வியாழன், 8 அக்டோபர், 2015

பேஸ்புக் புரொபைலில் வீடியோ வசதிகள்..!

உலகின் பெரும்பாலானோர் புழங்கும் சமூக வலைதளமாகி விட்ட பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்ற நிலையில் தற்போது, பேஸ்புக் பயனர் களுக்கு புது விதமான அனுபவத்தை வழி வகுத்து கொடுத்துள்ளது.அதாவது இதற்கு முன்னர் பேஸ் புக்கில் profile picture ஒரு தனி படமாக பதிவேற்றம் செய்யும் வகையாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது அசையும் 7 வினாடி வீடியோக்களை profile picture ஆக பதிவேற்ற முடியும்.



மேலும் சுமார் ஐந்து புதிய சிறப்பான மாற்றங்களை பேஸ்புக் தமது பயனாளர்களுக்கு அறிமுகப் படுத்த இருக்கிறது. இவற்றை ஏற்கனவே சில பயனாளர்களை பயன் படுத்த வைத்து முயற்சித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளாக இயங்கிவரும் பேஸ்புக் ஸ்மார்ட்போனில் இதனைப் பயன் படுத்துவோருக்கும் சேர்த்து எளிமையான இனிமையான அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக About (குறிப்பு) பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. அதிகம் பேர் ரசித்த முந்தைய சுயவிவர படங்களை புதிய படத்துக்கு மேலேயே இணைத்து பின் செய்யும் வசதியையும் இத்துடன் கொண்டுவந்துள்ளது.

நம்மைப் பற்றிய சுய விவரக் குறிப்பில் (Bio) 100 எழுத்துக்களைச் சேர்க்கவும் மொபைல் போனுக்கு ஏற்றவாறு சுயவிவரப் படத்தை பக்கத்தின் நடுவில் வைக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது. அத்துடன் புகைப்படங்களை வைக்கும் பகுதியை அதிகரித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல