ஞாயிறு, 25 அக்டோபர், 2015

இது தான் உலகம் - இறந்த போது ஓடி வந்­த­வர்கள், இருக்­கின்ற போது திரும்­பியும் பார்க்­க­வில்லை

இது கிளி­நொச்­சியில் எங்கோ ஒரு குக்­கி­ரா­மத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளி­நொச்சி பரந்தன் நக­ரத்தில் இருந்து சில கிலோ மீற்­றர்கள் தொலைவில் பரந்தன், முல்­லைத்­தீவு வீதியில் சிவ­புரம் கிரா­மத்தில் உள்ள சிவ­கா­மியின் வீடு. சிவ­சுப்­பி­ர­ம­ணியம் சிவ­காமி, இவர், தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் மகளிர் அர­சியல் துறைப்­பொ­றுப்­பாளர் தமி­ழினி ஆவார். மீள்­கு­டி­யேற்­றத்தின் போது அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களால் ஒரு வருட காலத்­திற்கு என அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்ட தற்­கா­லிக கொட்­டில்கள் இவை.



2013 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி பூந்­தோட்டம் புனர்­வாழ்வு முகாமில் வைத்து தாயா­ரா­கிய சின்­னம்மா சிவ­சுப்­பி­ர­ம­ணி­யத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டார்.

அன்று முதல் இறக்கும் வரை கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தமி­ழினி இந்த கொட்­டி­லில்தான் வாழ்ந்­தி­ருக்­கின்றார்;.

2009 இற்கு முன் ஈழத்துப் பெண்­களின் தலைமை பாத்­தி­ர­மாக இருந்­தவர் தமி­ழினி. ஒரு இனத்தின் விடு­த­லைக்­காக அதன் முன்­னேற்­றத்­திற்­காக காலத்தின் தேவை கருதி பங்­கா­ளி­யாக இருந்­தவர்.

தமி­ழினி சிறையில் இருந்த போது எவரும் அவ­ருக்­காக அவரை சென்று பார்த்து, தேவைகள் அறிந்து உதவி செய்­ய­வில்லை.

இரண்டு வழக்­க­றி­ஞர்கள். ஒரு தமிழ் வழக்­க­றிஞர் மற்ை­ற­யது சிங்­கள வழக்­க­றிஞர் இரு­வரும் ஆரம்­பத்தில் தமி­ழி­னியின் வழக்­குக்­காக பணம் கோரிய போதும் பின்னர் தமி­ழினி நாட்­டுக்­காக சேவை செய்பவர், எனவே, தாங்கள் அவ­ருக்­காக இதை­யா­வது செய்ய வேண்­டாமா? என பணத்தை பெற்­றுக்­கொள்­ளாமல் மறுத்­து­விட்­ட­மையும் குறிப்­பிட வேண்டும். தமி­ழி­னிக்காக வாத­ாடிய சிங்­கள வழக்­க­றிஞர் தமி­ழி­னிக்கு வழங்­கிய சட்ட ஆலோ­ச­னைக்கு அமை­யவே புனர்­வாழ்­வுக்கு செல்­வ­தாக நீதிமன்றில் தெரி­வித்து அவர் புனர்­வாழ்­வுக்கு சென்று விடுத­லை­யானார்

தமி­ழினி விடு­த­லை­யா­கிய காலம் வடக்கு மாகாண சபை தேர்தல் காலம் என்­ப­தனால் தமி­ழி­னியின் விடு­தலை அனை­வ­ராலும் குறிப்­பாக தமிழ் அர­சியல் தரப்­புக்­களால் சந்­தேகக் கண்­ணோடு பார்க்­கப்­பட்­டது. அவர் ஆளும் அர­சியல் தரப்­போடு சேர்ந்து தேர்­தலில் போட்­டி­யி­டலாம் என பெரும்­பாலும் சந்­தே­கித்­தார்கள், விமர்­சித்­தார்கள். ஆனால் அவ்­வாறு நடக்­க­வில்லை. அதன் பின்னர் கடந்த 18 ஆம் திகதி வரை தமி­ழி­னியை எவரும் நினைத்தும் பார்க்­க­வில்லை.

தமி­ழினி கொழும்­பிலும்,பரந்­த­னிலும் என தனது வாழ்க்­கையை வாழ்ந்­தி­ருக்­கின்றார். அவர் குடி­யி­ருக்கும் சிவ­புரம் கிரா­மத்தில் தமி­ழி­னியின் கொட்டில் போன்றே பெரும்­பாலும் எல்­லோ­ரதும் இருப்­பி­டங்­களும் காணப்­ப­டு­கின்­றன. குறித்த பிர­தே­சத்தின் காணிகள் மத்­திய வகுப்­புத்­திட்ட காணிகள் என்­ப­தனால் அவர்­க­ளுக்கு அரச உத­விகள், வீட்­டுத்­திட்டம் என்­பன எவையும் பெற்­றுக்­கொள்ள முடி­யாத சூழல் ஏற்­பட்­டு­விட்­டது

ஆனால் தமி­ழி­னியின் இறுதி நிகழ்வில் கலந்­து­கொண்ட மக்கள் பிர­தி­நி­திகள் மக்­க­ளுக்­காக பணி­யாற்­றி­யி­ருந்­தி­ருந்தால் தமி­ழி­னியின் கொட்டில் வாழ்க்­கைக்கு மட்­டு­மல்ல பல முன்னாள் போரா­ளி­களின் கொட்டில் வாழ்க்­கைக்கும் முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்க முடியும். அது நடக்­க­வில்லை.

தமி­ழி­னியின் இறுதி நிகழ்வின் போதே பல­ருக்கு பரந்தன் சிவ­புரம் கிராமம் தெரிய வந்­தது. அங்கு மக்கள் படு­கின்ற அவலம் தெரி­ய­வந்­தது.

இறந்த உட­லுக்கு மலர் மாலை அணி­விப்­ப­திலும், இரங்கல் உரை ஆற்­று­வ­தற்கும் காட்­டிய ஆர்­வத்தை இருக்­கின்றபோது காட்ட வில்லை என்­பதே எல்­லோ­ரதும் விமர்­சனம். அவ­ரது இறுதி நிகழ்வில் கலந்­து­கொண்­டது, உரை நிகழ்த்­தி­யது விமர்­ச­னத்­திற்­கு­ரி­யது அன்று. ஆனால் இருக்­கின்றபோது எவரும் திரும்பி பார்க்­க­வில்லை என்­பதே அனை­வ­ரி­னதும் ஏக்­க­மாகும்

தமி­ழி­னியின் இறுதி நிகழ்வை மண்­ட­பத்தில் நடத்த வேண்டும் அதனை பெரி­ய­ளவில் செய்ய வேண்டும் என்று பல பிர­தி­நி­திகள் தமி­ழி­னியின் குடும்­பத்­திடம் கோரி­யி­ருக்­கின்­றனர். ஆனால், அதனை அவ­ரது சகோ­த­ரர்கள் மறுத்து விட்­டார்கள். காரணம் புனர்­வாழ்­வுக்குப் பின் தமி­ழினி வாழ்ந்த வாழ்க்கை வெளியில் தெரிய வேண்டும் என்­ப­தற்­கா­கவே.

ஒரு மிகப்­பெரும் இயக்­கத்தின் மகளிர் அர­சியல் துறைப்­பொ­றுப்­பா­ள­ராக இருந்­த­வரின் நிலை­மையே இவ்­வாறு என்றால், புனர்­வாழ்வு ­பெற்று வந்த ஆயி­ரக்­க­ணக்­கான முன்னாள் போரா­ளி­களின் நிலை­மை­களை எண்­ணிப்­பா­ருங்கள்.

இறந்த பின்பு ஓடோடி வந்து அவ­ரோடு பழ­கி­யி­ருக்­கின்றோம்.

அவரை சந்­தித்­தி­ருக்­கின்றோம். அவர் அப்­ப­டி­யா­னவர், இப்­ப­டி­யா­னவர் என்­றெல்லம் பேசி மரண வீட்டில் தங்­களின் அர­சி­யலை செய்­கின்­ற­வர்கள், இருக்­கின்றபோது எத­னையும் செய்­ய­வில்லை என்­பதே தமி­ழி­னியின் குடும்­பத்­தி­னரின் வேத­னை­யாக இருக்­கி­றது.

இந்த வீடும் தமி­ழி­னியின் வாழ்க்­கையும் இனி­யா­வது பலரின் மன­சாட்­சி­களை தட்­டி­யெ­ழுப்­புமா? அது பல ஆயி­ரக்­க­ணக்­கான முன்னாள் போரா­ளி­களின் வாழ்வில் மாற்­றத்தை கொண்டு வருமா? அல்லது இந்த மரண வீட்டு அரசியல்தான் தொடரப் போகிறதா?

மு.தமிழ்ச்செல்வன்

வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல