அரசியல் ரீதியான குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டமும்சரி, அவசரகாலச் சட்டமும்சரி, அரசியல் ரீதியான குற்றம் புரிந்தவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே அத்தகைய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகள் அல்ல என்று கூறுபவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது என்று தெரியவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, அரசாங்கத் தரப்பில் இருப்பவர்கள் ஆளாளுக்கு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும், சில வேளைகளில் முரண்பட்டதாகவும் காணப்படுகின்றன. இதனால், நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கிடையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நாட்டின் அதியுயர் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்திருந்த உத்தரவாதம், கேள்விக்குறியாகியிருக்கின்றது.
முறையான விசாரணையில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இதனால், தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. முறையான நீதி விசாரணையின் மூலம் அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்படவுமில்லை. இந்த நிலையிலேயே, நீதிமன்றங்களின் ஊடாகத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.
இதன் காரணமாகவே, 'நீதியற்ற முறையில் எங்களை ஏன் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து தண்டிக்க வேண்டும்?' என்று தமிழ் அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். இது அவர்களின் நீண்ட நாளைய கேள்வியாகும். இந்தக் கேள்வியுடன் அவர்கள் நிற்கவில்லை. தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி, பல போராட்டங்கள் நடத்தியிருந்தார்கள். அவர்களுடைய கேள்விக்கு யாரும் சரியான பதிலளிக்கவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களும், அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும், பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டன. சாதாரண குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அந்தச் சட்டங்கள் கொண்டு வரப்படவில்லை.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்தனவின் ஆட்சியின் போது, தற்காலிக சட்டமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் முதலில் கொண்டு வரப்பட்டது. மூன்று ஆண்டுகளின் பின்னர் 1982 ஆம் ஆண்டு அது நிரந்தர சட்டமாக்கப்பட்டது. விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்பும், இன்னும் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சிவில் நிர்வாகத்தின் கீழ் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துகின்ற கடமைகளுக்குப் பொறுப்பான பொலிஸாருக்கு, சந்தேகத்திற்குரியவர்களைத் தேடவும், அவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்யவும், அவ்வாறு கைது செய்யப்படுபவர்களைத் தடுத்து வைப்பதற்கும் பரந்த அளவிலான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்கியிருக்கின்றது.
களவு, கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்கள், ஏமாற்றுதல் போன்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே குற்ற நடவடிக்கை கோவையின் கீழ் பல்வேறு சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. இந்தச் சட்டங்களின் மூலம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது தண்டிக்கவோ முடியாது என்ற காரணத்திற்காகவே, வரையறையற்ற அதிகாரங்களைக் கொண்ட வகையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடாக உருவகப்படுத்திய அரசாங்கம், அந்தப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், பயங்கரவாதி என்றால் யார், என்பதற்குரிய வரையறை என்ன என்ற விளக்கம் அதில் உள்ளடக்கப்படவில்லை என்று சட்ட வல்லுனர்களும் சட்டத்துறை விமர்சகர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் போன்றவையே பயங்கரவாதம் என கருதப்பட்டாலும்கூட, விரிவான பொருள்கோடல் செய்யப்படாத பயங்கரவாதிகள் என சுட்டிக்காட்டப்பட்டவர்களின் செயற்பாடுகளையும், அவர்களுக்கு உதவியாக இருந்து செயற்படுபவர்களின் செயற்பாடுகளையும் தடுப்பதற்காக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாருக்கும் ஆயுதப் படைகளுக்கும் இலங்கை அரசாங்கம் பரந்த அளவிலான அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது. இந்த அதிகாரங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாதவை என்பதையும் சட்டத்துறை விமர்சகர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், நாட்டில் ஏற்படுகின்ற அவசரமான நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்காக அவசர காலச் சட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. நாட்டின் தென்பகுதியில் அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கியிருந்த ஜேவிபியினரை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கையின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தபோது, 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஜேவிபியினருடைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த அவசரகாலச்சட்டத்தின் அதிகார பலத்தைக் கொண்டுதான், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜே.வி.பி.யினருடைய ஆயுதக் கிளர்ச்சியை நசுக்கியிருந்தார். சந்தேக நபர்களைக் கைது செய்து நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்கவும், அவர்களைச் சித்திரவதை செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை வலிந்து காணாமல் போகச் செய்யவும் இந்த அவசரகாலச் சட்டம் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு வரையறையற்ற வகையில் அதிகாரங்களை வழங்கியிருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டே, ஜே.வி.பி.யின் ஆயுதப் போராட்டத்தை அந்த அரசு அடித்து நொறுக்கிப்போட்டது,
அவசரகாலச் சட்டம் மாதம் ஒரு தடவை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நியதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலம் முடிவடைந்து நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறை உருவாக்கப்பட்டு, சிறிமாவே பண்டாரநாயக்காவின் புதல்வி சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்தபோது, 2001 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் வலுவற்றுப் போனது. இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் தலைமையிலான அரசாங்கத்தில் -பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் அவசரகாலச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீடிக்க முடியாமற்போனது. இதனால் அந்தச் சட்டம் வலுவற்றதாகியது.
ஆயினும் அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் தளர்ந்துவிடவில்லை. அவசரகாலச் சட்டத்தின் கீழ் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மேலதிக அதிகாரங்களைத் தக்கவைப்பதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் புதிய சட்டவிதிகளை அரசாங்கம் உள்ளடக்கிப் பிரகடனப்படுத்தியிருந்தது. அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட சட்டவிதிகளில் ஒன்று விடுதலைப்புலிகளைத் தடைசெய்வதாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட புதிய சட்டவிதிகளின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அனுசரணையுடன், விசேடமாகக் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பைப் பேணுவதற்காக ஆயுதப்படைகளை அழைத்து, அவற்றுக்கு உரிய அதிகாரங்களை வழங்கியிருந்தார். அத்துடன், குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அவற்றைச் செயற்படுத்துவதற்கான விசேட அதிகாரங்களையும் வழங்கியிருந்தார்.
இதன் காரணமாகவே வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஆயுதப்படைகள் பாதுகாப்புக் கடமைகளில் மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், ஈடுபடுத்தப்பட்டிருந்தன இன்னும் அவர்கள் அங்கு கடமையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு செயலுருவம் பெற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரை 18 மாதங்களுக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமலும், எவரையும் பார்ப்பதற்கு அனுமதிக்காமலும் தடுத்து வைத்திருக்க முடியும். அதன் பின்னர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக, அந்த சந்தேக நபர்களைத் தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் இருக்குமானால், பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவுக்கமைய மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தடுப்புக் காவல் உத்தரவை நீடித்துக் கொள்ள முடியும்.
அரசுக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டுவதைக்கூட, பயங்கரவாதத் தடைச்சட்டம், சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதுகின்றது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் தண்டனையாக விதிப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது, பயங்கரவாதி ஒருவர் பற்றிய தகவலைத் தெரிந்திருக்கும் ஒருவர் அதனை ஆயுதப்படையினருக்கோ, பொலிஸாருக்கோ தெரிவிக்கவில்லை என கண்டால் அவர் குற்றம் செய்தவராகக் கருதி, அவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க முடியும், பயங்கரவாதி ஒருவர் ஒருவருடைய வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தார் என தெரிந்தால், பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக அந்த வீட்டுக்காரருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை அளிப்பதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் பரிந்துரைக்கின்றது.
இந்தச் சட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட போதிலும், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் மீது அதிலும் விசேடமாக தமிழ் இளைஞர், யுவதிகள் மீதே அரச படைகளினால் பிரயோகிக்கப்படுகின்றது. இதனால் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் பொதுமக்கள் என தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் திட்டமிடப்பட்ட வகையில் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் இனம் தெரியாத வகையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடூரம் குறித்து விபரித்திருக்கின்றார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களினால் முறையான ஆவணப் பதிவுகளின் ஊடாக, விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற சந்தேக நபர்கள், சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், விசாரணை என்ற பெயரில் அவர்களில் குறிப்பிட்ட நபர்களை இராணுவ முகாமுக்கு விசாரணை என்ற போர்வையில் கொண்டு சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கொண்டு செல்லப்படுபவர்கள் தொடர்பில் விளக்கமறியல் சிறைச்சாலையும் பொறுப்பேற்பதில்லை. நீதிமன்றமும் பொறுப்பு கூறுவதில்லை என்பதையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இவ்வாறு பல வகைகளிலும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த – பயன்படுத்தப்பட்டு வருகின்ற பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களே இப்போது சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக வாடுகின்றார்கள்.
யுத்தமோதல்களுக்குக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது, அழிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களுடைய ஆயுதச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டன. நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவசரகாலச் சட்டமும் நீக்கப்பட்டிருக்கின்றது. (அவசரகாலச் சட்டத்தின் சில சட்ட விதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இப்போது உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்பது வேறு விடயம்) இந்த நிலையிலேயே, பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்களை, பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோரியிருக்கின்றார்கள்.
பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
ஆறு நாட்களாகத் தொடர்ந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டும் வகையில் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கிடையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். இதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகள், சாகும் வரையிலான தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டிருந்தார்கள்.
இந்த நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் பற்றியும், அவர்களை விடுதலை செய்வது பற்றியும் பல்வேறு கருத்துக்களை அரச தரப்பினரும் மற்றவர்களும் வெளியிட்டு வருகின்றார்கள்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கு எதிராக, ஆதாரபூர்மவமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியாத நிலையிலேயே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இருக்கின்றார்கள். அவ்வாறான ஆதாரங்கள் இருக்குமேயானால், அவர்களுக்கு எதிரான ,குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்திருப்பார்கள். ஏனென்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற ஒருவருக்கு எதிராக ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்தால் அவருக்கு அதியுச்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதற்கு அந்தச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கும்போது, அந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டி, வழக்கு தாக்கல் செய்வத்றகுப் படையினருக்கு ஏன் முடியாமல் இருக்கின்றது? சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக் குற்றங்களைச் சாட்டி, அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை விடுத்து, அவர்களை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து அரசாங்கம் இம்சித்துக் கொண்டிருப்பதற்கான காரணம்தான் என்ன?

குற்றம் புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குற்றம் செய்திருக்கின்றார்களா என்பதை நிரூபிக்க வேண்டியதும், அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டியதும் அவர்களைக் கைது செய்தவர்களின் பொறுப்பாகும். அவ்வாறு நிரூபிக்காவிட்டால் - குற்றம் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்க முடியாவிட்டால், அவர்களை விடுதலை செய்வதே பொறுப்புள்ளதோர் அரசாங்கத்தின் கடமையாகும். அந்தக் கடமையைச் செய்யத் தவறுகின்ற அரசு நீதி வழங்குவதற்குப் பதிலாகக் கொடுமை செய்கின்றது என்றே கருத வேண்டும்.
அரசியல் ரீதியான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை, அரசியல் கைதிகள் என ஏற்றுக்கொள்வதற்கு பிடிவாதமாக மறுக்கின்ற அரசாங்கத் தரப்பினர் அவர்களை சாதாரண சட்டங்களின் கீழ் விசாரணை செய்து குற்றமற்றவர்கள் அல்லது குற்றம் செய்திருக்கின்றார்கள் என்று வகைப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.
சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. நாட்டில் நீதித்துறை நடைமுறைகளுக்கு அமைவாகவே அவர்களுடைய விவகாரம் கையாளப்படும் என்று அரசு கூறுகின்றது. இந்த வகையில் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாட்டின் பிரதமர் தலைமையில் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
ஆனால் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அவ்வாறு பிணையில் செல்வதற்கு தமிழ் அரசியல் கைதிகளை அனுமதிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்ற தோரணையில், தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகளிடம், அவர்களுடனான ஒரு சந்திப்பில் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த அதிகாரிகளின் கருத்தின்படி, தமிழ் அரசியல் கைதிகளில் 70 பேருக்கு மாத்திரமே பிணை வழங்க முடியும் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
அதேநேரம் கொழும்பு நீதிமன்றம் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு சட்டமா அதிபருடைய உத்தரவு அல்லது ஆலோசனைக்கு அமைவாகவே பிணை வழங்க முடியும் என்று பகிரங்கமாகக் கூறியிருக்கின்றது. நிலுவையில் உள்ள வழக்குத் தவணைக்காக, நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட சில தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தபோதே அந்த நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிறைச்சாலை ஆணையாளர் ரேகாண புஸ்பகுமார, குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் ஒருவர்கூட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மட்டும்தான் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் எதிராக ஏன் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்பதற்கு அவரிடமிருந்து விளக்கமில்லை. அவர் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, தண்டனை விதிக்கப்பட்ட 48 கைதிகளும், வழக்குகள் நிலுவையில் உள்ள – வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 116 கைதிகளுமே சிறைச்சாலைகளில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருப்பதாக அரசாங்கம் கூறியிருக்கின்றது. ஆனால் சிறைச்சாலை ஆணையாளரின் கூற்றுப்படி 164 கைதிகளே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் மிகுதி கைதிகள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையிலும் குளறுபடியான நிலைமையே காணப்படுகின்றது. நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் 273 தமிழ் அரசியல் கைதிகள் இருப்பதாக, அரசாங்கம் தமக்குத் தகவல் தெரிவித்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் 217 தமிழ் அரசியல் கைதிகளே சிறைச்சாலைகளில் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்மையான எண்ணிக்கை என்ன என்பது தெளிவற்றதாகவே இருக்கின்றது. இதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
நாட்டில் உருவாகிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான நடைமுறைகளையும் அதிகாரங்களையும் கொண்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்து அதனைச் செயற்படுத்திய ஆட்சியாளர்கள், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சிறைக்கைதிகளாக இருப்பவர்கள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் பொதுமன்னிப்பின் கீழ் வெளியில் வந்தாலும், சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு இசைவாக்கமடைவதற்கே பல மாதங்கள் எடுக்கும். சிலருக்கு வருடக்கணக்காகவும் ஆகலாம். அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள எவரும் அரசியல் கைதிகளாக அரசாங்கத்தின் சிறைச்சாலைகளில் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவும் உதவி புரிந்தவர்களே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சிறைச்சாலைகளில் இருக்கின்ற 217 அல்லது 273 தமிழ் அரசியல் கைதிளும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டால், மீண்டும் நாட்டில் அரசாங்கமும் அரச படைகளும் அஞ்சுகின்ற வகையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. அதற்கான மன வலிமையும், உடல் வலிமையும் அவர்களிடம் கிடையாது. சிறைச்சாலை வாழ்க்கை அத்தகைய சக்தி எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்துவிட்டு, அவர்களை வெறும் கோதாகவே வைத்திருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், பல வருட சிறைவாழ்க்கை வாழ்ந்துள்ள அவர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களை மனிதாபிமான அடிப்படையில், தமிழ் மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் சம்பாதிக்கின்ற வகையில் அரசாங்கம் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்.
இதற்கான உறுதியான நடவடிக்கையை நாட்டில் நல்லாட்சியை உருவாக்கியதாகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது இன்றைய அரசியல் சூழலில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சுமுகமானதோர் அரசியல் உறவின் ஆரம்பமாக, ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கின்றது என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனங்கொள்வது நல்லது.
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக