக் கொண்ட அகஸ்தின் ரவீந்திரன் வடமாகாணசபை உறுப்பினர் பாஷையுரைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்னல்ட் ஆகியோரின் ஏற்பாட்டில் ஓக்ரோபர் 5இல் தமிழரசுக் கட்சியினர் தங்கள் கட்சிக்கான கிளையை உருவாக்கும் திட்டத்துடன் ஒரு இரகசிய சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அச்சந்திப்பில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டார். ஆனால் இவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கவில்லை. பொதுத் தேர்தலுக்கு முன் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களுடனும் மாவை சேனாதிராஜா சந்திப்பை ஏற்படுத்தவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு மாறாக தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதன் பின்னணியிலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது.
ஓக்ரோபர் 9 இல் இந்திரா உணவகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ரெலோ தலைவர் வன்னி பா உ செல்வம் அடைக்கலநாதன்> அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ரொபின்சன்> ஜனா என அறியப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்> வட மாகாண சபை உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவது மற்றும் ஐநா தீ;ர்மானங்களுக்கு வலுச்சேர்ப்பது என்ற அடிப்படையிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டம் ஆரம்பமாகிய சிறிது நேரத்திலேயே மாலை 4:45 மணி அளவில் உணவகத்திற்கு வெளியே நின்ற மூவர் தகாத முறையில் நடந்து கொண்டு தகாத வார்த்தைகளாலும் கூச்சலிட்டனர். இவர்கள் மூவருமே ஜனாவைக் குறி வைத்தே குற்றச்சாட்டுகளையும் கூச்சல்களையும் எழுப்பினர். இவர்கள் மூவரையும் உள்ளே அழைத்து ரெலோ தலைவர்களிடம் அவர்களது கேள்விகளை நேரடியாக முன் வைக்குமாறும் அதற்கு ரெலோ தலைவர்கள் பதிலளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உள்ளே வந்தவர்கள் ஜனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தாங்கள் அவருக்கு பாடம் புகட்டப் போவதாகவும் மிரட்டி தாக்கவும் முற்பட்டனர்.ஜனாவைத் தாக்க முற்பட்ட மூவரில் ஒருவர் கோபி என அறியப்பட்ட வன்முறையாளன். அன்றைய பிரதமர் சந்திரிகா குமாரதுங்க மீதான தாக்குதலில் புலிகளின் புலனாய்வுத்துறையில் தாக்குதலுக்கான தகவல் சேகரிப்பில் இவர் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. இரண்டாமவர் புலிகளின் குரல் இணைய வானொலியை நடத்துகின்ற பாலச்சந்திரன் பாலமுரளி என்ற அறியப்பட்ட வன்முறையாளன். இவர் வன்முறை மறற்றும் சட்டவிரோத செயல்களுக்காக தண்டனை பெற்றவர். இவர் பரிஸின் பொபினி நீதிமன்றில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் வெளியில் உள்ளார். மூன்றாமவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. இவர்களோடு இருந்த மற்றையவர் பாரிஸ் ஈழநடு பாலச்சந்திரன். இவர் வெளியே இருந்து கூச்சல் போடாவிட்டாலும்> அவ்வாறு கூச்சல் போட்டவர்களுக்கு ஏற்ப கூட்டத்தில் நடந்துகொண்டார். இவர், “எவன் வந்தான் போனான் என்று தெரியேல. பிள்ளையான் கூட முதலமைச்சரா இருந்திட்டான்? இன்றைக்கு இவனை பண்ணுறன் வெளியில கொண்டுபோய்;” என்று உள்ளிருந்தே மிரட்டியுள்ளார்.
கோபியும் முரளியும் புலிகளாக அறியப்பட்டவர்கள். இவர்கள் புலிகளின் ஒரு பிரிவினரான விநாயகம் தலைமையிலான தலைமைச் செயலகத்தின் ஆதரவாளர்கள். இதனை அந்த அமைப்புடன் நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியும் உள்ளனர். இவர்கள் வன்முறைக் காரணங்களுக்காக தண்டனை பெற்றிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோபியோடு லண்டனில் இருந்து தொடர்பு கொண்ட போது அவ்வாறான சம்பவத்தில் தான் ஈடுபடவில்லை என முற்றாக மறுத்துவிட்டார்.
ஏன் இச்சம்பவத்தில் ரெலோ உறுப்பினர்களில் ஜனா குறிவைக்கப்பட்டார் என்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. புலிகளின் ரெலோ அழிப்பிற்குப் பின் புலிகளை எதிர்த்து நின்றவர் ஜனா. செல்வம் அடைக்கலநாதனும்> எம் கெ சிவாஜிலிங்கமும் புலிகளை அனுசரித்தே செயற்பட்டனர். ஆனால் ஜனா புலிகளை கடுமையாக எதிர்த்தவர். அது வரலாறாகிப்போன விடயம்.
ஆனால் இவ்வாண்டு ஏப்ரல் முற்பகுதியில் புலிகளின் ஒரு பிரிவினரான தலைமைச் செயலகம் தயாமோகன் என்பவருக்கூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடன் சுவிஸில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது. சந்திப்பின் நோக்கம் இரகசியமாகவே வைக்கப்பட்டது. இச்சந்திப்பில் புளொட் தரப்பில் இருந்து யாரும் கலந்தகொள்ளவில்லை. தமிழரசுக் கட்சி> ரெலோ> ஈபிஆர்எல்எப் (சுரோஸ் அணி) கலந்துகொண்டது. இச்சந்திப்பில் வைத்து புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தப்பட்டனர். இதனை சுவிஸில் மிகக் கடுமையாக எதிர்த்தவர் ஜனா. அதனால் தலைமைச் செயலகத்தினர் எண்ணம் நிறைவேறவில்லை. ஜனா மீது குறி வைப்பதற்கு இது முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.
இந்தப் பின்னணியில் நடந்த சம்பவத்தை, ஜேவிபி நியுஸ் மேலுள்ளவாறு ஆரவாரித்து செய்தியாக வெளியிட்டு இருந்தது. அந்தச் செய்தியில் ரெலோ தலைவர்கள் ‘தமிழ் தேசிய உணர்வாரள்களால் நையப்புடைக்கப்பட்டார்கள்’ என்ற பெருமிதத்துடன் பாதிக்கப்பட்வர்கள் ‘துரோகிகள்’ ஆகவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஜனநாயகத்தை மறுத்தவர்கள் தமிழ் தேசிய உணர்வாரள்களாகவும் ஆக்கப்பட்டு உள்ளனர்.
ஜேவிபி நியூஸ் ஏன் இவ்வாறு இந்த செய்தியை திரிபுபடுத்தியது என ஆராய்ந்தால், இன்னும் சில உண்மைகள் துலங்கும்.
ஜேவிபி நியுஸ் லங்காசிறி – தமிழ் வின் ஆகிய ஊடகங்கள் சிவஞானம் சிறிகுகன் என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சொந்த சககோதரர். சுவிஸில் வாழ்கிறார்.
லங்காசிறி – தமிழ்வின் என்ற ஓரளவு நாகரீகமான இணையத்தளத்தையும் மூன்றாம்தர செய்திகள் கிசு கிசு க்களுக்காக ஜேவிபி நியூஸ் இணையத்தையும் நடத்துகின்றனர்.
சிவஞானம் சகோதரர்களில் மற்றுமொருவர் கனடா மிரரை நடத்துகின்றார்.
இலங்கையில் பதிவு செய்யப்படாத உண்மைக்குப் புறம்பாக தங்களுடைய அரசியல் நலன்களுக்காக செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களை தடை செய்ய வேண்டும் என அண்மையில் வடமாகாண சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்குக் காரணம் எஸ் சிறிதரனின் சகோதரரால் நடத்தப்படுகின்ற சிறிதரனின் பின்னணியில் இயங்கும் ஜேவிபி நியூஸ் போன்ற இணையத்தளங்களே என வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் புகைந்துகொள்கின்றனர்.
ஜேவிபி நியூஸ் செய்தியின் 2ம் இணைப்பில் ‘பரிஸ் வாழ் தமிழர்கள் ஜனா மீது தாக்குதல் செய்ய முற்பட்டபோது பிரான்ஸ் பொலிஸாரின் உதவியுடன் செல்வம் குழுவினர் இந்திரா உணவகத்திலிருந்து காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.’ அச்செய்தி; இவ்வாறு தொடர்ந்தது, ‘…அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் உணவுச்சாலையிலிருந்து ஜனாவை வெளியே வருமாறும் கிழக்கு மாகாணத்தில் ஜனாவினால் செய்யப்பட்ட கொலைகள் பற்றிய சந்தேகங்களை தீர்க்க வேண்டும் எனவும் மிகவும் ஆவேசத்துடன் குரலெழுப்பினர்.
மேற்படி உணவுச்சாலையிலிருந்த ரெலோ உறுப்பினர்கள் இவற்றைச் செவிமெடுக்காதிருப்பதை அவதானித்த மக்கள் ஆவேசம்கொண்டு உணவுச் சாலைக்குள் நுழைய முற்பட்டபோது பிரெஞ்சுப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.’
இங்கு வன்முறையில் ஈடுபட முற்பட்டவர்கள் மூவர் மட்டுமே. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நூற்றுக்கும் குறைந்தவர்களே கலந்துகொண்டனர். உணவகத்தினுள் இடமின்மையால் பலர் வெளியே நின்றனர். ஜேவிபி நியூஸ் குறிப்பிடுவது போல் கிழக்கு மாகாணத்தில் ஜனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் குரரெழுப்பவில்லை. மாறாக புலிகளினால் பாதிக்கப்பட்ட பல ரெலோ உறுப்பினர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஏற்கனவே புலிகள் கொலைகளை மேற்கொண்டு இருந்தமையால் வன்முறையில் ஈடுபட்டு இருந்தமையால் நிலைமை மோசமாகிவிடும் அவர்கள் கொலை முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் ஏற்பாட்டாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதேசமயம் பாரிஸில் உள்ள இலங்கைத் து}தரகமும் தன்னுடைய நாட்டின் பாராளுமன்ற அவைக்குழுவின் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆபத்தில் உள்ளதை பொலிஸாருக்கு அறிவித்திருந்தது. அதனால் அப்பகுதிக்கு உடன் விரைந்த பொலிஸார் இலங்கை நாட்டின் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை தகுந்த பாதுகாப்போடு அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
புலிகளின் இந்த அராஜகச் செயலை அடுத்து அதற்குப் பினர் தென்னிந்தியர்களால் நடக்க இருந்த தமிழாராய்சி மாநாட்டின் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஊர்வலத்தை பிரான்ஸ் பொலிஸார் தடை செய்தனர்.
ரெலோ தலைவர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதே அராஜகம் 2012 ஓகஸ்டில் அப்போது பா உ ஆக இருந்த சந்திரகுமார் லண்டன் வந்த போதும் மேற்கொள்ளப்பட்டது. ஓகஸ்ட் 21, 2012இல் தேசம்நெற் இல் வெளியான அச்செய்தி: எம்பி மு சந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருபவர். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி எஸ் சிறிதரனும் கிளிநொச்சியைத் தளமாகக்கொண்டு இயங்குபவர். எம் பி மு சந்திரகுமாரின் வளர்ச்சி இவருக்கு இடையூறாகவே இருந்தது. லண்டனுக்கு பல தடவைகள் வந்திருந்த அவர் புலிகளின் பின்னணி காரணமாகஇ பிரித்தானிய தமிழர் பேரவையினருடனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலகத்துடனும் மிக நெருக்கமானவர். அவர்களே இவரை லண்டனுக்கு அழைப்பது வழமை.கிளிநொச்சியில் தங்களுக்கு இடையே உள்ள போட்டியைத் தீர்க்க எம்பி சந்திரகுமாரை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிராகரித்தனர்; அவரைத் தாக்கினர்; அவரது கூட்டத்தைக் குழப்பினர் என்ற விதமாகச் செய்திகள் வரவேண்டும் என அவ் எம்பி பிரித்தானிய தமிழர் பேரவைஇ அனைத்துலகச் செயலக முக்கியஸ்தர்கள் சிலரைக் கேட்டுக்கொண்டதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். இந்த வேண்டுதலுக்கு அமைய பிரித்தானிய தமிழர் பேரவை – அனைத்துலகச் செயலகம் (இரண்டையும் இயக்குபவர்கள் ஓரே நபர்களே.) எம்பி மு சந்திரகுமாரைத் தாக்க திட்டமிட்டது.
போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இளைஞர்களைப் பயன்படுத்தினர். கூட்டணித் தலைவர்கள் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை என்றனர். அன்று இளைஞனாக இருந்த வே பிரபாகரன் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சவலாக நின்ற அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்தார்.
இன்று எஸ் சிறிதரன் ‘வே பிரபாகரன் வளர்த்தெடுத்தவர்கள் சயனைடை கடித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் அரசின் கூலிகள்’ என்றார். அதனை சிறிதரன் சகோதரர்களின் ஜெவிபி நியூஸ், தமிழ் வின், கனடா மிரர் வெளியிடவில்லை. ஆனால் வன்முறையாளர்கள் தனது அரசியல் நலனுக்காக அராஜகத்தில் ஈடுபட்ட போது அவர்கள் ‘தேசிய உணர்வாளர்’களாக சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் காட்டுகின்றன.
சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் சிறிதரனின் தனிப்பட்ட அரசியல் எதிரிகள் மீதும் திட்டமிட்ட தனிநபர் தாக்குதலை நடாத்துகின்றன. பா உ சுமந்திரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் சிறிதரன் சகோதரர்களின் ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றன. இந்த வன்முறை மற்றும் அராஜக அரசியலில் பா உ எஸ் சிறிதரன் லாபமடைவதால் அவர் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம். கல்லூரி அதிபராக இருந்த பா உ சிறிதரன் மாணவருக்கும் சமூகத்துக்கும் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டுமே அல்லாமல் மூன்றாம்தரமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க முற்படுவது நீண்ட காலத்தில் எதிர் விளைவை ஏற்படுத்தும்.
அதுவே கூட்டணி அரசியலுக்கும் வே பிரபாகரனுக்கும் இருந்த உறவிலும் ஏற்பட்டது. வே பிரபாகரன் போன்ற இளைஞர்களைப் பயன்படுத்த முற்பட்ட கூட்டணித் தலைமைகள் பின்னர் வே பிரபாகரனாலேயே கொல்லப்பட்டனர். பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால் மீண்டும் ஒரு நச்சுச் சுழலுக்குள் தன்னையும் தமிழ் சமூகத்தையும் தள்ளும் நிலையேற்படும்.
குறிப்பு: பாரிஸ் அராஜகச் செயல் தொடர்பாக தமிழ் கருத்துக்களம் மேற்கொண்ட உரையாடலின் ஒளிப்பதிவு கிழே இணைக்கப்பட்டு உள்ளது.
த ஜெயபாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக